Tuesday, April 23, 2024

செய்தித் துளிகள் - 23.04.2024 (செவ்வாய்க்கிழமை)

*கனவு ஆசிரியர் விருது* பெற்றவர்களுக்கு வெளிநாடு  சுற்றுலா (1 முதல் 55 வரை தேர்வு பெற்றவர்கள் பின்லாந்து மற்றும் ஸ்வீடன்

👉உள்நாட்டு அளவில்  (56 முதல் 380 வரை தேர்வு பெற்றவர்கள்) டேராடூன்- பகுதிக்கு  ஏப்ரல் 26 மற்றும் 27 ஆம் தேதிகளில் சுற்றுலா அழைத்து செல்லுதல் சார்ந்து பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு.

 (விருது பெற்ற ஆசிரியர்கள் பட்டியல் வெளியீடு)

🍒🍒பள்ளிக் கல்வித் துறைக்கு அலகு விட்டு அலகு மாறுதல் பெற்ற ஆசிரியர்களை 31.05.2024 அன்று பணிவிடுவிப்பு செய்ய தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு

🍒🍒தமிழ்நாடு முழுவதும் தனியார் பள்ளிகளில் RTE மூலம் 25% மாணவர் சேர்க்கைக்கு நேற்று முதல் மே மாதம் 20ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 

www.tnschools.gov.in என்ற முகவரியில் விண்ணப்பித்ததும் பெற்றோரின் மொபைல் எண்ணிற்கு SMS அனுப்பப்படும். அதிக அளவில் விண்ணப்பங்கள் வந்தால்,குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

🍒🍒சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது:

கோடை விடுமுறையில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் எந்தவித சிறப்பு வகுப்புகளும் நடத்தக்கூடாது

-பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

🍒🍒இம்மாதம் வருமான வரி பிடித்தம் தானாக கணக்கீடு செய்யப்பட்டு உள்ளது.  எவ்வாறு கணக்கீடு என்பதை புரிந்து கொள்ள இயலவில்லை.

New Regime/Old Regime select செய்த அனைவருக்கும் பிடித்தம் வருகிறது.  உங்களது கணக்குகளை சரி பார்த்துக் கொள்ளுங்கள்.  Income Tax கணக்கீடு தெரிந்து கொண்டு பில் தயார் செய்து கொள்ளுங்கள்.! மறக்கமால் ஒவ்வொரு ஆசிரியரும் தனியாக IT பிடித்தம் செய்வதை குறித்து வைத்து கொள்ளுங்கள்.  ஒவ்வொரு மாதமும் வருமான வரி பிடித்தம் மாறலாம்.

🍒🍒இளங்கலை படிப்புகளில் சேர ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி திட்டம்: சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு.

🍒🍒4 ஆண்டு இளங்கலை பட்டம் பெற்றவர்கள் பிஎச்.டி படிப்பில் சேரலாம்.

🍒🍒இந்தியா அமல்படுத்தியுள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டம் இஸ்லாமிய மக்களின் உரிமையை பாதிக்கும் : அமெரிக்க நாடாளுமன்றம் கவலை

🍒🍒கேரளாவில் ராகுல் போட்டியிடும் வயநாடு உள்பட 20 தொகுதிகளுக்கு நாளை பிரசாரம் ஓய்கிறது: இறுதிக்கட்ட பிரசாரத்தில் வேட்பாளர்கள் தீவிரம் வெள்ளிக்கிழமை வாக்குப்பதிவு

🍒🍒எல்லா நோய்களுக்கும் சிகிச்சை பெறமுடியும்; மருத்துவ காப்பீட்டில் வயது வரம்பு நீக்கம்: புதிய ஹெல்த் இன்சூரன்ஸ் விதிகள் அறிவிப்பு

🍒🍒மக்களவை தேர்தலில் படுதோல்வியை சந்திக்க வேண்டிய நிலைக்கு பாஜகவும், அதன். கூட்டணியும் தள்ளப்பட்டுள்ளது: முத்தரசன் விமர்சனம்

🍒🍒நாடு முழுவதும் வீசும் வெப்ப அலை

நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை

🍒🍒சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் அவரது 171வது படத்திற்கு ‘கூலி’ என தலைப்பிடப்பட்டுள்ளது.

