**தேசிய தடுப்பூசி தினம்.*
💉 போலியோவை நாட்டிலிருந்தே விரட்ட வேண்டும் என்பதற்காக மார்ச் 16ஆம் தேதி தேசிய தடுப்பூசி தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
💉 போலியோ என்ற கொடிய இளம்பிள்ளைவாத
நோய் குழந்தைகளின் கைகால்களை நிரந்தரமாக செயலிழக்கச் செய்கின்றன.💉 போலியோ நுண்கிருமிகள் அசுத்தமான தண்ணீர் மற்றும் உணவுப் பொருட்கள் மூலம் குழந்தைகளிடையே பரவுகின்றன.
💉 அதற்காக 1995ஆம் ஆண்டு இந்தியாவில் போலியோ ஒழிப்பு இயக்கம் துவங்கப்பட்டது. ஆண்டிற்கு இரண்டுமுறை போலியோ சொட்டு மருந்து நாடு முழுவதும் வழங்கப்பட்டதன் மூலம் 2014ஆம் ஆண்டு போலியோ அற்ற நாடாக இந்தியா அறிவிக்கப்பட்டது.
*முக்கிய நிகழ்வுகள்.*
👉 முன்னாள் தமிழக முதல்வர் பி.எஸ்.குமாரசாமி ராஜா 1957ஆம் ஆண்டு மார்ச் 16ஆம் தேதி மறைந்தார்.
👉 1926ஆம் ஆண்டு மார்ச் 16ஆம் தேதி முதலாவது திரவ எரிபொருளினால் உந்தும் ஏவுகணையை மசாசூசெட்சில் ராபர்ட் கொடார்ட் என்பவர் செலுத்தினார்.
👉 குழந்தை இலக்கிய கவிஞர் அழ.வள்ளியப்பா 1989ஆம் ஆண்டு மார்ச் 16ஆம் தேதி மறைந்தார்.
No comments:
Post a Comment