நாமக்கல் ராசிபுரம் பகுதியில் உள்ள வி.நகர் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் முதலாம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை
👉புதிதாக இணைந்த மாணவர்களை வீட்டில் இருந்தே மாலை அணிவித்து, இசை வாத்தியங்களுடன் பள்ளிக்கு அழைத்து வந்தனர் பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர் தலைமையிலான ஆசிரியர்கள்
👉அரசுப்பள்ளியில் இணையும் மாணவர்கள் தமிழ்நாடு அரசின் 14 திட்டங்களின் கீழ் பயன்பெற முடியும் எனவும் இணை இயக்குநர் ராஜேந்திரன் தெரிவித்தார்.
🌈🌈நடுநிலைப் பள்ளிகளில் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட 114 பட்டதாரி ஆசிரியர் பணியிட விவரங்கள் வெளியீடு - Director Proceedings வெளியீடு.
🌈🌈உயர் தொழில் நுட்ப ஆய்வக மதிப்பீடு அறிக்கை அட்டை மாணவர்களுக்கு வழங்குதல் - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் & மாநிலத் திட்ட இயக்குநர் கடிதம் வெளியிடப்பட்டுள்ளது
🌈🌈தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் அரசுப்பள்ளிகளில் ஆன்லைனிலும் மாணவர் சேர்க்கை: அனைத்து கலெக்டர்களும் களம் இறங்குகின்றனர், பள்ளி கல்வித்துறை தீவிர நடவடிக்கை
🌈🌈இணை இயக்குநர் பணியிடங்கள் மாறுதல் செய்து ஆணை வெளியீடு. அரசாணை:185 நாள்: 04.03.2024
🌈🌈வட்டார கல்வி அலுவலர் பதவி உயர்வு தகுதி பட்டியல்: மார்ச் 15-க்குள் சமர்ப்பிக்க உத்தரவு.
🌈🌈இனி அரசு ஊழியர்களுக்கு மாதந்தோறும் தானாகவே சம்பளத்தில் இருந்து வருமானவரி கழிக்கப்படும்.
🌈🌈பிளஸ் 1 தமிழ் தேர்வு சற்று கடினம்; சென்டம் கஷ்டம் - மாணவர்கள் கருத்து
🌈🌈பொறியாளர், சுகாதார ஆய்வாளர் பணிகள் உள்பட 2,455 இடங்களுக்கு மார்ச் 12 வரை விண்ணப்பிக்கலாம் நகராட்சி நிர்வாகத் துறை அறிவிப்பு
🌈🌈கல்வி மாவட்ட அளவில் நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் - 25.03.2024 முதல் 02.05.2024 வரை நடைபெறுதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு.
🌈🌈ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கர்கள் மற்றும் விடுதிகளில் தங்கி பயிலும் மாணவர்களுக்கு NEET பயிற்சி.
🌈🌈நேற்று நடைபெற்ற "12ம் வகுப்பு ஆங்கிலத் தேர்வில் 12,696 மாணவர்கள் பங்கேற்கவில்லை - பள்ளி கல்வித்துறை தகவல்.
🌈🌈உயர்நிலை /மேல்நிலைப்பள்ளி ஆய்வக உதவியாளர்களுக்கு பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பயிற்சி வழங்குதல்- SCERT இயக்குநர் செயல்முறைகள் வெளியீடு.
🌈🌈பணி ஓய்வு பெற உள்ள வட்டாரக் கல்வி அலுவலர்களின் கருத்துரு அனுப்புதல் சார்ந்து தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு.
🌈🌈31 முதுகலை (தமிழ்) ஆசிரியர் பணியிடங்களுக்கு 30.06.2024 வரை 4 மாதங்களுக்கு ஊதியக் கொடுப்பாணை வெளியீடு.
🌈🌈இணை இயக்குநர்களை பணியிட மாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.
🌈🌈TNSED செயலியில் மாணவர் வருகையில் சில சிறிய கோளாறு உள்ளது - விரைவில் சரிசெய்யப்படும் - State EMIS
🌈🌈புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை.