🍒🍒தமிழ்நாட்டில் 14 இடங்களில் நேற்று வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியது.

🍒🍒பாஜகவில் இருந்து கே.எஸ்.ஈஸ்வரப்பா நீக்கம்

கர்நாடக பாஜக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான கே.எஸ்.ஈஸ்வரப்பா கட்சியிலிருந்து நீக்கம்

கட்சியில் இருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கியது மாநில பாஜக தலைமை

மகனுக்கு தேர்தலில் சீட் மறுக்கப்பட்டதால் அதிருப்தியில் சுயேட்சையாக போட்டியிடுகிறார் கே.எஸ்.ஈஸ்வரப்பா

எடியூரப்பாவுக்கு எதிராக கடுமையாக அதிருப்தியை வெளிப்படுத்திய நிலையில் கட்சியிலிருந்து நீக்கம்.

🍒🍒என்னிடம் வேறு வண்டி இல்லை”  அதனால்தான் சைக்கிளில் சென்றேன் 

விஜய் போல் செய்ய வேண்டும் என்று செய்வில்லை

வாக்களிக்க சைக்கிளில் வந்தது ஏன் தொடர்பான பேச்சுக்கு

நடிகர் விஷால் பதில்

🍒🍒மக்கள் மத்தியில் மாற்றத்தை விரும்புகிறார்கள்; ஏழைகளுக்கான அரசு அமைய வேண்டும் என்பது மக்கள் விருப்பம் என மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

மக்கள் வேலைவாய்ப்புகளை கேட்கிறார்கள் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கருத்து. கர்நாடகத்தில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் 20 தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றும் என்று கார்கே நம்பிக்கை.  மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி நிச்சயம் வெற்றி பெற்று, பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றும் என்று கார்கே உறுதி அளித்துள்ளார்.

🍒🍒பாஜகவை எதிர்க்க தயங்குகிறார் பினராயி விஜயன் 

பிரியங்கா காந்தி

🍒🍒இவ்வாண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள இதுவரை 5600 பேர் முன்பதிவு செய்துள்ளனர் - ஹஜ் கமிட்டி மாநில தலைவர் அப்துல் சமது எம்.எல்.ஏ பேட்டி.

கடந்தாண்டை காட்டிலும் இவ்வாண்டு கூடுதலாக 1000 பேர் ஹஜ் பயணம் மேற்கொள்ள பதிவு செய்துள்ளனர்.

அரசின் மானியம் கடந்தாண்டு போலவே இவ்வாண்டும் வழங்கப்பட்டு வருகிறது.

🍒🍒கள்ளழகர் வைபவத்தில், ஆற்றில் இறங்க 2,400 பேரை மட்டுமே அனுமதிக்க வேண்டும் - உயர்நீதிமன்ற நீதிபதிகள்

அழகருக்கு தண்ணீர் பீய்ச்சி அடிப்பதில் பாரம்பரிய விதிகளையே கடைபிடிக்க வேண்டும் - நீதிபதிகள் தகவல்

ரசாயனம் கலந்த தண்ணீரோ அல்லது பால், தயிர் கலந்த தண்ணீரையோ அடிக்கக்கூடாது என கட்டுப்பாடு

🍒🍒சிறை கண்காணிப்பாளருக்கு கெஜ்ரிவால் கடிதம்

திகார் சிறை கண்காணிப்பாளருக்கு, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம்

நான் இன்சுலின் கேட்கவில்லை என்பது தவறான தகவல், தனது உடல்நிலை மோசமாகவில்லை என எய்ம்ஸ் மருத்துவர்கள் கூறியதாக தெரிவித்ததும் தவறானது

அரசியல் காரணங்களுக்காக இவ்வாறு செய்வதாக சிறை கண்காணிப்பாளர் மீது கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

