Thursday, March 20, 2025

இன்றைய நாளில் பிறந்தவர்.* (19-மார்ச்

 *🌹)

*டி. கே. பட்டம்மாள்.*

🎼 புகழ்பெற்ற கருநாடக இசைப் பாடகியான டி. கே. பட்டம்மாள் என்று பரவலாக அறியப்படும் தாமல் கிருஷ்ணசாமி பட்டம்மாள் 1919ஆம் ஆண்டு மார்ச் 19ஆம் தேதி காஞ்சிபுரத்தில் பிறந்தார். 

🎼 இவரது இயற்பெயர் அலமேலு. செல்லமாக 'பட்டா' என்று அழைக்கப்பட்டார்.

🎼 பட்டம்மாள் கான சரஸ்வதி, இசைப் பேரரசி, சங்கீத

சரஸ்வதி என்றெல்லாம் அழைக்கப்படுகிறார். 


🎼 பத்ம பூசண், சங்கீத கலாசிகாமணி விருது, பத்ம விபூசண், சங்கீத நாடக அகாடமி விருது, சங்கீத கலாநிதி விருது, கலைமாமணி விருது போன்ற பல விருதுகளை பெற்றுள்ளார். 


🎼 கர்நாடக சங்கீத பெண் மும்மூர்த்திகள் ஒருவர் (மற்றவர்கள் எம். எஸ். சுப்புலட்சுமியும், எம். எல். வசந்தகுமாரியும்) எனப் போற்றப்பட்டவர். 


🎼 இருபதாம் நூற்றாண்டின் முக்கிய கர்நாடக இசைப் பாடகிகளில் ஒருவரான பட்டம்மாள் 2009ஆம் ஆண்டு மறைந்தார்.



*எம்.பி.என்.பொன்னுசாமி.*


👉 தில்லானா மோகனாம்பாள் படத்தில் வருகின்ற நலம்தானா? என்கிற பாடலுக்கு நாதஸ்வரம் வாசித்தவர்களில் ஒருவரான எம்.பி.என்.பொன்னுசாமி 1933ஆம் ஆண்டு மார்ச் 19ஆம் தேதி மதுரையில் பிறந்தார்.


👉 நமக்கெல்லாம் அந்த இனிய இசையை வழங்கிய மற்றொருவர் நாதஸ்வரக் கலைஞரான எம்.பி.என்.சேதுராமன் (எம்.பி.என்.பொன்னுசாமி சகோதரர்) ஆவார். பொன்னுசாமி ஒன்பதாவது வயதில் இருந்து தனது சகோதரரு டன் இணைந்து இசை நிகழ்ச்சிகளை செய்யத் தொடங்கினார்.


👉 இவர் கலைமாமணி விருது, நாதஸ்வர கலாநிதிஇ,சங்கீத சூடாமணி விருதுஇ, இசைப்பேரறிஞர் விருது போன்ற பல விருதுகளை பெற்றுள்ளார்.

No comments:

Post a Comment