Thursday, January 9, 2025

உணரத்தான் முடியும் பார்க்க முடியாது

 🟫🟫🟫🟫🟤🟫🟫🟫🟫

_*எவ்வித  அறிவுரைக்கும், ஆலோசனைக்கும் ஒத்துப் வராதவர்களை விட்டொழியுங்கள். அவர்கள் மாற மாட்டார்கள்.*_


_*கற்றுக் கொள்ளவும், கற்றுக் கொடுக்கவும் தான் பிறந்தோம். குறைகளை சொல்லி காயப் படுத்த அல்ல. தவறு என்றால் கற்றுக் கொடுங்கள். சரி என்றால் கற்றுக் கொள்ளுங்கள்.*_


_*நம் எண்ணங்கள், நம்பிக்கைகள், பிராத்தனைகள் மற்றும் பேசும் வார்த்தைகள் நம்   வாழ்க்கையை வடிவமைக்கின்றன

.*_


_*வாழ்க்கை எப்போதும் அமைதியாக ஓட வேண்டும் என்று நினைக்காதீர்கள். சில செயல்கள் டென்ஷன் ஆக்கினாலும் பரவாயில்லை. கொஞ்சம் `ரிஸ்க்’ எடுங்கள்.*_


ஒரு கடற்கரை ஓரம்.

அங்கே ஒரு சின்ன கிராமம்.

அந்த கிராமத்தில் ஒரு சின்ன பள்ளிக்கூடம்.

கடற்கரையோரத்தில் உள்ள ஒரு விடுதியில் ஓய்வுக்காக ஒருவர் வந்து தங்கியிருந்தார்.


பள்ளிக்கூடத்தில் ஏதோ விழா நடப்பது போல் தெரிந்தது.

உடனே அவர் அங்கே போனார்.


அங்கே என்ன நடக்கிறது என்று விசாரித்தார்.

பள்ளி ஆண்டு விழா நடக்கிறது என்று சொன்னார்கள்.

உள்ளே போனார்.

கண்காட்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


பள்ளிக்கூடத்தில் படிக்கின்ற மாணவர்கள் தயார் பண்ணிய பொருட்களை காட்சிக்கு வைத்திருந்தார்கள்.


அந்த ஊர் மக்கள் எல்லாம்

அதைக் கூட்டம் கூட்டமாக பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

இவரும் ஆர்வமாக அதை எல்லாம் பார்த்துக் கொண்டே போனார்.

ஒரு இடத்தில் ஒரு சின்ன ரயில் செய்து வைத்திருந்தார்கள்.

மின்சாரத்தில் ஓடுவதுபோல் தயார் செய்திருந்தார்கள்.

ஒரு சின்ன பொத்தான் இருந்தது அதை அழுத்தினால் ரயில் சுற்றிச் சுற்றி வரும்.


மாணவர்கள் எதிரில் நின்று விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

இவர் அதைக் கவனித்தார்.

அங்கிருந்த மாணவர்களிடம் விளையாட்டாக ரயில் எதனாலே ஓடுகிறது என்று கேட்டார்.

சக்தியினாலேயே ஓடுகிறது என்று மாணவர்கள் சொன்னார்கள்.

அது என்ன சக்தி என்றார்.

அதற்குப் பேர் மின்சாரம் என்றார்கள் மாணவர்கள்.

நீங்கள் மின்சாரத்தை பார்த்திருக்கிறீர்களா? என்று கேட்டார்.


நாங்கள் பார்த்ததில்லை.

ஆனால் இதை செய்வதற்கு எங்களுக்கு உதவி செய்த ஆசிரியர் ஒரு  பட்டதாரி.

ஒருவேளை அவர் பார்த்து இருக்கலாம் என்றார்கள் மாணவர்கள்.

அவர் எங்கே இருக்கிறார்? என்று கேட்டார்.

அழைத்துக் கொண்டு வருகிறோம் என்று சொல்லி அவரை அழைத்துக் கொண்டு வந்தார்கள்.


அவரிடம் மின்சாரத்தை பார்த்து இருக்கிறீர்களா? என்று கேட்டார் அந்த மனிதர்.

