Sunday, January 26, 2025

நம்பிக்கை

 🟪🟪🟪🟪🟣🟪🟪🟪🟪


*இன்றைய சிந்தனை*

_*.*_

_*கேட்ட வரம் தரும் தேவலோக மரம் போல,*_

_*நம்பிக்கை அனைத்தையும் வாரி வழங்கும்.*_

புயல் வருகின்ற நேரமும் இடமும் கழுகிற்குத் தெரியுமாம்.

புயல் வருகின்ற சில நாட்களுக்கு முன்னேயே கழுகு உயரமான இடத்திற்குச் சென்றுவிடும். புயல் புறப்படும்போது அதன் காற்று தன்னை உயர்த்திச் செல்லுமாறு தன் இறக்கைகளை விரித்துக் காத்திருக்கும். புயல் தன்னை அடித்துச்செல்லும்போது அதன் வேகத்தைப் பயன்படுத்தி அக்காற்றைவிட உயரமாகப் பறந்து விடும். புயல் கீழே, கழுகு மேலே என்று வேகமாகப் பறந்து செல்லும்.

கழுகு புயலைப் பற்றி பயப்படுவதில்லை. புயலின் அபாயத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி தன்னைக் காத்துக்கொள்வதோடு

மட்டுமல்லாமல் தன்னால் இன்னும் உயரமாகச் செல்லமுடியும் என்ற தன்னம்பிக்கையையும் வளர்த்துக் கொள்கின்றது.


வாழ்க்கையில் நமக்குத் துன்பங்கள் வரவே கூடாது என நினைக்கிறோம். அதற்காக 'வருமுன் காப்போம்' என்ற அடிப்படையில் பல துன்பங்கள் பட்டு 'வந்துவிடும்' எனக் கற்பனை செய்யும் துன்பங்களை விட அதிகமாகவே துன்பப்படுகிறோம்.


அப்படியே ஏதாவது ஒரு பிரச்சினை வந்துவிட்டால் அதிலிருந்து எப்படித் தப்பி ஓடுவது என்பதில்  நேரத்தைச் செலவிடுகிறோம். மாறாக வருகின்ற துன்பத்தைப் பயன்படுத்தி அதன் வழியாக இன்னும் அதிக உயரத்திற்குப் பறந்து செல்வது கழுகு நமக்குச் சொல்லும் பாடம்.


இதற்கு நமக்குத் தேவையானது நம்பிக்கை – நம் மேலும்.

கடவுள் மேலும். பறவைகள் கிளைகளில் அமர்ந்திருப்பது அந்தக் கிளைகள் வலிமையானவை என்ற நம்பிக்கையில் அல்ல, மாறாக, தங்கள் இறக்கைகள் வலிமையானவை என்ற நம்பிக்கையில்தாம். 'இவ்வளவு நாட்கள் காத்து வந்த இறைவன் இனியா கைவிடுவார்?' என்று நடந்த நிகழ்வுகள் நமக்கு இறைவன்மேல் நம்பிக்கை தந்தால் நடக்கவிருக்கின்ற எந்த நிகழ்வுகளையும் நாம் எளிதாக எதிர்கொள்ளலாம்.


நீதி: கடவுள் மேல் நம்பிக்கை வைத்திருப்பவர்கள் கழுகுகள்போல் இறக்கை விரித்து உயரே செல்வர்.


_*சொல்ல முடியாத சோகங்களும், வெல்ல முடியாத சிக்கல்களும், தீர்க்க முடியாத பிரச்னைகளும், இழக்க விரும்பாதவற்றை இழப்பதும், பிறகு எல்லாம் சரியாவதும் வாழ்க்கையின் நியதி.*_


_*மனதில் சந்தோஷம் நிறைந்திருந்தால், கண் முன்னே தெரியும் அனைத்தும் அழகாகத் தோன்றும்.*_


_*பிறரை மகிழ்ச்சிப் படுத்த பெரிய செயல்கள் அவசியமில்லை. ஒரு சில இனிய சொற்களே போதுமானது.*_


_*இறைவனை சரணடைந்தவர்களின் வாழ்க்கைப் பாதையில் தடையும் இல்லை, தவறும் இல்லை, தண்டனையும் இல்லை.*_


🟪🟪🟪🟪🟣🟪🟪🟪🟪

No comments:

Post a Comment