Sunday, January 21, 2024

நல்லவர்களைத் தேடா‌தீ‌ர்க‌ள்

உழைக்காமல்

பணக்காரனாக விரும்பும் யாரும்  அறிவாளி அல்ல.


_லாட்டரி_

_டிக்கட்டுகளை_ _நம்புகிறவர்கள்,_

_சினிமாவில்_ _வருவது போல் முதல் காட்சியில் ஆட்டோ ஓட்டி_ _விட்டு அடுத்தக் காட்சியில் பென்ஸ்_ கார் _ஓட்டும் கதாநாயகனைப் போல ஆக_ _விரும்புகிறவர்கள்,_


_*அதிர்ஷ்டத்தால்*_

_*முன்னுக்கு வர ஆசைப்படுகிறவர்கள்,*_


_கோவில் கோவிலாகச் சுற்றி வந்தால் கடவுள்கள் எல்லாம் போட்டி போட்டுக் கொண்டு ஏதாவது கொட்டிக் கொடுக்கும் என்று நம்புகிறவர்கள்._


_*இவர்கள் பட்டியலில்*_

_*உங்கள் பெயர் இருக்கிறதா.*_

_*தயவு செய்து*_

_*வெளியே வாருங்கள்.*_

_*உழைக்காமல் முன்னேற முடியாது.*_


_உழைக்காமல்_

_தற்காலிகமாக மேலே வந்தவர்_

_ஒரு போதும் நிலைக்க முடியாது._ _புரிந்துக் கொள்ளுங்கள்._

_உழைப்பு என்றதும் கல் உடைப்பது, உழுவது,_ _கஷ்டப்பட்டு பாரம் சுமப்பது என்று பொருள் கொள்ள வேண்டாம்._ 

_பாடுபடுவது,_

_சிரமங்களை மகிழ்வுடன் ஏற்பது,_


_*சினிமா, சீட்டு, , சிகரெட்டு என்கிற இளவயது இன்பங்களில் தன்னைத் தொலைக்காமல் பல மணி நேரம் படிப்பது கூட உழைப்பது தான்.*_


_பல மைல் பயணித்து பள்ளிக்கும் கல்லூரிக்கும் போய் வருவது கூட உழைப்புத் தான்._


_*சோம்பி இராத*_

_*சுகம் தேடாத*_ _*எல்லா*_ _*முயற்சிகளும் உழைப்புத் தான்.*_


_இப்படி உழைத்தவர்கள் தான்_

_உயரமான இடங்களில்_ _பின்னர் உட்கார்ந்தவர்கள்._


_*கடின உழைப்பு வெற்றியைத் தராவிட்டாலும்,*_

_*வெற்றிக்கான வாய்ப்பை நிச்சயம்*_ _*அதிகப்படுத்தும்.*_


_வாழுகின்ற வாழ்க்கை_

_வெறுப்பாக_ _இருக்கிறதே என்று வேறொன்றைத்_ _தேடாதே, அது வேதனையாகத்தான் இருக்கும்._


_*நிம்மதி என்பது இருப்பதில்*_ _*திருப்திபடுவது தானே தவிர இல்லாததிலும்*_ _*இழந்ததிலும்*_

_*தேடுவதல்ல.*_


_சமுதாயத்தில்_

_நல்லவர்களைத் தேடாதீர்கள்._

_மாறாக_

_நீங்களே_ _நல்லவர்களாக இருங்கள்._


_*சிறந்ததைத்*_ _*தேடுபவர்கள்*_

_*தேடிக்*_ _*கொண்டுதான் இருக்கிறார்கள்.*_ _*கிடைத்ததை சிறந்ததாக்குபவர்கள்*_

_*சந்தோசமாக*_

_*வாழ்ந்துக்*_ _*கொண்டுதான்*_

_*இருக்கிறார்கள்.*_

No comments:

Post a Comment