🟪🟪🟪🟪🟣🟪🟪🟪🟪
**
*எப்போதும் கடினமான பாதையை தேர்ந்தெடுங்கள்.*
*போட்டிகள்,பொறாமைகள் இன்றி எளிதில் வெற்றி அடையலாம்.*
*தெளிவாக
இருப்பவர்களுக்கு அறிவுரை தேவைப்படுவதில்லை...**அறிவுரையை ஏற்றுக்கொள்ளும் எல்லாருமே தெளிவாகி விடுவதுமில்லை.*
_*நினைப்பது நினைத்தபடி நடக்கப் போகிறது எனப் பலமாக உணர்ந்தால் அதன் பெயர் நம்பிக்கையில்லை.*_
_*நினைக்காத பயங்கரங்கள் நடந்தாலும், அதை அசராமல் எதிர்கொள்ளும் உணர்விற்கே நம்பிக்கை எனப் பெயர்.*_
_*தனக்கேற்றபடி எதை ஒன்றையும் மாற்றிக்கொள்ள வேண்டும்.*_
_*இந்த வாழ்க்கையையும் கூட. *_
அழுகின்ற வினாடியும்,,
சிரிக்கின்ற நிமிடங்களும்,,
*வாழ்க்கை சக்கரத்தில்*
*நிரந்தரமில்லை.*
இந்த தேசத்தில்
மனித தெய்வங்கள் அதிகம்.
ஆனால் உண்மையான மகான்கள் பெரும்பாலும் நம் கவனத்திற்கு வராமலேயே இருக்கிறார்கள். மற்றவர் வணக்கம், புகழ், பணம் என எதுவும் அவர்களுக்குத் தேவையில்லாததால் அவர்கள் எந்தப் பிரகடனமும் செய்வதில்லை.
நம்முடைய அங்கீகாரமோ,
அலட்சியமோ அவர்களைப் பாதிப்பதில்லை. தங்களுடைய ஞானத்தை வஞ்சனையின்றி மக்களுக்கு வழங்கிய வண்ணம் வாழும் அவர்கள் எந்தப் பிரதிபலனையும் எவரிடத்தும் எதிர்பார்ப்பதில்லை.
இந்தியாவிலும் இந்தியாவிற்கு வெளியேயும் பிரபலமாக இருந்தாலும் துளியும் கர்வமில்லாது, சலனப்படாமல் ஜீவன்முக்தனாக வாழ்ந்து மறைந்த ரமண மகரிஷி அப்படிப்பட்ட ஞானி. தன்னிடம் மேலான சக்திகள் இருப்பதாக எப்போதும் அவர் காட்டிக் கொண்டதில்லை. யாரையும் விடத்
தான் உயர்ந்தவன் என்பதை சூசகமாகக் கூட அவர் தெரிவித்ததில்லை.
ஒரு முறை ரமண மகரிஷி மரத்தடியில் அமர்ந்து சந்திக்க வந்தவர்கள் கேள்விகளுக்குப் பதிலளித்துக் கொண்டிருந்தார். அவரைத் தரிசிக்க வந்த ஒரு வெளிநாட்டு அன்பர் காலை மடித்து நம்மைப் போல் கீழே உட்கார முடியாததால் வேகமாகச் சென்று வெளியே போட்டிருந்த ஒரு நாற்காலியை எடுத்துக் கொண்டு வந்து அதில் உட்கார்ந்து கொண்டார்.
ரமணரை விட உயரமான இடத்தில் அவர் அமர்வது ஆசிரம நிர்வாகிகளுக்குப் பிடிக்கவில்லை. அவர்கள் அந்த மனிதரிடம் ஏதோ சொல்ல அவர் வெளியேறி விட்டார்.
இதைக் கவனித்த ரமணர் என்ன என்று விசாரிக்க அவர்கள் "உங்களை விட உயரமான இடத்தில் உட்கார வேண்டாம் என்று கேட்டுக் கொண்டோம்" என்று சொல்ல ரமணர் மரத்தில் அமர்ந்திருந்த ஒரு குரங்கைக் காண்பித்து
"இதுவும் என்னை விட உயரத்துல
தானே இருக்கு.. இதை என்ன செய்யப் போறீங்க?" என்று வேடிக்கையாகக் கேட்டு "இதில் உயர்வென்ன, தாழ்வென்ன" என்று சொன்னார்.
மகான்களின் வாழ்க்கை முறையே நமக்குப் பாடம் தான்.
*"தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்"* - முண்டாசு கவியின் கோபம் ஞாபகத்திற்கு வருகிறது.
_*பழகிய பாதைக்கு பரிச்சயப்பட்ட பாதங்கள்.*_
_*தயக்கமின்றி முன்னேறும்.*_
🟪🟪🟪🟪🟣🟪🟪🟪🟪
No comments:
Post a Comment