Friday, March 14, 2025

🏵️ இன்றைய நாள்.* (14-மார்ச்)

*உலக π (பை) தினம்.*

👉 ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 14ஆம் தேதி உலக π (பை) தினமாக கொண்டாடப்படுகிறது.

👉 இது π என்னும் புகழ்பெற்ற கணித மாறிலியை கொண்டாடும் நாளாகும்.

👉 அமெரிக்க நாட்காட்டியின்படி 3/14 (3.14) என்பது மார்ச் 14ஐ குறிக்கும். எனவே, இத்தினம் π-யைக் குறிக்கும் தேதியாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

👉 இந்த π-யின் மதிப்பு 3.14 என்பதாகும். 1988ஆம் ஆண்டு லேரி

ஷா என்ற அமெரிக்க இயற்பியல் அறிஞர் முதல் π தினத்தைக் கொண்டாடியது முதல் இவ்வழக்கம் இன்று வரை தொடர்கிறது.

                      

*சர்வதேச கணித தினம்.*


✍ ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 14ஆம் தேதி சர்வதேச கணித தினம் கொண்டாடப்படுகிறது.


✍ 2000ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார நிறுவனம் (UNESCO) இத்தினத்தை அறிவித்தது.


✍ முதல் உலக கணித தினம் 2007ஆம் ஆண்டு மார்ச் 14ஆம் தேதி கொண்டாடப்பட்டது.


✍ கணிதத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தவும், அனைத்து மக்களிடையேயும் கணித அறிவை மேம்படுத்தவும் இத்தினம் கொண்டாடப்படுகிறது.


நோக்கம்:


✍ கணிதத்தின் மதிப்பை உலகிற்கு எடுத்துச் செல்வது.


✍ கணிதத்தின் மீது மக்களின் ஆர்வத்தை அதிகரிப்பது.


✍ கணித கல்வியின் தரத்தை மேம்படுத்துவது.


✍ கணிதத்தில் சிறந்து விளங்கும் மாணவர்களை ஊக்குவிப்பது.


முக்கியத்துவம்:


✍ கணிதம் அறிவியல், பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் நிதி போன்ற பல துறைகளுக்கு அடிப்படையாகும்.


✍ கணிதம் நமது தினசரி வாழ்வில் பல வழிகளில் பயன்படுகிறது.


✍ கணிதம் நமது சிந்தனை திறன், தர்க்கம் மற்றும் பிரச்சனை தீர்க்கும் திறனை மேம்படுத்த உதவுகிறது.


✍ வாழ்வில் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை மக்களுக்கு கற்பிக்க பட்டறைகள் நடத்தப்படுகின்றன.


*முக்கிய நிகழ்வுகள்.*


👉 1794ஆம் ஆண்டு மார்ச் 14ஆம் தேதி எலி விட்னி என்பவர் பஞ்சை தூய்மைப்படுத்தி அதன் விதையில் இருந்து பிரித்தெடுக்கும் காட்டன் ஜின் என்ற இயந்திரத்திற்கான காப்புரிமம் பெற்றார்.


👉 அறிவியல் சார்ந்த பொதுவுடைமையை வகுத்தவருள் முதன்மையானவரான ஜெர்மன் தத்துவவியலாளர் கார்ல் மார்க்ஸ் 1883ஆம் ஆண்டு மார்ச் 14ஆம் தேதி மறைந்தார்.


👉 ஒளிப்படச்சுருளை கண்டுபிடித்த அமெரிக்க கண்டுபிடிப்பாளர் ஜார்ஜ் ஈஸ்ட்மன் 1932ஆம் ஆண்டு மார்ச் 14ஆம் தேதி மறைந்தார்.


👉 கோட்பாட்டு இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் 2018ஆம் ஆண்டு மார்ச் 14ஆம் தேதி மறைந்தார்.

No comments:

Post a Comment