*தினம் ஒரு மூலிகை* **
தாவரவியல் பெயர்:Cuminum Cuminum linn சீரகம் வியாபார ரீதியாக பயிர் செய்யப்படுகிறது மருத்துவத்தில் சீரகம் பயன்படுகிறது சீரகம் காற்பு சுவை உடையது வெப்ப தன்மை கொண்டது சீரகத்தை நாட்டு சர்க்கரை உடன் கலந்து தொடர்ந்து கொண்டு வர
தேகம் வன்மை பெறும் மேலும் மேல் உதடு மற்றும் கீழ் உதடு இரண்டும் வீங்கிப் போனதால் ஏற்பட்ட நோய் விலகும் சீரகத்தை நன்றாக சுத்தம் செய்து 150 மில்லி இஞ்சி சாறில் ஒரு நாள் ஊறவைத்து உலர்த்தி பிறகு முசுமுசுக்கை சாற்றில் ஒரு நாள் ஊறவைத்து உலர்த்தி எடுத்து அத்துடன் ஏலம் சுக்கு திப்பிலி மிளகு, நெல்லிமுள்ளி நெர்பொரி மற்றும் வில்வ பழ ஓடு இவைகளின் பொடி வகைக்கு 10 கிராம் சேர்த்து ஒன்றாய் கலந்து அதன் எடைக்கு வெள்ளை சர்க்கரை சேர்த்து வேலைக்கு 5 கிராம் முதல் 8 கிராம் வரை தினம் 2 வேளை சாப்பிட்டு வர இருமல் நீங்கும் உணவுப் பொருட்களில் சீரகம் மனம் முட்டியாக பயன்படுத்தப்படுகிறது சீரகம் 200 கிராம் உலர்ந்த கற்றாழை 200 கிராம் வெள்ளம் பால் நெய் சேர்த்து லேகியமாக செய்து சாப்பிட வயிற்று வலி நீர் சுருக்கு வெப்பம் அஜீரணம் கண் எரிச்சல் கை கால் உடல் எரிச்சல் ஆசன கடுப்பு மலக்கட்டு நீங்கும்.
No comments:
Post a Comment