Wednesday, April 24, 2024

இன்றைய நாளில் பிறந்தவர்கள்

 இன்றைய நாளில் பிறந்தவர்.*


(24-ஏப்)

*ஜி.யு.போப்.*


✍ ஏராளமான தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்து தமிழுக்கு தொண்டாற்றிய ஜார்ஜ் உக்லோ போப் 1820ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி கனடாவின் பிரின்ஸ் எட்வர்ட் தீவில் பிறந்தார்.


✍ இவர் 1839ஆம் ஆண்டு சமயப் பணிக்காக தமிழகம் வந்தார். தஞ்சை, உதகமண்டலம், பெங்களூரில் சமயப் பணியோடு, கல்விப்பணி, தமிழ்ப்பணியையும் மேற்கொண்டார்.


✍ 1886ஆம் ஆண்டு திருக்குறளை Sacred Kural என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தார். இதேபோல் பல நூல்களை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்துள்ளார். தமிழுக்குப் பெரும் தொண்டாற்றிய ஜி.யு.போப் 1908ஆம் ஆண்டு மறைந்தார்.



*சச்சின் டெண்டுல்கர்.*


🏆 உலக புகழ்பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர், சச்சின் டெண்டுல்கர் 1973ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி மும்பையில் பிறந்தார்.


🏆 இவர் முதன்முதலாக 15-வது வயதில் மாநிலங்களுக்கு இடையேயான போட்டியில் விளையாடி 100 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தானுக்கு எதிராக களம் இறங்கி, 16-வது வயதில் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கினார்.


🏆 டெஸ்ட் போட்டியில் 10க்கும் மேலும், ஒருநாள் போட்டியில் 50க்கும் மேலும் ஆட்ட நாயகன் விருது பெற்றார். மேலும் பல தொடர் நாயகன் விருதுகளையும் பெற்றுள்ளார்.


🏆 உலகக்கோப்பை (1996) போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமைக்குரியவர். 2012ஆம் ஆண்டு மாநிலங்களவை நியமன உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2014ஆம் ஆண்டு இவரது பிளேயிங் இட் மை வே என்ற சுயசரிதை நூல் வெளிவந்தது. இவர் 200-வது டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெற்றார்.


🏆 இவர் பத்ம விபூஷண், பத்மஸ்ரீ, அர்ஜுனா, பாரத ரத்னா, ராஜீவ்காந்தி கேல் ரத்னா, இந்திய விமானப் படையின் கௌரவ கேப்டன் என ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார்.



*ஜெயகாந்தன்.*


💪 சிறந்த எழுத்தாளர் ஜெயகாந்தன் கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம் என்ற ஊரில் 1934ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி பிறந்தார்.


💪 இந்திய அரசின் இலக்கியத்திற்கான உயர்ந்த விருதான ஞான பீட விருதைப் பெற்ற இரண்டாவது தமிழ் எழுத்தாளர்.


💪 இவருடைய படைப்பிலக்கியக் களம் சிறுகதைகள், புதினங்கள், கட்டுரைகள், திரைப்படங்கள் எனப் பரந்து இருக்கின்றது. இவர் ஏப்ரல் 8ஆம் தேதி 2015ஆம் ஆண்டு மறைந்தார்.

No comments:

Post a Comment