🍒🍒சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைவு

தங்கம் ஒரு கிராம் ரூ.6,845க்கும், ஒரு சவரன் ரூ.54,760க்கும் விற்பனையாகிறது

🍒🍒கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில், சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீரர் குகேஷுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து

17 வயதில் வரலாறு படைத்துள்ளார் குகேஷ் 

சீன வீரர் டின் லிரேனுக்கு எதிரான போட்டியிலும் வெற்றி பெற  வாழ்த்து

உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வெல்லவும், குகேஷுக்கு முதலமைச்சர் வாழ்த்து

🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒

🌹🌹தமிழ்நாடு முழுவதும் தனியார் பள்ளிகளில் RTE மூலம் 25% மாணவர் சேர்க்கைக்கு நேற்று முதல் மே மாதம் 20ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 

www.tnschools.gov.in என்ற முகவரியில் விண்ணப்பித்ததும் பெற்றோரின் மொபைல் எண்ணிற்கு SMS அனுப்பப்படும். அதிக அளவில் விண்ணப்பங்கள் வந்தால்,குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

👉ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கும் குறைவாக உள்ள குழந்தைகள், வாய்ப்பு மறுக்கப்பட்ட குழந்தைகள் உரிய சான்றுகளுடன் விண்ணப்பிக்கலாம்.

👉எல்கேஜி வகுப்பில் சேர்வதற்கு குழந்தைகள் 2020 ஆகஸ்ட் 1 ம் தேதி முதல், 2021 ஜூலை 31ம் தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும்.

👉முதல் வகுப்பில் சேர உள்ள குழந்தைகள் 2018 ஆகஸ்ட் 1ம் தேதி முதல், 2019 ஜூலை 31ம் தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும்.

👉மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்கள் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்கள் வட்டார வள மைய அலுவலகங்கள் உள்ளிட்டவற்றில் இணைய வழியில் விண்ணப்பிப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

👉பெற்றோர்கள் தங்களின் வீடுகளில் இருந்து 1 கிலோ மீட்டருக்கு உட்பட்டு அமைந்திருக்கக் கூடிய தனியார் பள்ளிகளுக்கு 25 சதவீதம் இட ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கலாம்.

👉தகுதியான விண்ணப்பம் ஏற்கப்பட்ட விபரத்தையும், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்காக விபரத்தையும் மே 27ம் தேதி இணையதளத்தில் வெளியிட வேண்டும்.

👉தனியார் பள்ளிகளில் ஒதுக்கப்பட்ட 25 சதவீத ஒதுக்கீட்டிற்கு அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டிருப்பின் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்க வேண்டும்.

👉மே 28ம் தேதி குலுக்கல் நடத்தி குழந்தைகள் தெரிவு செய்யப்படுவார்கள்.                                             👉இதற்காக ஒவ்வொரு ஆண்டும் அரசால் ரூ.400 கோடி தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒

🌹🌹சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த இதை செய்யுங்கள்.


👉பொதுவாக இப்போது நாட்டில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த முடியாமல் பலர் அவதிப்படுகின்றனர் .இதற்கு என்ன சிகிச்சை செய்யலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்                           👉1.சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த ஒரு டம்ளர் நீரில் 6-8 துளசி இலைகளை சேர்த்து கொதிக்க வைத்து, அந்நீரைக் குடித்து வருவோருக்கு சுகர் கண்ட்ரோலில் இருக்கும் .

👉2.சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த இஞ்சியை ஒரு டம்ளர் நீரில் தட்டிப் போட்டு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

👉3.சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த சிறிது வெந்தயத்தை இரவு தூங்கும் முன் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்நீரைக் கொதிக்க வைத்து வடிகட்டி வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

👉4.சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த ஒரு டீஸ்பூன் பட்டைத் தூளை ஒரு டம்ளர் நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து,விடவும் .

👉5.மறுநாள் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்து வருவோருக்கு சுகர் மாத்திரையே தேவைப்படாது

👉6.சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த வேப்பிலையை மென்று சாப்பிடலாம்

7.சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த 7-8 வேப்பிலையை ஒரு டம்ளர் நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி குடிக்க வேண்டும்.

No comments:

Post a Comment