Friday, March 21, 2025

நத்தை சூரி

 *தினம் ஒரு மூலிகை* 

 *தினம் ஒரு மூலிகை நத்தை சூரி அல்லது குழி மீட்டான்*

நத்தைச்சூரி என்பது ஒரு காயகற்ப மூலிகை ஆகும் நத்தைச்சூரி விதை பொடி மற்றும் அமுக்கிரான் கிழங்கு பொடி இரண்டையும் சம அளவு எடுத்து பாலில் கலந்து உண்டு வர விந்து கட்டு நத்தைச்சூரி செடி இன் இலையை பொடியாக்கி பால் சேர்த்து

பருகிவர உடல் பலம் பெறும் ஆண்மை கோளாறுகள் முற்றிலும் நீங்கும் சக்தி இதற்கு உண்டு. நத்தைச்சூரி விதையை லேசாக வருத்து பொடியாக்கி தேனில் கலந்து குழைத்து தினமும் சாப்பிட்டு வர உடலில் உள்ள வியாதிகள் நீங்கும் உலகத்தில் உள்ள எல்லா மூலிகைகளுக்கும் சாபம் உண்டு ஆனால் நத்தை சூரி என்கின்ற மூலிகைக்கு மட்டும் சாபம் கிடையாது இது ஒரு மகா மூலிகை யாகும் வசிய மூலிகை ஆகும் இந்த மூலிகையை நாம் உண்டு வந்தால் உடலுக்கு எவ்வித நோயும் ஏற்படாது நீண்ட நாட்களுக்கு உயிர் வாழலாம் விந்து கெட்டிப்படும் காயகற்ப மூலிகை ஆகும் விதை பொடி பனை வெல்லம் சேர்த்து தேனீராக அருந்தி வந்தால் கல்லடைப்பு ஏற்படாது உடல் இருக்கும் சித்தர்கள் இதை மக மூலிகை என்று கூறியுள்ளனர்

இதை சூரி கடுகம், குழி மீட்டான் தாருணி நத்தை சுண்டி என பல பெயர்கள் இதற்கு உண்டு இதன் இலைகள் தனித்தனி இலைகளாக எதிரிலே குறுக்கும் மறுக்கும் அடுக்கத்தில் இருக்கும் தண்டின் கணுக்களில் காம்பில்லாத சிறு மலர்கள் காணப்படும் உடலை தேற்றி உடல் சூட்டை தணித்து குளிர்ச்சி உண்டாக்கும் காய்ச்சல் பெரும் கழிச்சல் சீதபேதி வாத பித்த கப நோய்களுக்கு மிகச்சிறந்த பலன் அளிக்கும் இதன் பசுமையான வேரை சிதைத்து அதன் எடைக்கு பத்து மடங்கு கொதிநீரில் சேர்த்து இரண்டு மணி நேரம் ஊற வைத்து வேண்டும் ஊறியதும் அதனை வடித்து கால் கப்பு அளவு தினம் இரண்டு அல்லது மூன்று வேளை குடித்து வர உடலில் தோன்றிய அனைத்து நோய்களும் படிப்படியாக குறையும் உடலில் ஏற்படும் வீக்கங்களுக்கு இதன் இலையை அரைத்துக் கட்ட வீக்கம் கட்டி ஆகியவை கரையும் வேரை அரைத்து பசும்பாலில் கலக்கி வடிகட்டி இரண்டு வேளை பருக தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரக்கும் நன்றி.

No comments:

Post a Comment