*தினம் ஒரு மூலிகை*
**
தாவரவியல் பெயர்:Kalanchoe pinnata இளையோரங்களில் சற்று ஈரப்பதம் கிடைத்தால் தரையோடு ஒட்டி புதுச் செடியாக வளரக்கூடிய சாறு உறிஞ்சி வகை தாவரம் இதை கட்டிப்போட்டால் குட்டி போடும் என்பார்கள் இனிப்பு சுவை உடையது வெப்பத்தன்மை கொண்டது இதன் இலைகள் மூட்டு வலியை நீக்குவதற்கு
பயன்படுகிறது இலைகளை வெட்டி சுத்தம் செய்து இடித்து சாறெடுத்து ஐந்து முதல் பத்து மில்லி அளவு உள்ளுக்கு சாப்பிட மூட்டு வீக்கம் மற்றும் இளைச்சாருடன் தேங்காய் எண்ணெய் கலந்து தடவ நெருப்பு கொப்பளங்கள் கட்டுப்படும் சிறுநீரக கற்கள் கரைய இதன் இலைகளை பச்சையாக உண்டு வரலாம் அதாவது செடியில் இருக்கும் இலைகள் முதல் நாள் சிறியதாகவும் மறுநாள் அதைவிட பெரிய இலை இப்படி ஏழு நாட்களில் இருந்து பத்து நாட்கள் சாப்பிட படிப்படியாக சிறுநீர்க் கற்கள் கரைந்து வெளியேறும் இதை உட்கொள்ளும் போது பால் சார்ந்த பொருட்கள் மீன் இறைச்சி முட்டை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் இலைகளை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்கள் நோயின் வீரியத்தன்மை கட்டுக்குள் கொண்டு வரும் ஆற்றல் ரணகள்ளிக்கு உண்டு . நன்றி
No comments:
Post a Comment