செய்தித் துளிகள் - 08.04.2024(திங்கட்கிழமை)
🌑நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியம் அலவாய்ப்பட்டி
அரசு மேல்நிலைப்பள்ளி
முதுகலை ஆசிரியர் திரு.ஜெயபால் அவர்கள் சேந்தமங்கலம் தேர்தல் பயிற்சிவகுப்பு முடித்து திரும்பும் வழியில் நாமக்கல் அருகே உள்ள வேட்டாம்பாடி என்ற இடத்தில் சாலைவிபத்தில் சிக்கி நேற்று 7.04.2024 மாலை மரணம் எய்தினார் எனும்
பெருங்கொடுமையான துயரச்செய்தி பேரதிர்ச்சி தருகிறது.*தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில அமைப்பு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.*
🌅🌅மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான (சிபிஎஸ்இ) 12ஆம் வகுப்பு தேர்வு ஏப்.3ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதனால், வாரியம் மே மாத மத்தியில் முடிவுகளை அறிவிக்க வாய்ப்புள்ளது.
🌅🌅கோடை விடுமுறைக்கு பின் கல்லூரிகள் ஜூன் 19 ஆம் தேதி திறக்கப்படும்" என கல்லூரி கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.
🌅🌅வருமானவரி செலுத்தும் முறையில் எந்தவித மாற்றமும் இல்லை - மத்திய நிதியமைச்சகம் விளக்கம்
🌅🌅 *அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கும் கையடக்க கணினி - ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு.!*
🌅🌅கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது.
🌅🌅இந்திய ரயில்வேயில் 9144 காலி பணியிடம்
10,ம் வகுப்பு 12, ம் வகுப்பு , ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
🌅🌅சிறுமியின் சமயோஜிதம்
உத்திர பிரதேசத்தில் குழந்தையை தூக்க வந்த குரங்கிடமிருந்து தப்பித்து கொள்ள google அலெக்சாவை நாயை போல குரைக்க வைத்து சமயோசிதமாக தப்பித்த சிறுமி..
எதிர்காலத்தில் தனது நிறுவனத்தில் சிறுமிக்கு வேலை வாய்ப்பு தருவதாக Mahindra நிறுவன தலைவர் ஆனந்த் மகிந்திரா `X' தளத்தில் பதிவு
🌅🌅இந்தியா கூட்டணிக்கு பழ.நெடுமாறன் ஆதரவு:
மக்களவை தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு தமிழர் தேசிய முன்னணி நிறுவனத் தலைவரும், உலகத் தமிழர் பேரமைப்பு தலைவருமான பழ.நெடுமாறன் ஆதரவு.
பேரபாயத்திலிருந்து மக்களை காப்பாற்றுவதற்கு இந்தியா கூட்டணி தவிர வேறு எந்த அணிக்கும் வலிமை இல்லை எனவும் பேச்சு.
🌅🌅குடியுரிமை திருத்தச் சட்டம், அக்னிபாத் தீடீடம், ஆளுநர் பதவியை அகற்ற நடவடிக்கை - CPI தேர்தல் அறிக்கை
🌅🌅"கச்சத்தீவை மீட்க அரசுக்கு துணை நற்போம்" - ராமநாதபுரம் ராணி லட்சுமி குமரன் சேதுபதி
🌅🌅டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து, பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் சிங் தலைமையில் ஆம் ஆத்மி கட்சியினர் உண்ணாவிரதப் போராட்டம்.
🌅🌅"இந்தியா புதிய உச்சம் பெறும்"
தமிழர்களின் பண்பாடு, சனாதனத்தை பாஜகதான் காத்து வருகிறது; மோடி மீண்டும் பிரதமராக வந்தால் இந்தியா பொருளாதரத்தில் புதிய உச்சம் பெறும்.
அரியலூரில் பாஜக வேட்பாளர் கார்த்தியாயினிக்கு ஆதரவாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பரப்புரை.
🌅🌅தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்ததாக கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என்பதையும் தேர்தல் வாக்குறுதியில் சேர்த்துக்கொள்கிறோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
🌅🌅பிரதமர் வருகையை ஒட்டி, சென்னையில் வரும் 9, 10ம் தேதிகளில் டிரோன்கள் பறக்கத் தடை
பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக சென்னை பெருநகர காவல்துறை உத்தரவு
🌅🌅ஜெகன் மோகன் ரெட்டிக்கு நோட்டீஸ்
தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும் ஆந்திரா முன்னாள் முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு குறித்து தரக்குறைவாக கருத்து தெரிவித்ததாக ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
🌅🌅தமிழ்நாட்டில் நேற்று 15 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவு!
அதிகபட்சமாக ஈரோட்டில் 107.6 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியதால் மக்கள் தவிப்பு!
