வணக்கம்
ஒரு மருத்துவனின் கடமை நோய் நீக்குவது மட்டுமல்ல,
நோய் அணுகா விதிகளை மக்களுக்கு கற்பிப்பதும்,
நோய்க்கான மூல காரணத்தை வேரோடு களைவதும்
மருத்துவனின் கடமையாகிறது.
தங்கள் உறவினருக்கு இது போன்ற நோய்க்கான மூல காரணங்கள் இருக்கும்
அதைக் களைய
உதவுங்கள்.இல்லையெனில் அதே தொந்தரவு மீண்டும் மீண்டும் வரும்.
பாரம்பரிய அக்குபங்சரின் உளவியல் கேட்டறிதல் முறையில் இதனை கையாளுகிறேன்.
அரிப்பு என்பது உடலின் தோல் மூலமாக வெப்பம் வெளியேறுதல் ஆகும்.
அரிப்பு ஏற்படும் பகுதியில் தோன்றும் நிறத்தின் அடிப்படையில் என்ன பாதிப்பு உள்ளது என்பதை அறியலாம்
சிவப்பு நிறத்தில் தென்பட்டால் அவருக்கு மனக்கவலை (அ) மன உளைச்சல் இருக்கலாம்.
கருப்பு நிறத்தில் தென்பட்டால் மன பயம், பய உணர்வுகள், எதிர்மறை எண்ணங்கள், அதீத ஆண் சக்தி விரயம் ஆகியவற்றில் சில இருக்கலாம்.
மேலும் அந்தரங்க காரணங்களும் உண்டு.
நோய் நீங்குவதற்கான என்னுடைய பரிந்துரைகள்
தினமும் இயல்பான வெயிலில் குறைந்தபட்சம் 20 நிமிடங்கள் மேல் சட்டை இல்லாமலோ (அ) மெல்லிய ஆடையோடோ அமரலாம் (காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை சுடும் வெயிலில் தவிர்த்தல் நல்லது)
சோப்பு ஷாம்பு போன்ற
இரசாயன பயன்பாட்டை தவிர்த்து கடலை மாவு, பயத்த மாவு போன்றவை தேய்த்து குளிக்கலாம்.
இதமான பேதி மருந்து உட்கொண்டு வயிறை சுத்தம் செய்து கொள்ளலாம்.
மன அமைதியை பராமரிக்க உதவுங்கள்.
சற்று ஆறுதலாக பேசுவது நன்மை பயக்கும்.
1. ஒரு நாளைக்கு இரு வேளை உணவு முறை போதுமானது.
2. தண்ணீரை அமர்ந்து கொப்பளித்து பருகச் சொல்லுங்கள்
3. தொடர்ச்சியான வேலைகளின் போது இடையிடையே மிகச்சிறிய இடைவெளிகள் எடுத்துக் கொள்க.
4. முடிந்தவரை இரவு விரைவான உறக்கத்திற்கு செல்லுதல்.
5. வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் உப்பு,
கல் உப்பு தூள் உப்பு எதுவாக இருந்தாலும் அவற்றை சற்று வாணலில் போட்டு வறுத்து
இரண்டு மணி நேரம் நிழலில் காயவைத்து
ஒரு பீங்கான் ஜாடியில் வைத்துக் கொண்டு பயன்படுத்த சொல்லுங்கள்.
6. ஒரு 15 நாட்களுக்கு வாழைக்காய், உருளைக்கிழங்கு, பருப்பு வகைகள்,பயறு வகைகள் தவிர்க்க (அ) அளவை மிகவும் குறைத்துக் கொள்ளுதல் நல்லது.
7. குடிப்பதற்கு மிதமான சூட்டில் சீரக நீர் குடித்தல் நல்லது.
(15 நாட்கள்)
8. உணவில் அதிக புளி சேர்ப்பதை குறைத்து தக்காளி, எலுமிச்சை போன்றவை பயன்படுத்திக் கொள்ளலாம்.
நன்றி
No comments:
Post a Comment