Sunday, March 16, 2025

பித்தவாய்வு நீங்க:

தே.பொருட்கள் 

1. சுக்கு – 100 கிராம்

2. மிளகு – 100 கிராம்

3. திப்பிலி – 100 கிராம்

4. சீரகம் – 100 கிராம்

5. ஏலக்காய் – 100 கிராம்

6. கொத்துமல்லி – 100 கிராம்

7. சின்னகற்கண்டு – 1 கிலோ

8. எலுமிச்சைப்பழம் – 20

9. இளநீர் – 3

10. பசுநெய் – ¼ கிலோ

11. தேன் – ½ கிலோ

முதலில் 1 முதலில் 6 வரை சரக்குக்களைத் தூள் செய்து ஒன்றாகக் கலந்துகொள்ளவும்.

இளநீரை ஒரு பாத்திரத்தில் இட்டு அடுப்பேற்றவும். பின்னர் பாத்திரத்தில் எலுமிச்சைப் பழங்களைப்

பிழிந்து சாறு சேர்த்து, அத்துடன் கற்கண்டையும் சேர்த்து சிறு தீயாய் எரிக்கவும். பாகுபதம் வந்ததும் ஏற்கனவே தயார் செய்து வைத்துள்ள பொடியை சிறிது சிறிதாய் தூவிக் கிளறவும். பின்னர் தேன் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். லேகியம் நன்கு ஆறிய பின்பு நெய்யை உருக்கி கிளறி பத்திரப்படுத்தவும்.

இந்த லேகியத்தில் 1 ஸ்பூன் (5கிராம்) அளவு காலை, மதிய உணவுக்குப்பின் சாப்பிட்டுவர பித்த நோய்கள், மயக்கம், ரத்த அழுத்தம், மார்வு வலி, காசநோய், பித்தவாய்வு ஆகியன நீங்கும். இது கை கண்ட அனுபவ மருந்து.

No comments:

Post a Comment