🌅🌅தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக சிதம்பரம் விழுப்புரம் தொகுதிகளில் QR Code டிஜிட்டல் ஸ்கேனிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பானை வாக்கு சேகரிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி
🌅🌅மாரடைப்பு ஏற்பட்டு உயிருக்கு போராடிய இலங்கை மீனவர், காப்பாற்றிய இந்திய படை குவியும் பாராட்டு
👉நடுக்கடலில் உயிருக்குப் போராடிய இலங்கை மீனவரை காப்பாற்றிய இந்திய கடற்படைக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இலங்கையை சேர்ந்த மீனவர் சர்வதேச எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த இந்திய கடற்படையினர், மீனவரை ஹெலிகாப்டர் மூலம் மீட்டு, சிகிச்சைக்காக சென்னை அழைத்துச் சென்றனர்.
நமது இந்திய மீனவர்களை அடிக்கடி இலங்கை கடற்படை கைது செய்து வந்தாலும் அதற்கு பழி வாங்காமல் இந்திய கடற்படையின் மனிதாபிமான செயல் பலரையும் பாராட்ட வைத்துள்ளது.
🌅🌅விக்கிரவாண்டி எம்எல்ஏ புகழேந்தியின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
🌅🌅புதுச்சேரியில் மின் துறையை தனியாருக்கு தாரைவார்க்க திட்டம்
2006 திமுக அறிக்கை போலவே, தற்போது காங்கிரஸ் தேர்தல் அறிக்கை கதாநாயகனாக உள்ளது
புதுச்சேரியில் மூடப்பட்டுள்ள ரேஷன் கடைகள் திறக்கப்படும்
மாமல்லபுரம் - புதுச்சேரி, கடலூர் - புதுச்சேரி ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்
புதுச்சேரியில் மூடப்பட்ட பஞ்சாலைகள் அனைத்தும் மீண்டும் திறக்கப்படும்
காரைக்காலில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படும்
கோயில் நகரம் திட்டத்தின் கீழ் காரைக்கால் மேம்படுத்தப்படும்
புதுச்சேரியில் முக்கிய இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்படும்"
முதலமைச்சர் ஸ்டாலின்
🌅🌅தேர்தல் பத்திரம் மூலம் வருமானம், ப.சிதம்பரம் ஆதரவு
எல்லா கட்சியும் தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை வாங்கியிருக்கிறது.
காங்கிரஸ் கட்சியும் தான் வாங்கியிருக்கிறது.
நாங்கள் ஒரு கட்சியை நடத்த வேண்டும் அல்லவா?
கையில் ஓடு எடுத்துக் கொண்டு பிச்சையா எடுக்க முடியும்?. இந்த வழி தவறு தான்.
இது ஒன்று தான் வழி என்றால் வேறு என்ன செய்ய முடியும்?
என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
🌅🌅கனடாவுக்கு இந்தியா கடும் கண்டனம்!
கனடாவின் தேர்தல்களில் இந்தியா தலையிட முயன்றதாக குற்றம்சாட்டி அந்நாட்டு உளவுத்துறை வெளியிட்ட ஆவணத்திற்கு எதிராக இந்தியா கடும் கண்டனம்
உண்மையில் கனடா அரசு தான் இந்திய உள்நாட்டு விவகாரங்களில் தொடர்ந்து தலையிட்டு வருகிறது
கனடாவின் அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை இந்தியா முற்றிலும் நிராகரிக்கிறது
இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தகவல்
🌅🌅இண்டியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் ராகுல் காந்தி பிரதமர் ஆவார் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதை மதிமுக வழிமொழிகிறது
வைகோ
🌅🌅பாஜகவோடு அண்ணன் ஸ்டாலின் நட்பு பாராட்டியிருந்தால் அதிமுக என்ற கட்சியே இருந்திருக்காது!
சிதம்பரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேச்சு
🌅🌅தமிழ்நாடு முழுவதும் மாவட்ட விசாரணை நீதிமன்றங்களில் மனு தாக்கல் முறையை E-Filing ஆக மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று முதல் 19ம் தேதி வரை பணி புறக்கணிப்பில் ஈடுபட உள்ளதாக வழக்கறிஞர் ஜாக் கூட்டமைப்பினர் அறிவிப்பு.
இந்த முறையை அமுல்படுத்தியதால், வழக்கறிஞர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
🌅🌅நேற்று தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுட்டெரித்த வெயில்:-
👉108F° ஈரோடு
👉107 சேலம்
👉107 திருப்பத்தூர்
👉106 வேலூர்
👉106 நாமக்கல்
👉105 தருமபுரி
👉105 திருச்சி
👉105 திருத்தணி
👉104 கரூர் பரமத்தி
👉104 தஞ்சாவூர்
👉104 மதுரை
👉103 கோவை
🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment