*கஷ்டத்தைப் பார்த்து வளர்ந்தவர்களை விட .,*
*கஷ்டத்திலேயே வளர்ந்தவர்களுக்கு தான் தெரியும்......*
*வாழ்க்கையின் ஒவ்வொரு அடியும் எப்படி வலிக்கும் என்று.,*
*எல்லா வலிகளையும் வார்த்தைகளில்
சொல்லி விட முடியாது.**ஓசையின்றி அழுகின்ற ஓராயிரம் வலிகள் எல்லோர்
இதயத்திலும் உண்டு.,**ஒவ்வொரு வலியும் ஒவ்வொரு பாடத்தைத் தருகிறது...*
*ஒவ்வொரு பாடமும் ஒவ்வொரு மாற்றத்தை தருகிறது.,*
*யாரிடமிருந்தும் எதையும் எதிர் பார்க்காதீர்கள்.,*
*ஏனென்றால், எதிர்பார்ப்புகள் நிறைவேறாவிடில் அதிக வலியைக் கொடுக்கும்..*
*எதையும், யாரையும் எப்போதும் இகழ்வாய் எண்ணி விடாதீர்கள்.,*
*காய்ந்து உதிர்ந்த இலை தான், ஆனால்., அது நீரில் தத்தளிக்கும் எறும்பின் உயிரைக் காக்கும்...*
*வாழ்க்கையின் சிறந்த நாட்களை அடைய, சில மோசமான நாட்களோடு போராடியே ஆக வேண்டும்...*
*சின்ன புறக்கணிப்பு தான் மனதை எவ்வளவு வருத்துகிறது...*
*சின்ன நெளிவு தான் எவ்வளவு மரியாதை தருகிறது.,*
*சின்ன புன்னகை தான் எவ்வளவு பகையை உடைக்கிறது..*
*சின்னச் சின்னது தான், எவ்வளவு பெரிதாக இருக்கிறது...*
*வெற்றி என்பது உன் நிழல் போல.,*
*நீ அதைத் தேடிப்போக வேண்டியதில்லை.,*
*நீ வெளிச்சத்தை நோக்கி நடக்கும் போது உன்னுடன் தொடர்ந்து வரும்...*
*எது உன்னிடம் நிலைக்கும் என்று நீ நினைக்கிறாயோ.,*
*அது தான் முதலில் உன்னை விட்டு விலகிப் போகும்.,*
*வாழ்க்கையில் என்ன நடக்கும் என்று பயத்துடனே வாழாதே.,*
*அடுத்தது என்ன நடந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று துணிந்து நில்...*
*இனிய வணக்கங்களுடன்.*
No comments:
Post a Comment