கழுதையொன்று புலியிடம்,
"'புல்'லின் நிறம் நீலம்!" என்றது.
புலி கோபமடைந்து, "இல்லை, புல்லின் நிறம் பச்சை!" என்று கூறியது.
கழுதையோ தொடர்ந்து,
"'புல்'லின் நிறம் நீலம் தான்!" என்றது.
விவாதம் சூடுபிடித்தது.
இருவரும் வழக்கை நடுவர் மன்றத்திற்கு எடுத்து செல்ல முடிவு செய்தனர்.
எனவே,
அவர்கள் காட்டின் ராஜா சிங்கத்தை காண சென்றனர்.
சிங்கம் தனது சிங்காசனத்தில் அமர்ந்திருக்க, விரைந்து சென்ற கழுதை,
"அரசே, 'புல் நீலநிறமானது' என்பது உண்மை தானே?" என்று கேட்டது.
சிங்கமும்,
"ஆம் உண்மை தான்... இப்ப என்ன பிரச்னை!"
என்று கேட்டது.
கழுதை உற்சாகத்துடன்,
"புலி இதனை மறுக்கிறது அரசே...!
புல் பச்சை நிறமானதாம்...
இது என்னை எரிச்சலூட்டுகிறது.
தயவுசெய்து இவரை தண்டியுங்கள்."
என்று கூறியது.
உடனே அரசர்,
"புலியாகிய நீ ஐந்து வருடங்களுக்கு எந்த
கழுதைகளுடனும் பேசக்கூடாது...
மௌனத்தை கடை பிடிக்க வேண்டும்.
இதுதான் உனக்குரிய தண்டனை"
என்று அறிவித்தது.
கழுதை மகிழ்ச்சியுடன் குதித்து,
"புல் நீலநிறமானது!
புல் நீலநிறமானது!"
என்று கூச்சல் போட்டு கொண்டே அங்கிருந்து ஓடியது.
தண்டனையை ஏற்றுக் கொண்ட புலி, சிங்கத்திடம்
"அரசே, புல் பச்சை நிறம் தானே?
அப்புறம் ஏன் என்னை தண்டித்தீர்கள்?" என்றது.
சிங்கம்,
"நீ சொல்வது சரிதான்... புல் பச்சை நிறம் தான்...
அதை ஏன் கழுதையுடன் விவாதித்து நேரத்தை வீணாக்கி கொண்டிருந்தாய்?
உன்னைப் போன்ற ஒரு துணிச்சலான, புத்திசாலியான உயிரினம்...
கழுதையின் தவறான கருத்துக்கு மதிப்பு கொடுக்கலாமா?
இது தான் எனக்கு கவலையை
உண்டாக்கியது.
கழுதைகள் அப்படி தான் இருக்கும் என்று விட்டு விட வேண்டும்.
உனது நேரத்தை வீணடித்தது தவறு.
அதற்கு தான் இந்த தண்டனை!"
என்றது சிங்கம்.
-----------------------
நீதி:-
*முட்டாள்*
மற்றும்
*வெறியருடன் வாதிடுவது...*
*மிக மோசமான நேர விரயமாகும்.* 🎯
அவர்கள்...
உண்மையை உணரவோ,
யதார்த்தத்தை அறிந்து கொள்ளும் திறனோ இல்லாதவர்கள்.
அவர்களுக்கு வேண்டியதெல்லாம்...
அவர்களது *மாய்மையான தங்களின் நம்பிக்கைகளில் வெற்றி மட்டுமே.*
ஆகவே,
தங்களை தாங்களே 'பகுத்தறிவாதிகள்' என்று மெச்சிக் கொள்ளும். மூடர்களிடம்...
ஜாதி, மத, இன, மொழி வெறி பிடித்தவர்களிடம் அர்த்தமில்லாத வாதங்களில் நேரத்தை வீணாக்காதீர்கள்.
நாம் அவர்களுக்கு எத்தனை சான்றுகளை, ஆதாரங்களுடன் வழங்கினாலும்...
அவர்கள் அதனை புரிந்து கொள்ள போவதில்லை.
அவர்கள் அறிவு திறன் அவ்வளவு தான்.
தாங்கள் தான் புத்திசாலிகள் என்ற மாயமையில் உழன்று வருவார்கள்.
அவர்களின் அகங்காரம், வெறுப்பு
மற்றும்
கோபத்தாலும் கண்மூடித்தனமாக தான் முடிவுகள் எடுப்பார்கள்.
அது தவறாக இருந்தாலும்...
தாங்கள் 'சரியாக இருப்பதாக தான் நினைப்பார்கள்.
அவர்களின் அறியாமை அவ்வளவு சீக்கிரம் அகலாது.
ஆகவே,
அறியாமை கூச்சல் போடும் போது...
நுண்ணறிவு அமைதியாக இருக்க வேண்டும்.
அமைதியும், மௌனமும் அதிக மதிப்புடையவை.
*உண்மைகள் தானே வெளிவரும்.*
அப்போது
*தர்மம் வெல்லும்*🙏
*கடமையை ஆற்றுங்கள்* 🎯

No comments:
Post a Comment