Tuesday, March 4, 2025

 #வாழ்க்கையில் வழி விட்டவர்களையும் வலி கொடுத்தவர்களையும் மறந்து விடாதீர்கள்......

நேற்றுவரை முக்கியமாக இருந்த நாம் இன்று யாரோவாக பார்க்கப் படுகின்றோம் என்று உணர்ந்தால்....

அடுத்த நொடியே அமைதியாக விலகி விடுவது உங்களுக்கு நல்லது.!!

உண்மையாய் இருங்கள் உயிராய் இருக்காதீர்கள் யார் எப்போது எப்படி மாறுவார்கள் என்று

தெரியாது உலகம் போலியானது கவனமாக இருங்கள்..

யாரையும்

முழுவதும் சார்ந்து இருக்காதீர்கள் 

காலம் மாறும்போது கைவிடப்பட்டால் கலங்கிப் போவீர்கள்.

யாரையும் நம்பி வாழாதீர்கள்

உங்களை நம்பி வாழப் பழகுங்கள்.!

நாம் யாரும் தானே மாறுவதில்லை யாரோ ஒருவரால் மாற்றப் படுகிறோம். நல்லவராக.... கெட்டவராக.... ஏமாளியாக..... அப்பாவியாக...... அறிவாளியாக.... முட்டாளாக.......

யாரிடம் வேண்டுமானாலும் இறங்கி போங்கள்

ஆனால் உங்களை வேண்டாம் என்று ஒதுக்குபவர்களிடம் ஒரு துளியேனும் இறங்கி போகாதீர்கள்.

விட்டுட்டு போனவங்க பிஞ்சு போன செருப்பு மாதிரி அதை தச்சிப்போட்டாலும் பிச்சிக்கிட்டு தான் போகும்..

நம் வாழ்க்கையில் காணாமல் போனவர்களை தேடலாம் ஆனால்

கண்டுக்காமல் போனவர்களை தேடவே கூடாது...

நடக்கையில் செருப்புக்குள் சிக்கிய கல்லும்...

வாழ்க்கையில் விடாமல் துரத்தும் கவலையும்...

உறுத்திக் கொண்டே தான் இருக்கும்.

நீங்கள் உதறித் தள்ளும் வரை..

மனதால் எவ்வளவு பலமானவர்களையும் அழ வைக்கும் ஒரே உண்மையான #அன்பு மட்டுமே..!

யாரையும் உடலாலும் மனதாலும் காயப்படுத்தாதீர்கள். இன்று நீங்கள் பலம் மிக்கவராக இருக்கலாம், ஆனால் காலம் அதை அப்படியே புரட்டிப் போட ஒரு நொடி போதும். காலம் உங்களை விட பலம் மிக்கது என்பதை மறந்து விடாதீர்கள்.

நெருக்கமான உறவு விலகி விட்டால், உங்கள் இதயம் உடைந்து விட்டது, வாழ்க்கை முடிந்து விட்டது என்று முடிவு எடுக்காதீர்கள்... இனிதான் உங்கள் மூளை இயங்க ஆரம்பிக்க வேண்டும்...

No comments:

Post a Comment