திருவாப்பூர் முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழாவையொட்டி மார்ச் 11 விடுமுறை
🌈🌈கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசிக்கொடை விழாவை முன்னிட்டு வரும் 12ம் தேதி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவு
🌈🌈மெட்டா நிறுவனத்தின் பிரபல சமூக வலைதளமான பேஸ்புக், இன்ஸ்டாகிராம் முடங்கியது.
👉பேஸ்புக், இன்ஸ்டாகிராம் சேவைகள் விரைவில் சரி செய்யப்படும் - மார்க் ஜுக்கர்பெர்க்
👉மீண்டும் செயல்பட தொடங்கியது பேஸ்புக், இன்ஸ்டா! தளம்
🌈🌈2015-ம் ஆண்டுக்கான மாநில திரைப்பட விருதுகளை அறிவித்தது தமிழ்நாடு அரசு!
👉சிறந்த நடிகர் - மாதவன் (இறுதிச்சுற்று)
👉சிறந்த நடிகை - ஜோதிகா (36 வயதினிலே)
👉சிறந்த நடிகர் (சிறப்புப் பரிசு) - கவுதம் கார்த்திக் (வை ராஜா வை)
👉சிறந்த நடிகை (சிறப்புப் பரிசு) - ரித்திகா சிங் (இறுதிச்சுற்று)
👉சிறந்த வில்லன் - அரவிந்த் சுவாமி(தனி ஒருவன்)
🌈🌈அரசியல் கட்சிகள் பெற்ற தேர்தல் பத்திரங்கள் குறித்த ஆவணங்களை சமர்பிக்க கால அவகாசம் கோரியது SBI வங்கி!
மார்ச் 6ம் தேதிக்குள் எந்தெந்த கட்சிகள் யாரிடம் இருந்து தேர்தல் பத்திரங்களை வாங்கியது என்ற ஆவணங்களை இந்திய தேர்தல் ஆணையத்திடம் SBI ஒப்படைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது
இந்த ஆவணங்களை சமர்பிக்க ஜூன் 30 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்க வேண்டும் என SBI வங்கி சார்பில் உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை
🌈🌈டெல்லியில் பெண்களுக்கு மாதம்தோறும் 1000 உதவித்தொகை வழங்கப்படும் என அரசு அறிவிப்பு
18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் அனைவருக்கும் மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என அறிவிப்பு
🌈🌈கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டுக்காக 3ம் பாலினத்தவர் எண்ணிக்கை குறித்த புள்ளி விவரத்தை சேகரிக்க வேண்டும் - உயர்நீதிமன்றம் உத்தரவு.
🌈🌈கலைஞர் நினைவிட அருங்காட்சியகத்தை இன்று முதல் மக்கள் பார்வையிட அனுமதி - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
🌈🌈போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையாக ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் 470 குற்றவாளிகள் கைது - காவல்துறை அறிவிப்பு
🌈🌈இந்தியாவின் வளர்ச்சியில் சென்னை மக்களின் பங்கு அதிகம்: பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
🌈🌈மார்ச் 8-ல் ஈஷா மஹா சிவராத்திரி விழா கொண்டாட்டம்- குடியரசு துணைத் தலைவர் பங்கேற்பு
🌈🌈ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க மசூதிகளுக்கு பச்சரிசி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
🌈🌈ஹிமாச்சலில் 18 முதல் உள்ள மகளிருக்கு மாதம் ரூ. 1, 500 வழங்கப்படும் என முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு அறிவித்துள்ளார்.
🌈🌈மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர்களை இறுதி செய்வதற்காக மார்ச் 7ம் தேதி காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு கூடுகிறது.
🌈🌈சமூக ஊடகங்களை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் என பாகிஸ்தான் செனட் சபையில் தீர்மானம் தாக்கல்.
🌈🌈பாகிஸ்தானில் ஏற்பட்ட கனமழையால் கடந்த 48 மணிநேரத்தில் 37 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்
🌈🌈இந்திய பேட்மிண்டன் வீரர் சாய் பிரனீத் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
🌈🌈உலகத் தரவரிசை அடிப்படையில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் டேபிள் டென்னிஸ் அணிகள் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்று சரித்திரம் படைத்துள்ளது.
