Monday, January 29, 2024

மருள்-தினம் ஒரு மூலிகை

 


*மருள்*.   கற்றாழை இனத்தில் குறுகிய குறுக்கு வழியுள்ள கனமான மடல்களை உடைய செடி சாலை ஓரங்களில் தரிசு நிலங்களிலும் அடர்ந்து வளர்ந்து கிடக்கும் இதன் மடல் கிழங்கு ஆகியவை மருத்துவ குணம் உடையது மலமிளக்குதல் பசி மிகுதல் உடல் தேற்றுதல் சளி அகற்றுதல் இதய நோய் தணித்தல் குருதி வெப்புத்தணித்தல் ஆகிய மருத்துவ குணம் உடையது மடலை வாட்டி பிழிந்த சாரை காதுகளில் விட காது வலி சரிப்படும் மடலை வாட்டி பிழிந்த சாறு பத்து அல்லது 15 துளி தாய்ப்பாலுடன் கொடுக்க தொண்டை பகுதியில் தேங்கிய சளியை வெளியேற்றும் மருள் கிழங்கை அரைத்து ஐந்து கிராம் அளவாக பாலில் கலக்கி வடிகட்டி காலை மாலை கொடுக்க குருதி வெப்பை தணிக்கும் நாள் பட்ட இருமல் மூலம் கரப்பான் வண்டுக்கடி நீர்விடாய் இதய நோய் கணுச்சூலை ஆகியவை குணமாகும் நன்றி.

No comments:

Post a Comment