Friday, March 21, 2025

அழகியல்

 **

♾️♾️💞♾️♾️

💞

எதார்த்தமாய்

சிரித்திடும் 

மழலையின்

சிரிப்பு அழகு...!!!


💞

எதிர்பார்ப்பின்றி

உதவி செய்யும்

மனிதர்களின்

செயல் அழகு...!!!


💞

பிறர் மனம் 

நோகாமல் பேசும்

கலை அழகு...!!!


💞

சூழ்நிலை அறிந்து

ஆறுதல் கூறும்

நட்பும், உறவும்

அழகு...!!!


💞

கோபத்தி்ல்

இருக்கும் போது

சிரிக்க வைக்கும்

வாழ்க்கை துணை 

அழகு...!!!


💞

குறைந்த பொருள்

ஆதாரத்தோடு

நிறைவாக குடும்பம்

நடத்திட தெரிந்த

இல்லத்தரசி

அழகியலுக்கே

அழகு...!! 


💞

அவசியம்

எது...?

ஆடம்பரம் 

எது..?

என்று

பகுத்தறிய 

தெரிந்த

மனிதர்களின் 

மனம்

அழகோ அழகு...!!


🌷🦚🌷🦚🌷🦚🌷

நேசமுடன்

No comments:

Post a Comment