Saturday, April 20, 2024

மனதை அமைதி படுத்துவது எப்படி?

 *நமக்கு நெருக்கமானவர்கள் நம்மை விட்டு விலகும் போது மனதை அமைதி படுத்துவது எப்படி? மீண்டு வருவது எவ்வாறு?*


நெருக்கமானவர்கள் விலகுவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன எனக்கு தெரிந்தவரை .


சந்தர்ப்ப சூழ்நிலைகளால் விலகுதல்

விலகுவதற்கான சூழ்நிலையை உருவாக்கி விலகுதல்

சந்தர்ப்ப சூழ்நிலைகளால் விலகுதல்


இவர்கள் பற்றி பார்க்கும் போது , உண்மையிலேயே நம் மீது அன்பாக இருந்திருப்பார்கள் , அழகான நினைவுகளை தந்திருப்பார்கள். எங்கள் நலனில் அக்கறையாக இருந்திருப்பார்கள் , எங்களை நோகடிக்க விரும்பியிருக்க மாட்டார்கள். ஆனாலும் ஏதோ ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையால் அவர்கள் விலக வேண்டி உள்ள சந்தர்ப்பத்தில் , அவர்களின் சூழ்நிலையைப் புரிந்து கொண்டு அவர்களை வழியனுப்பி விடுவது தான் உண்மையிலேயே சரியானது.


இது அதிகமான காயத்தைக் கொடுக்கும் தான். ஆனாலும் அந்த உண்மையை ஏற்றுக்கொண்டு தான் ஆகவேண்டும். விலகியவரிடம் அதற்கு பின்னர் எந்தவித தொடர்பையும் ஏற்படுத்திக் கொள்ளாமல் இருப்பது தான் அவருக்கும் நல்லது , நமக்கும் நல்லது.


விலகுவதற்கான சூழ்நிலையை உருவாக்கி விலகுதல்


இவர்கள் பற்றி பார்க்கும் போது ,


எம்மிடம் ஏதோவொரு தேவை இவர்களுக்கு இருந்திருக்கும். பணத்தேவையோ , அன்புத்தேவையோ…அந்தத் தேவை தீர்ந்ததும் அவர்கள் விலகி விடுவார்கள்.


இப்படியான சூழ்நிலை வலியைக்கொடுத்தாலும் அதிகம் கோபத்தையும் வரவைக்கும் , மனிதர்களில் நம்பிக்கை இல்லாத் தன்மையையும் உருவாக்கும். இவர்களிலா போயும் போயும் அன்பைக்கொட்டினோம் ? என்று எங்களை நாங்களே குற்றவாளி ஆக பார்க்கும் நிலைமையும் உருவாகும். அதிகம் மன அழுத்தத்தை கொடுக்கும்.


இப்படி விலகிப் போகின்றவர்களிடம் நாம் செய்ய வேண்டியது யாதெனில்…. அவர்களை ஒரு பொருட்டாகவே கருதாமல் நாமே அவர்களை விலக்கி விடுவது…


என்ன தான் சொன்னாலும்…. நெருக்கமானவர்கள் விலகிப்போனால் மனசு வலிக்கும் தான். ஆனால் காலம் சிறந்த மருந்து. அது எல்லாக்காயத்தையும் போக்கும். நமக்கான அன்பை நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கும் காலம் கடந்தாலும்….


எனவே விட்டு விலகியவர்களை நினைத்து வாழ்க்கையை நரகமாக்காமல் நமக்குக்கிடைத்த ஒரேயொரு வாழ்க்கையை வாழவேண்டும் என்பது தான் புத்திசாலித்தனமானது.

No comments:

Post a Comment