Friday, January 12, 2024

சோம்பு (அ) பெருஞ்சீரகம்- தினம் ஒரு மூலிகை

*சோம்பு (அ) பெருஞ்சீரகம்*  வணிக ரீதியாக பயிரிடப்படும் சிறு செடி இதன் விதை வெண் பச்சை நிறத்துடன் மனம் உள்ளதாக இருக்கும் பெருஞ்சீரகம் என்றும் அழைக்கப்படும் பல சரக்கு கடைகளில் கிடைக்கும் இதன் வேர் பூ விதை மருத்துவ குணம் உடையது பசி தூண்டுதல் வயிற்று வாயு அகற்றுதல் மலச்சிக்கல் தீர்த்தல் தடிப்பு உண்டாக்குதல் ஆகிய குணம் உடையது பெருஞ்சீரகப் பொடி ஒரு கிராம் அளவாக சிறிது சர்க்கரை சேர்த்து காலை மதியம் மாலை கொடுத்து வர செரிமானமின்மை பெருமை வயிற்று வலி ஆகியவற்றை குணப்படுத்தி மலத்தை வெளியேற்றும் இது குழந்தைகளுக்கு மிக சிறந்த குணத்தை கொடுக்கும் ஒரு கிலோ பெருஞ்சீரகம் தை 10 லிட்டர் வெந்நீரில் ஓர் இரவு ஊற வைத்து வாலையியிட்டுத் தீநீர் வாங்கி (சோம்புத்தீநீர்)30-50மிலி அளவாக கருவுற்ற பெண்ணிற்கு கொடுத்து வர மலஜலத்தை முறைப்படி போக்கி உடல் பளுவை குறைக்கும் பெருஞ்சீரக பூவை தீநீராக்கி வயதுக்கு தக்க அளவு குழந்தைகளுக்கு கொடுத்து வர கழிச்சல் வயிற்று பெருமல் வயிற்றுப்புழு ஆகியவை தீரும் நன்றி.

No comments:

Post a Comment