Thursday, January 2, 2025

எலுமிச்சம்ப்புல்

 *தினம் ஒரு மூலிகை* *எலுமிச்சம்ப்புல் (அ) லெமன் கிராஸ் (அ) வாசனை புல்*


தாவரவியல் பெயர்:Cymbopogon Citratus Stapf வியாபார ரீதியாக பயிர் செய்யப்படும் வாசனைப் போல் எலுமிச்சைப்புல் என்று அழைக்கப்படும் இந்த புல்லில் இருந்து எடுக்கும் எண்ணெய் மருத்துவத்தில் பயன்படுகிறது மூட்டு வலி தைலங்கள் தலைவலி களிம்புகள் தயாரிக்க பயன்படுகிறது

இந்த புல்லில் இருந்து தயாரிக்கப்படும் சுடுநீர் லெமன் டீ என்றும் அழைக்கிறார்கள் ஒன்று முதல் இரண்டு தேக்கரண்டி கொடுத்து வர குழந்தைகளுக்கு உண்டாகும் வயிற்று வலி நீங்கி நன்கு பசி உண்டாகும் இதிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் மூன்று துளிகள் முதல் ஆறு துளிகள் சர்க்கரையில் கலந்து உள்ளுக்கு சாப்பிட்டு வர வயிற்று பெருமல் வயிற்று வலி மற்றும் வாந்தி ஆகியன குணமாகும் இந்த வாசனை புல் எண்ணெய்யுடன் சம அளவு தேங்காய் எண்ணெய் கலந்து வாத பிடிப்பு கீல்வாதம் மற்றும் நரம்பு குடைச்சல் போன்ற நோய்களுக்கு வெளி மருந்தாக தேய்த்துவர குணமாகும் விண்டர் கிரீன் எண்ணெயுடன் இந்த எண்ணையை கலந்து மூட்டுகளில் தேய்த்து வர ஒருவித உஷ்ணம் ஏற்பட்டு இரத்தக் கட்டு கரையும் மூட்டு வலி குணமாகும் மூட்டுக்களை எளிதில் அசைக்கலாம் நன்றி

No comments:

Post a Comment