Monday, January 27, 2025

வாழ்க்கையின் வெற்றிக்கான ரகசியங்கள்!

 🟫🟫🟫🟫🟤🟫🟫🟫🟫

*_

*அனைவரிடமும் எப்போதும் அன்பாகவும் நாகரீகமாக பேசுவதை கடை பிடிக்கலாம்.*

அடுத்தவா்கள் சொந்த விஷயங்களில் தேவையில்லாமல் மூக்கை நுழைக்கக் கூடாது.


நண்பா்கள் உறவினா்கள் வீடு புதுமனை புகுவிழாவிற்கு சென்றால் கட்டியுள்ள வீட்டிற்கு பழுது சொல்ல

வேண்டாமே? போனோமா, பாா்த்தோமா, வாழ்த்தினோமா, சாப்பிட்டோமா, என அமைதியாய் திரும்பலாம், சந்தோஷ வேளையில் வாஸ்து சாஸ்திரம் சொல்லி மனதை வேதனைப் படுத்த வேண்டாமே!!


உறவினா் சொந்த பந்த திருமண நிகழ்வுக்குப், போனால் மணமக்களைப் பற்றியும், எடை, உயரம், அழகு, வரதட்சணை விபரங்கள் இவை போன்ற விஷயங்களில் தேவையில்லாமல் மூக்கை நுழைக்க வேண்டுமா என்ன? என் மகன், மகள், திருமணத்தை நான் அப்படிச் செய்தேன், இப்படிச் செய்தேன், என்றெல்லாம் உங்கள் தற்பெருமைகளை அவிழ்த்து விட வேண்டாமே, கடன் வாங்கி கல்யாணம் செய்திருப்பாா். அவருக்கு உதவி செய்யா விட்டாலும் உபத்திரவம் செய்யாமல் இருக்கலாம் அல்லவா?


இறப்பு வீட்டுக்கு போனால் அமைதி காப்பது நல்லது! அங்கு போய், யாாிடமாவது செல்போனில் பேச வேண்டாமே. இது அநாகரீகத்தின் உச்சம் தானே?


தலைக்கு மேல் உயா்ந்து விட்ட பிள்ளைகளை அதிக கட்டுப்பாடுகளை போட்டு முடக்க வேண்டாமே. அவா்களுக்கு தேவையில்லாமல் அட்வைஸ் செய்து சங்கடம் தவிா்ப்பது நலம் தானே!


மருமகளை மகள் போல நேசியுங்கள். சமையல் கட்டினை அவளிடம் ஒப்படையுங்களேன் மாமியாா்களே, நீங்கள் கொஞ்சம் ஒதுங்கிக் கொள்ளலாமே1


ஒரு கால கட்டத்தில் உயிரோடு இருக்கும் போதே சொத்துகள் இருந்தால் உயில் எழுதி வைப்பது நலம், உங்களின் மறைவுக்குப் பின் அவா்களுக்குள் தேவையில்லாத பிரச்னைகள் வர வேண்டாமே!


மனைவி, மருமகள், சமையலில் குறையிருந்தால் தனியே கூப்பிட்டு சொல்லலாம், அதே போல நிறைகளை அனைவா் முன்னிலையிலும் சொல்லி பாராட்டலாம்.


ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் வீட்டோடு பிள்ளைகள் இருந்தால் பொறுப்புகளை அவா்களிடம் ஒப்படைக்கலாம்.


பொதுவாக விட்டுக் கொடுத்துப் போகிறவா்கள் வாழ்வில் வசந்தம் வீசத் தானே செய்யும்!


மனைவிக்கு உடல் நலம் சாியில்லாமல் போனால் கனவன் உதவி செய்யலாமே, தப்பு என்று யாா் சொல்லப் போகிறாா்கள்! பொதுவாக இனிமையாக பழகி அனைவரையும் மதித்து வாழ்ந்தாலே வாழ்க்கை வசந்தமானதே... அடுத்தவர் மனோ நிலை புாிந்து வாழ்வதும் நல்லதே!


🟫🟫🟫🟫🟤🟫🟫🟫🟫

No comments:

Post a Comment