*தினம் ஒரு மூலிகை* *
தாவரவியல் பெயர்:Dipteracanthus Patulus கிரந்தி நாயகம் சித்த மருத்துவத்தில் கிருமி நாசினியாக பயன்படுத்தப்படுகிறது கிரந்தியினால் தோன்றும் ஆறாத விரணங்களை ஆற்ற பயன்படுகிறது கிரந்தி நாயகம் பெரும்பாலும் எல்லா இடங்களிலும் தானாக வளரும்
கிரந்தியினால் தோன்றும் நாட்பட்ட விரணங்களை ஆற கிரந்தி நாயகம் இலையை மைய அரைத்து நீர் வடியும் புண்களின் மேல் தொடர்ந்து தடவி வர வேண்டும் இதனால் நீர் நன்கு வெளியேறி புண்கள் விரைவில் ஆறுவதுடன் துர்நாற்றம் நீங்கும் இதன் இலையை அரைத்து நகச்சுற்று புண் மற்றும் சிரங்கு ஆகியவற்றிற்கு பூசி வர குணமாகும் இதன் இலைகள் 5(அ)6 மென்று சாப்பிட தேள் பாம்பு ஆகியவற்றின் நஞ்சு நீங்கும் கடிவாயில் இதன் இலையை அரைத்து பூசலாம் இலையுடன் சம எடை நாட்டு கல்நார் சேர்த்து அரைத்து அடைத்தட்டி காய வைத்து வறட்டினிடையே வைத்து புடமிட்டு எடுத்து பொடித்து பல் தேய்த்துவர பல்லாட்டம் பள்ளரனை பல் சொத்தை ஈறு வீக்கம் ரத்தக் கசிவு ஆகியன தீரும் இதனை பட்டாசு காய்செடி என்றும் அழைப்பார்கள் நன்றி
No comments:
Post a Comment