Tuesday, April 23, 2024

எது சிறப்பான வாழ்வு?

மனிதர்கள் அவர்களுக்கு கிடைத்த வாழ்க்கையை வாழ மாட்டார்கள். 


நமக்கான வாழ்க்கை இது என்று நினைக்க மாட்டார்கள். 


நமக்கான வாய்ப்பை நாம் பயன் படுத்த வேண்டும். உங்களுக்குரிய வாய்ப்பைப் பயன்படுத்தி அதனால் நீங்கள் பயன் அடைந்தவுடன் அதைத் தொடர்ந்து வரும் அடுத்த வாய்ப்பு பெரியதோ சிறியதோ என எதுவாக இருந்தாலும், 


அதை நீங்கள் பயன் படுத்தாதீர்கள். எந்த வாய்ப்பும் கிடைக்காமல் உள்ளவர்களுக்காக அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளாமல் அருள் கூர்ந்து விட்டு விடுங்கள்.


நீங்கள் விட்டுக் கொடுக்கும் அந்த ஒரு வாய்ப்பு பலருக்குக் கனவாக இருக்கும். 


அது தான் நீங்கள் வாழக் கூடிய சிறந்த வாழ்வாக மாறும்.


உங்களுக்கு ஒன்று தெரியுமா? நண்பர்களே! காட்டில் வாழும் புலி தனக்குப் பசிக்கும் போது தனக்கான இரையை வேட்டையாடி சாப்பிட்டு முடித்தவுடன், அதன் எதிரில் அதை விட நல்ல இரை தென்பட்டாலும் அதைப் புலி ஒரு நாளும் வேட்டையாடாது.


இது  புலிகளிடம் காணப் படும் நல்ல குணமாகும். இந்தக் குணத்தை நாமும் பின்பற்றினால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

No comments:

Post a Comment