Sunday, January 21, 2024

கலங்களை (பாத்திரம்) கழுவ உதவும் பொடி

பண்டைய காலங்களில்  சூழலோடு ஒத்து வாழ ஒவ்வொரு செயலையும் கவனமாக நம் முன்னோர்கள் பின்பற்றி வந்தனர்.*


*கழுநீர்,வைக்கோல் தவிடு உண்ணும் மாடுகள், டிராக்டர் போல் அது எரிபொருளை தின்று தானும் சூடாகி சூழலை சிதைக்காமல் பல்வேறுப் பயன்களை அளிக்கிறது.*


*அவற்றில் மிகச் சிறப்பான ஒன்று *பசுஞ்சாண சாம்பல் பொடி*


*கலம் என்பதே பாத்திரம் என்பதிற்குத் தூயத் தமிழ் சொல்லாகும்.*


*பசுஞ்சாணம் எரிபொருள் சாம்பல் சாதாரண கலங்களையும், புளியானது வெண்கலங்களையும்   துலக்கப் பயன்பட்டப் பொடியாகும்*.


 *மேற்கண்ட முறை இந்தியா போன்ற வெப்ப நாட்டிற்கு ஏற்றது*


*நீர் மற்றும் நிலத்தை காத்து மாசுபாட்டைத் தடுக்க வேதிப்பொடிகளைத் தவிர்த்து *பசுஞ்சாண சாம்பல் பொடியைப் பயன்படுத்தி பொருளாதார இழப்பையும் தவிர்த்து சேமிப்பை அதிகரிக்க இன்றிலிருந்து உங்கள் சமையல் அறையிலிருந்து மாற்றத்தைத் தொடங்குங்கள்*


நன்றி

No comments:

Post a Comment