Monday, January 27, 2025

சதாப்பு இலை (அ) அறுபதாம் பச்சை

 *தினம் ஒரு மூலிகை

 தாவரவியல் பெயர்:Ruta Graveolens linn சதாப்பு இலை அறுபதாம் பச்சை இந்த செடி இருக்கும் இடத்தில் நாய்கள் பூனைகள் போன்ற வீட்டு விலங்குகள் நெருங்காது ஈக்களும் அணுகாது உடைந்த எலும்புகளை விரைவில் சேர வைத்து எலும்பு முறிவு பாதிப்புகளை குணமாக்கும் ஆற்றல்

பெற்றது பால் மாந்தம் முதலியவற்றால் உண்டாகும் ஜுரம் கணபதி பிரசவ வலி ஆகியன குணமாகும் இதன் இலையுடன் சிறிது மிளகு சேர்த்து வெண்ணை போல் அரைத்து வேலைக்கு இரண்டு அல்லது மூன்று குண்டுமணி அளவு தாய்ப்பாலில் கலக்கி குழந்தைகளுக்கு கொடுக்க மார்பில் உள்ள கோழை அகற்றி ஜுரம் வலி முதலியவற்றை போக்கும் இந்த இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து குழந்தைகளுக்கு உடம்பில் பூசை குளிக்க செய்துவர சீதளம் சம்பந்தமான பல நோய்கள் தீரும் இலையை நிழலில் உலர்த்தி அத்துடன் சீரகம் அதிமதுரம் கருஞ்சீரகம் சன்ன லவங்கப்பட்டை சதகுப்பை வகைக்கு ஒரு பங்கு ஆறு பங்கு தனியா இவற்றை கல்வத்தில் போட்டு நன்றாக இடித்து சூரணம் செய்து சிறிதளவு கற்கண்டு சேர்த்து தினம் இரண்டு முதல் மூன்று வேளை கொடுத்து வர வாயுவை குணப்படுத்தும் நன்றி

No comments:

Post a Comment