மின்சாரத்தை பார்க்கிறதாவது? நான் பார்த்ததே இல்லை என்றார் அந்த ஆசிரியர்.

இது மாதிரி எத்தனையோ இயந்திரங்களை செயல்பட வைக்கின்றது.

ஆனால் உண்மையிலேயே அது என்னவென்று எனக்குத் தெரியாது. ஒருவேளை இந்த பள்ளிக்கூடத் தலைமை ஆசிரியருக்குத் தெரிந்திருக்கலாம்.


ஏனென்றால் அவர் ஒரு மேல்நிலைப் பட்டதாரி என்றார்.

அவர் சரி என்று போய் தலைமையாசிரியரை கூட்டிக் கொண்டு வந்தார்கள்.

அவரிடம் இதே கேள்வியைக் கேட்டார் .

மன்னிக்க வேண்டும் இந்த கேள்வியை இதுவரைக்கும் யாரும் கேட்டதில்லை.

சக்தியை யாரும் பார்க்க முடியாது. ஆனால் அது செயல்படும் விதத்தைத்தான் பார்க்க முடியும் என்றார்.


இப்போது இதுவரைக்கும் கேட்டுக் கொண்டிருந்தவர் சிரித்தார்.

சிரித்து விட்டுச் சொன்னார் சரி எதற்கும் கவலைப்படாதீர்கள்

நான்தான்

தோமஸ் அல்வா எடிசன் என்றார்.

இதைக் கேட்டதும் அங்கிருந்தவர்களுக்கு எல்லாம் அதிர்ச்சி , ஆச்சரியம். நீங்கள்தானா எடிசன் நீங்கள் எவ்வளவு மின்சார கருவிகளை கண்டுபிடித்து இருக்கிறீர்கள் நீங்கள் இந்த கேள்வியை கேட்கின்றீர்களே?


ஆமாம் நான் தான் கேட்கிறேன் ஏன் என்றால் நான் மின்சாரத்தை பார்த்தது கிடையாது என்றார்.


அன்பு நமது உடற்கூறு அமைப்பிலே இல்லை.

அது நமது உடம்பில் உள்ள சுத்த சக்தியின் வெளிப்பாடு.

அதை உணரத்தான் முடியும். பார்க்க முடியாது .


இறைவன் மேல் கொண்ட பெருங்காதலினால் ஒரு ஒழுக்கமும், அடக்கமும் கொண்டு எத்தனை எத்தனை 🎶திருவாசக பாடல்கள் ,

🎶தேவாரப் பதிகங்கள் போன்றன நமக்கு கிடைத்தன!


அன்பு இல்லாமல் மனிதன் மனிதனாக இருக்க வாய்ப்பில்லை. அன்புதான் மனிதநேயம்.

அதுவே உயர்ஞானம்.

டாக்டர்கள் சொல்லுகின்ற இதயம் அது வெறுமனே இரத்தத்தை தள்ளுகிற ஒரு கருவி அவ்வளவுதான்.

ஞானிகள் சொல்கின்ற இதயம் கண்ணுக்குப் புலப்படாத ஒரு சக்தி.

அங்கேதான் அன்பு உறைந்து கிடக்கிறது.


முடிந்தவரை உயிர்களிடத்தில் அன்பு காட்டுவோம்.

வாழ்வின் உண்மையான பொருள், அன்பு செலுத்துவதிலும், அன்பு செலுத்தப்படுவதிலுமே பொதிந்துள்ளது.


*சிலரிடம் சில விஷயங்களை*

*புரிய வைக்கவே முடியாது.*

*அவர்களாகவே உணர்ந்தால்*

*தான் உண்டு.*


*_பசிக்கு சரியான விளக்கம்_*

*_பட்டினியில் இருப்பவனால்_*

*_மட்டுமே தரமுடியும்._*

*_உணவை வீணடிக்கும் போது_*

*_ஒரு நிமிடம் சிந்தியுங்கள்._*


🟫🟫🟫🟫🟤🟫🟫🟫🟫

No comments:

Post a Comment