*தினம் ஒரு மூலிகை* **
தாவரவியல் பெயர்:Ziziphus mauritiana வளைந்த Standards முட்களுடன் முட்டை வடிவ இலைகளும் உடைய சிறு மரம், புளிப்பு சுவையுடைய உண்ணக்கூடிய பழங்களை உடையது இலை பட்டை வேர்பட்டை பழம் மருத்துவ பயன் உடையவை இலை தசை நரம்பு ஆகியவற்றை சுருங்கச் செய்யும் மருந்தாகவும் வேர்ப்பட்டை பசி தூண்டியாகவும் சளி
அகற்றி மலமிளக்கி பசித்தியை மிகுக்கக் கூடியதாகவும் பயன்படுகிறது இலை ஒரு பிடி மிளகு ஆறு பூண்டு பல் ஐந்து அரைத்து மாதவிலக்கான முதல் இரண்டு நாட்கள் கொடுத்து வர கருப்பை குற்றங்கள் நீங்கி புத்திர பாக்கியம் கிட்டும் இழந்தம்பட்டை 40 கிராம் மதுரம் பட்டை 40 கிராம் அரை லிட்டர் நீரில் போட்டு கொதிக்க வைத்து 125 மில்லியாக ஆக்கி நான்கு வேளை நாள்தோறும் குடித்து வர நாள் பட்ட பெரும்பாடு நீங்கும் இலந்தை வேர் பட்டை சூரணம் நான்கு சிட்டிகை இரவில் வெந்நீரில் உட்கொள்ள பசியின்மை நீங்கும் துளிர் இலையை 5 கிராம் நெகிழ அரைத்து தயிரில் காலை மாலை கொடுக்க வயிற்றுக் கடுப்பு ரத்த பேதி தீரும் நன்றி
No comments:
Post a Comment