Friday, December 6, 2024

இன்றைய நாளில் பிறந்தவர்கள்.* (06-திச)

 *🪷 )

*மாக்ஸ் முல்லர்.*


✍ பண்டைய இந்திய தத்துவ இலக்கியம் பற்றி ஆராய்ச்சி செய்த ஜெர்மனி மொழியியலாளர் பிரெடரிக் மாக்ஸ் முல்லர் 1823ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி ஜெர்மனியில் பிறந்தார்.


✍ இவர் சிறுவயதிலிருந்தே இசை மற்றும் கிரேக்கம், லத்தீன், அரபு, பாரசீகம்,

சமஸ்கிருதம் போன்ற பல மொழிகளை கற்றார். இவர் பன்முகத்தன்மை கொண்டவர். கிழக்கத்திய புனித நூல்கள் இவரது வழிகாட்டுதலின் கீழ் உருவாக்கப்பட்டது. இது விக்டோரியா காலத்தின் ஆய்வு முயற்சியின் நினைவு சின்னமாகும்.


✍ ரிக் வேதத்தை ஆங்கிலத்தில் வெளியிட வாழ்நாளில் பாதியை செலவிட்டார். அதன் கையெழுத்துப் பிரதியை தயாரிக்க 25 ஆண்டுகளும், அச்சிட மேலும் 20 ஆண்டுகளும் ஆயிற்று.


✍ இந்திய தத்துவத்தின் ஆறு மரபுகள் இவரது புகழ்பெற்ற மற்றொரு நூலாகும். இந்தியர்கள் தங்களது பண்டைய இலக்கியத்தை கல்வியின் ஒரு அம்சமாக கற்க வேண்டும். அப்போதுதான் அவர்களிடம் தேசிய பெருமிதமும், சுயமரியாதையும் விழித்தெழும் என்று கூறியுள்ளார்.


✍ இந்திய மக்களின் மீது மிகுந்த பற்றும், மதிப்பும் கொண்டிருந்தார். *'இந்தியா அழகு நிறைந்த பூலோக சொர்க்கம்'* என்று போற்றிய இவர் 1900ஆம் ஆண்டு மறைந்தார்.


*சாவித்திரி.*


👉 புகழ் பெற்ற ஒரு தென்னிந்தியத் திரைப்பட நடிகை, திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் சாவித்திரி 1936ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி பிறந்தார்.


👉 இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் 318 படங்களில் நடித்திருக்கிறார். 


👉 இந்திய அரசு அவரது நினைவாக 2011ஆம் ஆண்டு நினைவுத் தபால் தலை ஒன்றையும் வெளியிட்டது.


👉 கலைமாமணி விருது பெற்ற சாவித்திரி 1981ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி மறைந்தார்.


*ஆர்வி.*


✍ தமிழில் பொதுவாசிப்புக்குரிய நாவல்களை எழுதிய எழுத்தாளர், இதழாளர், தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் பொறுப்புகளில் இருந்து செயல்பட்ட ஆர்வி 1918ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி பிறந்தார்.


✍ இவர் 22 ஆண்டுகள் கண்ணன் இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார்.


✍ 1956ஆம் ஆண்டு கல்கியை தலைவராகக் கொண்டு தமிழ் எழுத்தாளர் சங்கம் உருவாக முழுமுயற்சி எடுத்தார்.


✍ தமிழ் எழுத்தாளர் கூட்டுறவு சங்கம் அமைத்து கூட்டுறவு முறையில் நூல்களை வெளியிட்டார்.


✍ பிற்காலத்தைய பொதுவாசிப்புக்குரிய எழுத்தாளர்களான பாலகுமாரன் போன்றவர்களுக்கு முன்னோடியாக இருந்த ஆர்வி 2008ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29ஆம் தேதி மறைந்தார்.



*ரவீந்திர ஜடேஜா.*


🏏 இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா 1988ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி பிறந்தார்.


🏏 பன்முக வீரரான இவர் இடதுகை மட்டையாளராகவும், இடதுகை சுழற்பந்து வீச்சாளராகவும் அறியப்படுகிறது.


🏏 2009ஆம் ஆண்டில் இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒன் டே இன்டர்நேஷனல் (One Day International) போட்டியில் அறிமுகமானார்.


🏏 மேலும் இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.


*ருத்ர பிரதாப் சிங்.*


🏏 இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ருத்ர பிரதாப் சிங் 1985ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி பிறந்தார்.


🏏 இவர் இந்திய கிரிக்கெட் அணிக்காக ஒன் டே இன்டர்நேஷனல் (One Day International) மற்றும் டேஸ்ட் கிரிக்கெட் (Test Cricket) ஆகிய சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ளார்.


🏏 இவர் செப்டம்பர் 2018ஆம் ஆண்டு அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.



*ஜஸ்பிரிட் பும்ரா.*


🏏 இந்திய கிரிக்கெட் வீரர் ஜஸ்பிரிட் பும்ரா 1993ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி பிறந்தார்.


🏏 ஒன் டே இன்டர்நேஷனல் (One Day International), டேஸ்ட் கிரிக்கெட் (Test Cricket) பன்னாட்டு இருபது20 (WT20I) ஆகிய மூன்று கிரிக்கெட் போட்டிகளிலும் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார்.


🏏 ஒரு ஆண்டில் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் அதிக மட்டையாளர்களை வீழ்த்தியவர் எனும் சாதனையைப் படைத்துள்ளார். இவர் 28 மட்டையாளர்களை வீழ்த்தி இந்தச் சாதனையினைப் புரிந்தார்.


🏏 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

No comments:

Post a Comment