தேவையான பொருட்கள் :
சேமியா -----100கிராம்
கடுகு ----- 1தேக்கரண்டி
உளுந்தம் பருப்பு ---1/2 தேக்கரண்டி
கடலைப்பருப்பு ----1/2 தேக்கரண்டி
பச்சைமிளகாய் --- 2 எண்ணிக்கை
எண்ணெய் ----- 5 தேக்கரண்டி
கருவேப்பிலை ---- சிறிதளவு
முந்திரிப்பருப்பு ----- 15 கிராம்
வெங்காயம் ------- 50 கிராம்
செய்முறை :
1......எண்ணெயை சூடு செய்து கடுகுப் போட்டு, அது பொரித்தவுடன் பச்சையிளகாய் வெங்காயம், உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு, கறிவேப்பிலை போடவும்,
2......சேமியாவை சேர்த்து அது பொன்நிறமாகும்வரை வறுக்கவும்.
3.......இரண்டு கப் நீர் சேர்த்து மூடிவைத்து மெல்லிய சூட்டில் வேகவைக்கவும். அவ்வப்பொழுது அதனை கிளறி மிருதுவாக வரும்வரை சமைக்கவும்
4.......முந்திரியை நெய்யில் வறுத்து உப்புமாவில் சேர்க்கவும்.
5.......சூடாக பரிமாறவும்.
6.......சேமியா உப்புமா பலராலும் விரும்பப்படும் ஒரு சிற்றுண்டியாகும்.

No comments:
Post a Comment