🌈🌈ரஞ்சி டிராபியில் மும்பை அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் தமிழ்நாடு அணி தோல்வி அடைந்து வெளியேறியது.
🌈🌈ஆட்டோ தொழிற்சங்கம் - முத்தரப்பு பேச்சுவார்த்தை
சென்னை, கிண்டியில் ஆட்டோ தொழிற்சங்க நிர்வாகிகளோடு போக்குவரத்து துறை ஆணையர் பேச்சுவார்த்தை
தமிழகத்தில் இயங்கும் ஆட்டோகளுக்கு அரசே செயலியை உருவாக்கி கட்டண விவரத்தை வெளியிட வேண்டும் - ஆட்டோ சங்கங்கள் கோரிக்கை
🌈🌈2024 ஐசிசி டி-20 உலக கோப்பை
போட்டிகளை டிஸ்னி பிளஸ் Hotstar மொபைல் செயலியில் இலவசமாக பார்க்கலாம் என அறிவிப்பு
🌈🌈திமுக கூட்டணி நிலைப்பாட்டில் இருந்து மாறுவதற்கு வாய்ப்பே இல்லை.
போட்டியிடும் தொகுதி எண்ணிக்கைகளை விடவும் பாஜகவிடம் இருந்து இந்த நாட்டைக் காப்பாற்றுவாதே நாங்கள் மேலானதாக கருதுகிறோம்
பாஜகவை வீழ்த்துவதுதான் எங்களின் முதன்மையான நோக்கம்
-விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி
🌈🌈டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட் ரூ.1.86 கோடி வரை விற்பனை செய்யப்படுகிறது. டிக்கெட் மறுவிற்பனை செய்யும் இணையதளங்களில் ஒரு டிக்கெட் ரூ.1.86 கோடிக்கு விற்கப்படுகிறது.
அமெரிக்காவில் ஜூன் 9-ம் தேதி நடைபெறும் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
🌈🌈மக்களுக்கு மருத்துவ சேவை வழங்கும் பொறுப்பிலிருந்து மத்திய அரசு ஒளிந்துகொள்ளக்கூடாது
உச்சநீதிமன்றம் எச்சரிக்கை
🌈🌈நீக்கப்பட்ட இந்திய செயலிகளை மீண்டும் பிளே ஸ்டோரில் சேர்க்க கூகுள் நிறுவனம் ஒப்புதல்
மத்திய அரசு தகவல்
🌈🌈“தமிழ்நாட்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும்!”
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்
🌈🌈பேரிடர் காலத்தில் வராமல் பிரசாரத்திற்கு மட்டுமே வரும் தலைவர்களுக்கு மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்”
ஆர்.பி.உதயகுமார் முன்னாள் அமைச்சர்
🌈🌈வரும் 14 அல்லது 15-ல் நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என தேர்தல் ஆணைய வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது. 2019 மக்களவை தேர்தலை போலவே இந்த முறையும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு இருக்கிறது. முதற்கட்ட தேர்தல் ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் நடைபெறக்கூடும் என தேர்தல் ஆணைய வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.
தலைமை தேர்தல் ஆணையர் தலைமையில் உயர்மட்டக் குழு மாநிலம் வாரியாக அம்சங்களை ஆய்வு செய்கிறது.
🌈🌈அறுபடை வீடுகளுக்கு அரசு சார்பில் இலவச சுற்றுலா இன்று தொடக்கம் :
அமைச்சர் சேகர்பாபு
🌈🌈சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 உயர்வு
தங்கம் ஒரு கிராம் ரூ.6,015க்கும், ஒரு சவரன் ரூ.48,120க்கும் விற்பனை.
🌈🌈நீங்கள் நலமா” என்ற புதிய திட்டத்தை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அரசின் திட்டங்கள் பொதுமக்களை சென்றடைவதை உறுதி செய்ய “நீங்கள் நலமா” என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது.
No comments:
Post a Comment