Sunday, December 29, 2024

உசிலை மரம்

 *தினம் ஒரு மூலிகை* 

தாவரவியல் பெயர்:Albizoa Amara உசிலை மரம் ஒவ்வொரு வட்டாரத்திலும் வட்டார பெயர் வேறு உள்ளன உசிலை மரத்தின் மிக சிறிய இலைகள் நமது தலைமுடியில் உள்ள சிக்கல் நீக்கி கூந்தலை கருமையாக்குகிறது துவர்ப்பு சுவை உடையது வெப்பத்தன்மை கொண்டது தலைமுடியில் ஏற்படும் எண்ணெய் சிக்கி நீங்க உசில மர இலைகளை நிழலில் காய வைத்து பொடித்து சலித்து எடுத்து

இரண்டில் ஒரு பங்கு சீகாய் தூள் சேர்த்து சோறு வடித்த கஞ்சி கலந்து தலையில் 20 நிமிடம் ஊற வைத்து வாரம் ஒன்று அல்லது இரண்டு முறை குளித்து வர என்னை சிக்கு நீங்கும் உசில இலையை தலைக்கு தேய்த்து குளிப்பதால் கண் சிவப்பு கண் எரிச்சல் மற்றும் கண் நோய்கள் நீங்கும் உசிலை பொடி பாசிப்பயிறு வெட்டிவேர் விழாமிசம் வேர் சீகாய் தூள் பூலாங்கிழங்கு ஆகியவற்றை சுத்தம் செய்து சம அளவு எடுத்து பொடித்து சலித்து வைத்துக்கொண்டு தினமும் உடம்பில் தேய்த்து குளித்து வருவதுடன் வாரம் ஒரு முறை தலையில் தேய்த்து குளித்து வர மேனி மற்றும் கூந்தல் அழகு பெறும் நன்றி

No comments:

Post a Comment