🟢🟢🟢🟢🟢🟢🟢
*அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய
🟢 1. முகம் பளிச் ஆக இருப்பதற்கு:
ஆவாரம் பூ, கடலைமாவு இரண்டையும் சமமாக எடுத்து பசும் பாலில் அரைத்து முகத்தில் தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து இளஞ்சூடான நீரில் கழுவி சுத்தமான மெல்லிய துணியால் துடைத்து எடுக்க முகம் பாலீஷ் ஆகும்.
🟢 2. ஆஸ்துமாவுக்கு:
ஊமத்தன் பூ, பூவரசன் பூ 5, ஆடா தோடை இலை 5 ஆகியவற்றை நிழல் காய்ச்சலாக உலர்த்தி தீங்கங்குகளில் இட்டு புகை பிடித்தால் ஆஸ்துமா தணியும்.
🟢 3. தலைப்பொடுகு நீங்க:
50 கிராமம் வேப்பம் பூவை உரலில் போட்டு இடித்து, 250 மில்லி தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்சி தலையில் வருடி தேய்த்து வர பொட்டு, பொடுகு, ஈறு, பேன் எல்லாம் ஒழியும்.
🟢 4. குதிக்கால் வலிக்கு:
எருக்கன் பாலை எடுத்து அத்துடன் முட்டை வௌஙிளைக் கருவை சேர்த்து பிசைந்து வலி உள்ள கால் பாகத்தில் போட்டு தேய்த்து நெருப்பு அனல் காட்ட வலி தீரும்.
🟢 5. தோலில் வெண்புள்ளி மாற:
கண்டங்கத்தரி பழம், குன்னிமுத்து இலைச்சாறு, கொடிவேலி வேர் தொலி இவைகளை ஒன்று கூட்டி அரைத்து, தேங்காய் எண்ணெய்யில் காய்ச்சி வெண்தொலியில் போட்டு வர 40 நாட்களில் வெண் தொலி மாறிவிடும்.
🟢 6. தலைப்பேன் சாக:
மருதோன்றி பூவை தேங்காய் எண்ணெய்யில் கலந்து காய்ச்சி தலைக்கு தினமும்
தேய்த்து வர பேன்கள் ஒழியும்.🟢 7. விடாத விக்கலுக்கு:
பழய மாட்டுத் தோலை சுட்டு சாம்பலாக்கி 1 தேக்கரண்டி அளவு தேனுடன் சாப்பிட குணமாகும்
🟢 8. மஞ்சள் காமாலைக்கு:
தும்பை இலை, கீழாநெல்லி இலை, கரிசலாங்கண்ணி, கோவை இலை, இசங்கு வேர் தொலி, இவைகளை சமமாக எடுத்து பால் விட்டு அரைத்து காலை மாலை மூன்று நாட்கள் சாப்பிட குணமாகும். 3 நாட்கள் உப்பு, புளி நீக்கவும்.
🟢 9. வயிற்றுப் போக்கை நிறுத்த:
ஒரு துண்டு வசம்பை அரைத்து பாலுடன் கொடுத்தாலும், ஒரு மாம் பருப்பை தேனுடன் அல்லது மோருடன் கொடுத்தாலும் பேதி நிற்கும்.
🟢 10. பெண்களுக்கு வெள்ளைப்படுதலை நிறுத்த:
பொடுதலை வௌஙிளருகு, கௌதும்பை இவைகளை நிழலில் உலர்த்தி சமபாகம் சேர்த்து இடித்து காலை, மாலை வேளைக்கு, டீஸ்பூன் அளவு சாப்பிட மேகம் போவது நின்று விடும். அல்லது செம்பருத்தி பூ 5 எண்ணம் எடுத்து 100 மல்லி பசும்பாலில் போட்டு 5 கிராம் பனங்கற்கண்டு சேர்த்து காய்ச்சி காலை, மாலை 3 நாட்கள் சாப்பிட வெள்ளைப் படுதல் நின்று விடும்.
🟢 11. விதை வீக்கத்துக்கு:
நொச்சி இலைச்சாறு, வௌஙிளைப்பூண்டு அரிசி, முட்டை வெண்கரு, களச்சிகாய் நான்கையும் அரைத்து விதையில் தேய்த்து வர வீக்கம் வத்தும்.
🟢 12. வாந்தியை நிறுத்த:
சதகுப்பையை பொன் வறுவலாக வறுத்து தூள் செய்து 1 டம்ளர் தண்ணீரில் 10 கிராம் தூளை போட்டு அத்துடனம் 10 கிராம் பனங்கற்கண்டு சேர்த்து குடிக்க வாந்தி நிற்கும். அன்று மட்டும் நீர் ஆகாரம் சாப்பிடவும்.
🟢 13. கால் ஆணிக்கு மருந்து:
வசம்பு, சுட்டு எடுத்த மஞ்சள், மருதாணி இலை இவைகளை சமமாக எடுத்து மைபோல் அரைத்து கால் ஆணிகளில் கட்டிவர குணமாகும்.
🟢 14. வெட்டுக் காயங்களுக்கு மருந்து:
நாயுருவி இலை அல்லது அம்மான் பச்சரிசி (பாலட்டன்குளை) இலையுடன் வௌஙிளைப் பூண்டு அரிசி 2ஐ சேர்த்து அரைத்து கட்டிவர காயங்கள் ஆறும்.
🟢15. குடி போதை மறக்க:
மிளகாய்ச் செடி, லவங்கபட்டை, சர்க்கரை, நெல்லிக்காய்தூள், கொத்தமல்லி, வாழைசாறு சேர்த்து தேநீராக்கி காலை, மாலை, 100 மில்லி அளவு குடித்துவர 30 நாட்களில் பலன் கிடைக்கும்
No comments:
Post a Comment