*🏵️ இன்றைய நாளில் பிறந்தவர்.*
(02-மார்ச்)
*குன்னக்குடி வைத்தியநாதன்.*
🎻 பிரபல வயலின் இசைக்கலைஞரான குன்னக்குடி வைத்தியநாதன் 1935ஆம் ஆண்டு மார்ச் 2ஆம் தேதி சிவகங்கை மாவட்டம் குன்னக்குடியில் பிறந்தார். இவரது சகோதர, சகோதரிகள் அனைவருமே இசைக்கலைஞர்கள்.
🎻 வயலின் கற்றுக்கொண்டு தனது 12வது வயதில் முதல் இசை நிகழ்ச்சியில் பங்கேற்று தந்தைக்கு பெருமை சேர்த்தார். 1976ஆம் ஆண்டு முதல் வயலின் இசையை
கொண்டு கச்சேரி செய்தார்.🎻 1969ஆம் ஆண்டு *'வா ராஜா வா'* என்ற திரைப்படத்திற்கு முதன்முதலாக இசையமைத்தார். இசைப்பேரறிஞர், சங்கீத நாடக அகாடமி, சங்கீத கலாசிகாமணி, கலைமாமணி, பத்மஸ்ரீ உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
🎻 *'வயலின் சக்கரவர்த்தி'* என்று போற்றப்பட்ட குன்னக்குடி வைத்தியநாதன் 2008ஆம் ஆண்டு மறைந்தார்.
*ரா.பி.சேதுப்பிள்ளை.*
👉 எழுத்தாலும் செந்தமிழ்ப் பேச்சாலும் தமிழுக்குப் பெருமை சேர்த்த அறிஞர் ரா.பி.சேதுப்பிள்ளை 1896ஆம் ஆண்டு மார்ச் 2ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம் ராசவல்லிபுரத்தில் பிறந்தார்.
👉 இவர் 1936ஆம் ஆண்டு முதல் 25 ஆண்டுகாலம் சென்னை பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். தமிழ்ப் பேரகராதியை தொகுக்க தமிழ் ஆராய்ச்சித் துறைத் தலைவர் வையாபுரிப் பிள்ளைக்கு உதவினார். வையாபுரிப் பிள்ளைக்குப் பிறகு பேரகராதி தொகுப்புப் பணியை ஏற்றார்.
👉 இவர் 14 கட்டுரை நூல்கள், 3 வாழ்க்கை வரலாற்று நூல்கள் என 20-க்கும் மேற்பட்ட உரைநடை நூல்களை எழுதியுள்ளார். 4 நூல்களை பதிப்பித்தார். இவரது *'தமிழின்பம்'* என்ற நூலுக்கு இந்திய அரசின் சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. சொல்லின் செல்வர் என்று புகழப்பட்டார்.
👉 *'செந்தமிழுக்கு சேதுப்பிள்ளை'* என்று போற்றப்பட்ட இலக்கியப் பேரறிஞர் ரா.பி.சேதுப்பிள்ளை 65வயதில் (1961) மறைந்தார்.
No comments:
Post a Comment