Sunday, March 10, 2024

வெண்பூசணிக்காய் - நீர் சத்தினை தக்க வைத்து தாங்கும்

சித்திரை மாதம்

1. மண்டலம் : செரிமாணம்

2. இராசி நிலை: மேஷ இராசி்

3. காய்கறி வெண்பூசணி

4. ஊட்டச்சத்து விட்டமின் பி1

5. தத்துவம் நெருப்பு

6. தோஷம் வாதம்

7. துருவம் ஆண்

8. பருவம் வெயில் காலம்

9. குணம் தைரியம்

10. நேரம்  :  முற்பகல் 10 முதல் பகல் 12 வரை

11. வைபவம் :  சத்திய நாராயண பூஜை

12. ஞானம் :  புருஷோத்தம சங்கமயுகம்

                                                                                                                                                              நமக்கு சாதாரணமாக கிடைக்கும் ஓர் அசாதாரணமான காய், வெண்பூசணிக்காய். ஒரு மாதம் என்றாலும் ஒரு வருடம் என்றாலும் வெண்பூசணி தன் நிலை குலையாது நீர் சத்தினை தக்க வைத்து தாங்கும் வலிமை பெற்றது. மூளை நரம்புகள் தனது தகவல்களை கடத்துவதற்கு தேவையான உப்புச்சத்தினை அள்ளிக் கொடுத்து ஞாபகமறதிக்கு சவால் விடும் உன்னதமான காய், வெண்பூசணிக்காய். புலன் உணர்வுகளை கடத்துவதில் நரம்புகளுக்கு உப்புசத்து அவசியமாகிறது. அது குறையும் பட்சத்தில் தாமதமாக புரிந்து கொள்ளுதல், தாமதமாக கேட்கும் திறன், தூரப்பார்வை என பல நிலைகளுக்கு மனிதன் ஆளாகின்றான். ஞானிகள், விஞ்ஞானிகள், மெய்ஞானிகள், சித்தர்கள், பிராமணர்கள் என அறிவு சார்ந்த பணியில் ஈடுபடுபர்களுக்கு வெண்பூசணி ஏற்ற உணவாக இருந்ததாக பாரத வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது, மேலும் நடை முறையிலும் உள்ளது.


படைப்பவர், சூரியன் என்னும் அடுப்பை கொண்டு சமைக்கப்பட்ட பொருளில் எள்ளவும் குற்றமில்லை. உதாரணமாக வாய்வு பிடிப்பை நீக்க 4 கொத்தவரங்காயை நன்கு மென்று உமிழ்நீரோடு கலந்து சாப்பிடவேண்டும். பிடிமானங்கள் உடனே விடுபடும். ஆனால் அதே கொத்தவரங்காயை வத்தளாக்கி பொரித்து சாப்பிட்டால், அதுவே வாயுப்பிடிப்பை உண்டாக்கும். குற்றம் படைப்பவரிடமோ அவரது படைப்பிலோ இல்லை, அது மனிதனின் சிந்தனையில் உள்ளது. இந்த குற்றத்தை அறியாமை என்று கௌரவமாக நாம் சொல்லிக் கொள்கிறோம். உயிர்காக்கும் ஊட்டச்சத்துள்ள பொருளை சமையல் என்ற பெயரில் வேகவைப்பது, வனக்குவது, வறுப்பது, சுடுவது, பொறிப்பது என்று உணவை 100 சதவிதம் புளிப்புத் தன்மையாக்கி, அதனை இரத்தத்தின் வாயிலாக உடலில் உள்ள அனைத்து உயிரணுவிலும் புளிப்புத்தன்மையின் அழுத்தத்தை மனிதன் ஏற்படுத்துகிறான். இது உயிரணுவை வாழவிடாது அதனை அழித்து, உடலை சுடுகாடாக்குவதற்கு சமமாகும். இதற்கு சான்று என்னவென்றால், மிருகங்களின் கழிவுகள் துர்நாற்றம் வீசுவதில்லை. ஆனால் மனிதனின் வியர்வை, சிறுநீர், மலம் மற்றும் மூச்சுக்காற்று உட்பட அனைத்தும் துர்நாற்றம் வீசுகின்றன. இதற்கு பரிகாரமாக 100 கிராம் வெண்பூசணியை அதன் தோல் விதையுடன் அரைத்து வடித்து பருகலாம். அதனுடன் நெல்லிக்காய் அல்லது புதினா சேர்த்து அரைக்க கூடுதல் பலன் கிடைக்கும்.

                                                                                                                                                    புளிப்புத்தன்மை அதிகமாகி அதனை ஈடுகட்ட உடலானது காரத்தன்மை நிறைந்த உணவை கேட்கத் தொடங்கும். அதாவது பசி உணர்வு தூண்டப்படும். அது சமயம் தலைவலி, மூச்சுத்திணறல் ஆகியவை உண்டாகலாம். அதனை சரியாக உணர முடியாது மீண்டும் புளிப்பு பதார்த்தத்தை கொடுத்து, கொடுத்து உடலை முற்றிலுமாக விஷமாகவே மாற்றி விடுகிறோம். அதற்கு கேன்சர் என்று செல்லமாக பெயரிட்டு நம்மால் வளர்க்கப்பட்டும் வருகிறது. தவறான உப்பு, காரம், புளிப்பை வாழ்நாள் முழுக்க சேர்த்து சாப்பிட்டு விட்டு, பின் திடீரென்று குணமாக வைத்தியம் பார்க்கிறான் மனிதன். மனிதன் படைப்பவர் முன் தன் அறியாமையின் உச்சத்தை தொட்டு காட்டி சாதித்துவிட்டான். இவை அனைத்தையும் மாற்றியமைத்திட பச்சை காய்கறிகளை சாப்பிடுவதால் ஞானம் பிறக்கும். ஆனால் ஊர் பேச்சுக்கு பயந்து பச்சையாக சாப்பிட்டால் ஏதோ தீங்கு நடந்து விடும் என்ற கற்பனையில் அதன் மேல் பல தோஷங்களை சுமத்தி, இறுதியில் சத்தியத்திற்கு சமாதி கட்டி மனிதர்கள் கொண்டாடுகின்றனர்.

No comments:

Post a Comment