*தினம் ஒரு மூலிகை*
தாவரவியல் பெயர்Benzoin Dryand styrax சாம்பிராணி ஒரு வாசனை திரவியம் குங்கிலியம் மர தண்டிலிருந்து கசியும் ஒருவகை ரெசினே சாம்பிராணி என்று அழைக்கப்படுகிறது இறந்த உடலை பதப்படுத்த மம்மிகளில் சாம்பிராணியை பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் பல உள்ளன நுண்கிருமிகளை கட்டுப்படுத்துவதல்
இறைவழிபாட்டில் சாம்பிராணியை பயன்படுத்துகிறோம் சாம்பிராணியை அனலில் காட்டி லேசாக உருகியதும் கிராம்பு தைலத்துடன் கலந்து நெற்றியில் பற்று போட தலைவலி நீங்கும் குளியல் மஞ்சள் ஒரு பங்கு கஸ்தூரி மஞ்சள் ஒரு பங்கு பொரித்த வெங்காரம் பங்கு சாம்பிராணி அரைப்பங்கு மிளகு அரை பங்கு தோல் நீக்கிய சுக்கு அரை பங்கு ஜாதிக்காய் அரைப்பங்கு வருத்த ஓமம் கால் பங்கு கிராம்பு கால் பங்கு கற்பூரம் கால்பங்கு இவற்றை இஞ்சி சாறு விட்டு மைய அரைத்து பட்டாணி அளவு மாத்திரைகளாக உருட்டி வைத்துக் கொள்ள வேண்டும் தேவைப்படும் பொழுது வெந்நீரில் குழப்பி நெற்றியில் பற்று போட தலைவலி நீங்கும் நன்றி
No comments:
Post a Comment