சமீப ஆண்டுகளாக உலகில் பல்வேறு பகுதிகளில் ப்ரீமியம் ரக மினி வேன்களின் விற்பனை கணிசமான அளவு அதிகரித்து வருகிறது. பணக்கார குடும்பங்கள் தங்கள் குடும்பத்துடன் பயணிக்க ஏற்ற வாகனமாக இது இருப்பதால் இந்த ரக வாகனங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது.
இப்படியாக ஹூண்டாய் நிறுவனம் வெளியிடும் ஸ்டாரியா என்ற பிரிமியம் ரக எம்பிவி காரின் அப்டேட் வெர்ஷன் அறிமுகமாகியுள்ளது. இதைப்பற்றி தான் விரிவான விபரங்களை காணப் போகிறோம். இந்த கார் இந்தியாவில் விற்பனை இல்லை ஆனால் தென்கொரியா போன்ற நாடுகளில் விற்பனையாகி வருகிறது.
இந்த காரின் 2024-ம் ஆண்டு அப்டேட் வெர்ஷன் தற்போது அறிமுகமாகியுள்ளது. இந்தியாவில் உள்ள மாருதி சுஸூகி எர்டிகா காருக்கு போட்டியாக இந்த காரை கூறலாம். அந்த அளவிற்கு பெரிய அளவு இட வசதி கொண்ட காராக இந்த கார் இருக்கிறது. இந்த காரின் அளவுகளை பொருத்தவரை 5.3 மீட்டர் நீளம் கொண்ட காராக இருக்கிறது.
இந்த காரில் உள்ள இன்ஜினை பொறுத்தவரை 3.5 லிட்டர் வி6 பெட்ரோல் இன்ஜின் மற்றும் 2.2 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் ஆகிய இன்ஜின் ஆப்ஷன்கள் இருக்கிறது. இந்நிலையில் இந்த ஆண்டு அறிமுகமாகியுள்ள அப்டேட்டட் வெர்ஷனில் புதிதாக ஹைபிரிட் தொழில்நுட்பம் பொருத்தப்பட்ட இன்ஜின் ஆப்ஷனும் வழங்கப்பட்டுள்ளன. இந்த காரை பொறுத்தவரை மொத்தம் மூன்று விதமான வடிவமைப்புகளில் விற்பனைக்கு வருகிறது. அதன் படி கார்கோ, டூரர், லான்ச் ஆகிய மூன்று விதமான வடிவமைப்புகள் இந்த காரில் இடம் பெற்றுள்ளன. கார்கோ வடிவமைப்பை பொறுத்தவரை மூன்று மற்றும் ஐந்து சீட்டர் ஆகிய ஆப்ஷன்கள் உள்ளன. டூரர் வடிவமைப்பை பொறுத்தவரை 9,11 சீட்டர் ஆகிய ஆப்ஷன்கள் உள்ளன. லான்ச் வடிவமைப்பை பொறுத்தவரை 9,7 சீட்டர் ஆப்ஷன் உள்ளன.
இந்த ஹூண்டாய் ஸ்டாரியா காரின் விலையை பொருத்தவரை கார்கோ வடிவமைப்பு கொண்ட கார் 3 சீட்டர் வெர்ஷனில் ரூபாய் 21.33 லட்சம் என்ற விலையிலும், அதே வேரியன்டின் 5 சீட்டர் வெர்ஷினில் ரூபாய் 21.83 லட்சம் என்ற விலையிலும், விற்பனைக்கு வருகிறது. டூரர் 9 சீட்டருக்கு ரூபாய் 22.7 லட்சம் என்ற விலையிலும் 11 சீட்டருக்கு ரூபாய் 25.54 லட்சம் என்ற விலையிலும் விற்பனைக்கு வருகிறது.
இதன் டாப் வேரியன்டான லான்ச் வேரியன்டை பொறுத்த வரை ரூபாய் 28.7 லட்சம் என்ற நிலையில் விற்பனைக்கு வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னாள் ஹுண்டாய் ஸ்டாரியா கார் இந்தியாவில் நீல கலர் நம்பர் பிளேட் உடன் வலம் வந்தது செய்திகளில் வெளியாகி இருந்தது. இந்த நீல கலர் நம்பர் பிளேட் என்பது தென்கொரியாவில் இருந்து இந்தியாவிற்கு வந்திருக்கும் அரசு அதிகாரிகள் பயன்படுத்தக்கூடிய காராக இருக்கும் என கூறப்பட்டது.
ஹூண்டாய் ஸ்டாரியா காரை பொருத்தவரை கியா கார்னிவல் கார் உருவாக்கப்பட்ட அதே என்3 என்ற பிளாட்பார்மில் உருவாக்கப்பட்ட காராக இருக்கிறது. ஸ்டாரியா காரை பொறுத்தவரை ஹுண்டாய் வெர்னா என்ற செடான் காரின் வடிவமைப்பை ஒத்து இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காரில் உள்ள ஸ்லைடிங் டோர்கள், மினி வேன் வடிவமைப்பு மற்றும் கூடுதல் அம்சங்கள் எல்லாம் தற்போதைய புதிய அப்டேட்டில் அப்டேட் செய்யப்பட்டுள்ளன. புதிதாக வந்துள்ள ஹைபிரிட் காரைப் பொறுத்தவரை 1.6லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் ஹைபிரிட் ஆப்ஷனும் இணைக்கப்பட்டுள்ளது. இது மொத்தம் 242எச்பி பவரையும் 367என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கிறது.
இதின் இன்ஜின் பவரை பொறுத்தவரை 177பிஎச்பி பவரும் 265என்எம் டார்க் திறனும் இருக்கிறது. எலக்ட்ரிக் மோட்டாரை பொருத்தவரை 72பிஎச்பி பவரும் 34என்எம் டார்க் திறனும் கொண்ட மோட்டாராக இருக்கிறது. இதன் மைலேஜை பொறுத்தவரை லிட்டருக்கு 13கிலோமீட்டர் மட்டுமே மைலேஜ் தரும் வகையில் இருக்கிறது. இந்த ஹூண்டாய் ஸ்டாரியா கார் இந்தியாவிற்கு வருவதற்கான வாய்ப்புகள் இல்லை. ஆனால் இந்த காரில் பொருத்தப்பட்டுள்ள ஹைப்ரிட் தொழில்நுட்பம் இந்தியாவிற்கு வர வாய்ப்புகள் உள்ளது. நான்காம் தலைமுறை கார்னிவெல் கார் மூலம் இந்த தொழில்நுட்பம் இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் உள்ள வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் தற்போது எம்பிவி கார்கள் மீது கவனம் செலுத்தி வருகின்றன. அதன்படி ஹூண்டாய் காரும் வெளிநாட்டில் ப்ரீமியம் காராக இந்த ஸ்டாரியா காரை அறிமுகம் செய்து விற்பனை செய்து வருகிறது.
இதன் அப்டேட்டட் வெர்ஷன் வந்துள்ளது இந்தியர்களுக்கு மகிழ்ச்சி என்றாலும் இந்தியாவில் இந்த கார் வருவதற்கான வாய்ப்புகள் இல்லை.

No comments:
Post a Comment