Thursday, February 20, 2025

சதக்குப்பை -தினம் ஒரு மூலிகை

 **

 தட்டையான விதைகளை உடைய குறும் செடி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் இதன் இலையை சோகி கீரை எனப்படும் இலைகள் இசிவு அகற்றும் இலை விதை ஆகியவை மாதவிலக்கு தூண்டுதல் சிறுநீர் பெருக்குதல் வீக்கம் கரைத்தல் வயிற்று

வாய்வு அகற்றுதல் செரிமானம் மிகுத்தல் உடல் சூடு மிகுதல் ஆகிய மருத்துவ குணம் உடையது இரண்டு கிராம் சோகி கீரை பொடியை சிறிது சர்க்கரை சேர்த்து நாள்தோறும் இருவேளை சாப்பிட்டு வர சளி தலைவலி காது வலி பசியின்மை பினிஷம் மூலம் ஆகியவை குணமாகும் இலையை விளக்கெண்ணையில் வதைக்கி கட்ட கட்டிகள் பழுத்து உடைந்து ஆறும் ஒரு கிராம் சதகுப்பை சூரணம் சர்க்கரை கலந்து சாப்பிட்டு வர பசியின்மை வாத நோயை கட்டுப்படுத்தும் இரைப்பை நுரையீரல் ஆகியவற்றில் உள்ள மாசுகளை அகற்றும் சதகுப்பை கருஞ்சீரகம் மர மஞ்சள் இவற்றை சமன் எடையாக பொடித்து சமன் பனைவெல்லம் சேர்த்து அரைத்து ஐந்து கிராம் காலை மாலை சாப்பிட்டு வர சற்று நேரத்தில் சோம்பு குடிநீர் குடித்து வர உதிரச் சிக்கல நீங்கி கருப்பை பலப்படும் நன்றி

No comments:

Post a Comment