Saturday, March 1, 2025

இன்றைய நாளில் பிறந்தவர்.* (01-மார்ச்)

*எம்.கே.தியாகராஜ பாகவதர்.*

🎼 தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த நடிகர் எம்.கே.தியாகராஜ பாகவதர் 1910ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி தமிழ்நாட்டிலுள்ள மாயவரத்தில் (தற்பொழுது மயிலாடுதுறை) பிறந்தார்.


🎼 இவர் தன்னுடைய 16வது வயதில் மேடைக் கச்சேரியை அரங்கேற்றினார். 4 மணி நேரம் நடந்த அந்த

கச்சேரி பலரது பாராட்டுகளையும் பெற்றது. 'தியாகராஜன் ஒரு பாகவதர்' என்று விழாவில் மிருதங்க வித்வான் புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளை புகழாரம் சூட்டினார். அதன் பிறகு இவரது பெயருடன் அந்த பட்டமும் சேர்ந்துகொண்டது.


🎼 திருச்சியில் நடந்த பவளக்கொடி நாடகத்தில் அர்ஜுனனாக (1926) நடித்தார். அந்த நாடகம் அதே பெயரில் திரைப்படமாக (1934) வந்தது. படத்தில் 55 பாடல்களில் 22 பாடல்களை இவர் பாடியிருந்தார்.


🎼 1944ஆம் ஆண்டு வெளிவந்த இவரது ஹரிதாஸ் திரைப்படம் சென்னை பிராட்வே திரையரங்கில் 3 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஓடி, 3 தீபாவளி கண்ட திரைப்படம் என்ற சாதனையைப் படைத்தது.


🎼 தமிழ்த் திரைப்படத்துறையின் முதல் நட்சத்திர அந்தஸ்து பெற்ற உயர் நட்சத்திர கதாநாயகனாக போற்றப்பட்ட தியாகராஜ பாகவதர் 1959ஆம் ஆண்டு மறைந்தார்.

No comments:

Post a Comment