Sunday, April 21, 2024

தக்காளி பிரியாணி!

தேவையான பொருட்கள்: 

2 ½ கப் பசுமதி அரிசி  

6 தக்காளி

2 பெரிய வெங்காயம்

½ தே.க மஞ்சள் தூள் 

2 மே.க மிளகாய் தூள் 

2 மே.க பாவு பாஜி மசாலா

1 இஞ் இஞ்சி 

3 பூண்டு

கொத்தமல்லி

1 உருளைக்கிழங்கு

1 கைபிடி பட்டாணி

½ சிவப்பு குடைமிளகாய்

½ மஞ்சள் குடைமிளகாய்

½ பச்சை குடைமிளகாய்

நெய் / எண்ணை (தேவையான அளவு)

உப்பு (தேவையான அளவு)

தண்ணீர்(தேவையான அளவு)


செய்முறை: 

முதலில் அரிசியை தண்ணீரில் கழுவி, குறைந்தது 20 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைத்து வைத்துக் கொள்ளவும். 


2 தக்காளி, இஞ்சி மற்றும் உள்ளி ஆகியவற்றை விழுதாக அரைக்கவும்.


ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும் சின்னச்சீரகம் போட்டு,அதன் பின் அதில் வெங்காயத்தை சேர்த்து, நன்கு பொன்னிறமாக வதக்கவும் (பாவு பாஜி மசாலா சேர்க்காமல் செய்வதென்றால் கறுவா ,கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ மற்றும் பிரியாணி இலை ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும்). 


அத்துடன் தக்காளி விழுது மற்றும் வெட்டிய தக்காளியைச் சேர்த்து நன்கு வதக்கவும்.


அடுத்தாக தக்காளி நன்கு மென்மையாக வதங்கியதும், மஞ்சள் தூள், மிளகாய் தூள், பாவு பாஜி மசாலா / கரம் மசாலா சேர்த்து நன்கு கிண்டி விட வேண்டும். 


அடுத்தாக உருளைக்கிழங்கு, பட்டாணி, குடைமிளகாய் மற்றும் உப்பு சேர்த்து நன்கு 5 நிமிடங்கள் வதக்கவும்.


பின்பு அதில் அரிசியை சேர்த்துக் கிண்டி, 3 ¾ தண்ணீரை ஊற்றி, பாத்திரத்தை மூடி அவிய விடவேண்டும். தண்ணீர் அரிசியளவு வந்ததும், அடுப்பை அணைத்து, 15 நிமிடங்கள் அடுப்பிலேலே  விடவும்.அதன் பின்பு கொத்தமல்லி சேர்த்து கிண்டவும்.


சுவையான  தக்காளி பிரியாணி தயார்!


குறிப்பு*:

மேலே குறிப்பாடுள்ள செய்முறை மின்சார அடுப்பில் செய்யும் செய்முறை.


1 கப் அரிசிக்கு 1 ½ கப் தண்ணீர் சேர்க்க வேண்டும்.


விரும்பினால் தயிர் அல்லது தேங்காய்ப்பால் சேர்த்தும் தக்காளி பிரியாணி செய்யலாம். எவ்வளவு தயிர் அல்லது தேங்காய்ப்பால் சேர்க்கப்படுதோ, அந்த அளவு தண்ணீர் குறைக்க வேண்டும்.


பிரசர் குக்கரில் செய்வதென்றால், 2 விசில் விட்டு இறக்க வேண்டும்.


பாவு பாஜி மசாலாக்கு பதிலாக ½ மே.க கரம் மசாலா, 1 துண்டு கறுவா, 5 கிராம்பு, 5 ஏலக்காய், 1 அன்னாசிப்பூ, 1 பிரியாணி இலை சேர்த்து செய்யலாம்.


விரும்பினால் புதினா மற்றும் பச்சைமிளகாய் சேர்த்தும், குடைமிளகாய் தவிர்த்தும் தக்காளி பிரியாணி செய்யலாம்.

No comments:

Post a Comment