Sunday, March 16, 2025

🌹 இன்றைய நாளில் பிறந்தவர்.* (16-மார்ச்)

 முனைவர் இரா.திருமுருகன்.*

✍ சிறந்த தமிழ் அறிஞரும், இயற்றமிழ், இசைத்தமிழில் வல்லவருமான முனைவர் இரா.திருமுருகன் 1929ஆம் ஆண்டு மார்ச் 16ஆம் தேதி புதுச்சேரி மாநிலத்தில் கூனிச்சம்பட்டு என்ற ஊரில் பிறந்தார். இவரின் இயற்பெயர் சுப்பிரமணியன். தமிழ் மீதான பற்றால் தன்

பெயரை திருமுருகன் என மாற்றிக்கொண்டார்.


✍ தமிழ் வளர்ச்சிக்காகவே பல போராட்டங்களை முன்னின்று நடத்தியவர். புதுவையில் தமிழ் ஆட்சிமொழி சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். அதன் அடிப்படையில் அரசு ஊழியர்கள் கட்டாயம் தமிழிலேயே கையெழுத்திட வேண்டும் என்று குரல் கொடுத்தார்.


✍ தமிழுக்கு புதிய இலக்கணம் உருவாக்குவதிலும்,சைத்தமிழ் யாப்பிலக்கணம் உருவாக்குவதிலும் ஈடுபட்டார். இலக்கணச்சுடர், இயல், இசை செம்மல், முத்தமிழ் சான்றோர், நல்லாசிரியர், மொழிப்போர் மறவர், பாவலர் அரிமா, கலைச்செல்வம் உள்ளிட்ட பல விருதுகள் மற்றும் பட்டங்களை பெற்றுள்ளார்.


✍ இலக்கணக் கடல் எனப் புகழப்பட்டவர். இவர் 55 வரலாற்று நூல்களை எழுதியுள்ளார். இவரது 40 ஆண்டுகால தமிழ்ப் பணிகள், தமிழியக்கம் என்ற பெயரில் வெளியான நூல்களில் இடம்பெற்றுள்ளன.


✍ தமிழ் வளர்ச்சி, தமிழர் நலனுக்காகவே இறுதிவரை பணியாற்றிய இரா.திருமுருகன் 2009ஆம் ஆண்டு மறைந்தார்.



*பொட்டி சிறீராமுலு.*


💪 விடுதலை போராட்ட வீரர் பொட்டி சிறீராமுலு 1901ஆம் ஆண்டு மார்ச் 16ஆம் தேதி சென்னையில் பிறந்தார். இவர் காந்தியின் அகிம்சை வழியைப் பின்பற்றியவர்.


💪 ஆந்திர மாநிலம் உருவாகத் தன்னையே தியாகம் செய்ததால், இவர் ஆந்திர மாநிலத்தவர்களால் அமரஜீவி என்று போற்றப்பட்டார்.


💪 1930ஆம் ஆண்டு உப்புச் சத்தியாகிரகத்திலும்இ 1941-1942ஆம் காலகட்டத்தில் தனிநபர் சத்தியாகிரகம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் போன்றவற்றில் கலந்துகொண்டு மும்முறை சிறைத்தண்டனைப் பெற்றார்.


💪 இந்திய விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாகப் போராடிய இவர் 1952ஆம் ஆண்டு மறைந்தார்.



*பிபின் ராவத்.*


👲 முப்படைகளின் முதல் தளபதி பிபின் ராவத் 1958ஆம் ஆண்டு மார்ச் 16ஆம் தேதி உத்தரகாண்ட் மாநிலத்தில் பிறந்தார்.


👲 இந்தியத் தரைப்படையின் 27வது தலைமைப் படைத்தலைவராக பணியாற்றிய இவரை, இந்தியாவின் முதலாவது பாதுகாப்புப்படைகளின் தலைமைப் படைத்தலைவராக, இந்தியக் குடியரசுத் தலைவரால் 2019ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி நியமிக்கப்பட்டார்.


👲 இவர் இந்தியப் பாதுகாப்புப்படைகளின் தலைமைப் படைத்தலைவராக 2020ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி பதவியேற்றார்.


👲 இவரின் 40 ஆண்டுகால இராணுவச் சேவையினை அங்கீகரிக்கும் வகையில் பல விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.


👲 பரம் விசிட்ட சேவா பதக்கம், உத்தம் சேவா பதக்கம், அதி விசிட்ட சேவா பதக்கம், யுத் சேவா பதக்கம், சேனா பதக்கம், விசிட்ட சேவா பதக்கம் (இருமுறை) போன்ற பல பதக்கங்கள் இவருக்கு வழங்கப்பட்டது.


👲 இந்திய அரசு இவருக்கு 2022ஆம் ஆண்டிற்கான பத்ம விபூஷன் விருதினை இவரது மறைவிற்குப்பின் வழங்கியது.


👲 இவர் தமிழ்நாட்டின் குன்னூர் அருகே மில் எம்.ஐ.-17 என்ற உலங்கு வானூர்தியில் பயணித்த போது மோசமான வானிலை காரணமாக வானூர்தி விபத்துக்குள்ளாகி 2021ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி மறைந்தார்.

No comments:

Post a Comment