60 வயதிலும் திடமாக வாழ இந்த ஒரு கீரையை தவறாமல் சாப்பிடுங்க!
பச்சை பசேல் என்று அழகாக இருக்கும் இந்த பச்சை நிற இலைகளில் மருத்துவ நன்மைகள் ஏராளமாக உள்ளன. நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ இந்த கீரையை தவறாமல் சாப்பிடுங்கள்…
சருமத்தை இளமையாக வைத்திருக்கவும், நோய்கள் அண்டாமல் இருக்கவும் சுலபமான ஒரு வழியை தேடுகிறீர்களா? ஆம் என்றால், கீரையை உங்கள் உணவில் கட்டாயமாக சேர்த்துக் கொள்ளுங்கள். கீரையை சூப், சாலட் அல்லது கடையல் செய்து சாப்பிடலாம். இதனை சாப்பிட்டு வர
உடல் நலம் சார்ந்த பல பிரச்சனைகளை தடுக்க முடியும். இதனுடன் ஆரோக்கியமான கூந்தலும் பளபளப்பான சருமத்தையும் பெறலாம்.ஊட்டச்சத்து நிபுணரான லவ்நீத் பத்ரா அவர்கள் வல்லாரைக் கீரையின் நன்மைகளைப் பற்றி நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். இதில் கால்சியம், ஃபோலேட் மாங்கனீஸ், புரதம், சோடியம் இரும்புச்சத்து, மெக்னீசியம், வைட்டமின் E, A போன்ற ஏராளமான சத்துக்கள் உள்ளன. இதன் நன்மைகள் பின்வருமாறு
செரிமானத்தை மேம்படுத்தும்
மலச்சிக்கல் அசிடிட்டி போன்ற வயிறு சார்ந்த பிரச்சனைகளால் அவதிப்படுகிறீர்களா? இதை தடுக்க நார்ச்சத்து நிறைந்த வல்லாரை கீரையை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதில் நிறைந்துள்ள வைட்டமின் B6, B1 மற்றும் ஃபோலிக் ஆசிட் குடல் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது.
சர்க்கரை நோய்க்கு ஏற்றது
வல்லாரைக் கீரையில் உள்ள சேர்மங்கள் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகின்றன. இதை சாப்பிட்டு வர இரத்த சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்கலாம்.
இதய ஆரோக்கியத்திற்கு நல்லது
வல்லாரை கீரையில் உள்ள பீட்டா கரோட்டின், ஜீயாக்சாண்டின், லூடீன் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இதய நோயின் அபாயத்தை குறைக்கின்றன.
மேலும் இதில் உள்ள டயட்டரி நைட்ரேட்டுகள் வீக்கத்தை குறைக்கவும், இரத்த நாளங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகின்றன. வல்லாரை கீரையில் உள்ள பொட்டாசியம் இதயத் துடிப்பை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது. இதன் மூலம் உயர் இரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைத்திருக்கலாம்.
எலும்புகளை வலுவாக்கும்
வல்லாரை கீரையில் உள்ள கால்சியம், பொட்டாசியம் வைட்டமின் K, மெக்னீசியம் போன்ற சத்துக்கள் எலும்புகளை வலுப்படுத்துகின்றன. மேலும் இதில் உள்ள ஆஸ்டியோகால்சின் எனும் புரதம் எலும்பு திசுக்களின் வளர்ச்சிக்கு உதவுகின்றன. எலும்புகளை வலுவாக வைத்திருக்க வல்லாரை கீரையை தவறாமல் எடுத்துக் கொள்ளுங்கள்.
புற்று நோயை தடுக்கும்
வல்லாரை கீரையில் பைட்டோகெமிக்கல்கள் அதிக அளவில் உள்ளன. இது செல்களின் ஆரோக்கியத்தை பராமரிக்கவும், செல் சேதம் அல்லது கட்டிகளின் வளர்ச்சியை தடுக்கவும் உதவுகிறது.
உடலுக்கு ஆற்றல் தரும்
வல்லாரைக் கீரையில் உள்ள கார்போஹைட்ரேட் உடலுக்கு இயற்கையான ஆற்றலை கொடுக்கின்றன. நாள் முழுவதும் சுறுசுறுப்பாக புத்துணர்ச்சியுடன் செயல்பட வல்லாரைக் கீரை சாப்பிடலாம்.
கூந்தல் ஆரோக்கியம்
வல்லாரைக் கீரையில் உள்ள வைட்டமின் A, C, பொட்டாசியம் போன்ற சத்துக்கள் முடியை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகின்றன. இதைத்தொடர்ந்து சாப்பிட்டு வர நல்ல அடர்த்தியான, நீளமான, பளபளப்பான கூந்தலை பெறலாம்.
சரும ஆரோக்கியம்
குறைந்த கலோரியும் அதிக அளவு நார்ச்சத்தும் ஊட்டச்சத்துக்களும் நிறைந்த வல்லாரை உங்கள் சருமத்திற்கும் அதிக நன்மைகளை தரும். இது இரத்த நாளங்களில் ஏற்படும் வீக்கத்தை குறைத்து சரும பிரச்சனைகளை நீக்குகிறது. கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க, என்றும் இளமையாக இருக்க, 60 வயதிலும் திடமான எலும்புகளுடன் ஆரோக்கியமாக வாழ வல்லாரை கீரையை தவறாமல் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment