🟩🟩🟩🟩🟢🟩🟩🟩🟩
**
**
கிரேக்க தேசத்துலே ஒரு ராஜா இருந்தார்.
ஒரு மாதிரியான ராஜா.
பிடிவாத குணம் பைத்தியக்காரத்தனம்...
ரெண்டும் அவர்கிட்டே உண்டு.
அந்த மன்னர் கிட்டே ஓர் அழகான கட்டில்... தங்கத்தாலே செஞ்சது அந்தக் கட்டில், விலை உயர்ந்த வைரம்லாம் அதிலே பதிச்சி வச்சிருந்தாங்க...
அதுலே மரமே கிடையாது... எல்லாம் தங்கம்... வைரம்
வைடூரியம்... அவ்வளவு விலை உயர்ந்த கட்டில் எங்கேயுமே கிடையாது.... வேறே யாருகிட்டேயும் கிடையாது. அப்பேற்பட்ட அபூர்வமான கட்டில்...அந்த ராஜா தனக்குன்னு சில கொள்கைகளை வச்சிருந்தார்.
அரண்மனைக்கு யாராவது முக்கியமான விருந்தினர்கள் வந்தா... அவங்களை அந்த கட்டில்லே படுக்க வைப்பார்.
ஆனா ஒரு விஷயம். வர்ற விருந்தினரோட உயரம் அந்தக் கட்டில் நீளத்துக்குச் சரியா இருக்கணும்... படுத்தா, கூட குறைச்சலா இருக்கக் கூடாது. அப்படி ஒரு ஒழுங்கு முறையை அவர் எதிர்பார்க்கறவர்.
யாராவது ஒரு விருந்தினர் வந்தா... அன்றைக்கு ராத்திரியே அந்தக் கட்டில்லே படுக்க அனுமதி கொடுப்பார். வர்ற ஆசாமி அந்தக்
கட்டிலை விட நீளமா இருந்தார்ன்னு வச்சிக்குங்க... கட்டிலுக்குத் தகுந்த மாதிரி காலை வெட்டி விடச் சொல்லுவார்...
ஏன்னா... அந்தக் கட்டில் விலை உயர்ந்தது. அதை மாத்த முடியாது. அதனாலே கட்டிலுக்குத் தகுந்த மாதிரி ஆளை மாத்திபுடுவார். அங்கே கட்டில் தான் முக்கியம்... மனிதன் முக்கியமில்லே!
அப்படித்தான்... பல சமயங்கள்லே நமக்கு வாழ்வு முக்கியமாத் தெரியறதில்லே. சட்ட திட்டங்கள் தான் முக்கியமாத் தெரியுது!
பொதுவா ஒரு அளவை வச்சித்தான் கட்டில் தயார் பண்ண முடியும்...
ஒரு சராசரி மனிதனின் அளவு அது. சராசரிங்கறது... உதாரணத்துக்கு... பத்து பேர் உயரத்தைக் கூட்டி பத்தாலே வகுத்து வர்ற எண் கணக்கின் ஒரு கற்பனை வடிவம் அது.
அந்த வகையிலே தான் அந்தக் கட்டில் தயார் செய்யப்பட்டிருக்கு. ஆனா... சராசரி உயரமுள்ள மனிதன்ங்கறது கணக்குலே வேணும்ன்னா இருக்கலாம்... நடை முறையில் இருக்க முடியாது.
அது கணக்குலே ஏற்பட்ட ஒரு கற்பனை அளவு. அந்தக் கற்பனை அளவுக்கு நூறு சதவீதம் 'கரெக்டா' ஒரு விருந்தாளி வரணும்ன்னு எதிர்பார்க்கறது... சரியா இருக்குமா?
அந்தக் கட்டிலை விட நீளம் குறைச்சலா அதாவது உயரம் குறைச்சலான ஒரு ஆசாமி வந்துடறார்ன்னு வச்சுக்குங்க... அப்பவும் அந்த ராஜா சும்மா இருக்க மாட்டார். அதுக்கின்னே அரண்மனையிலே சில பலசாலிகளை வச்சிருக்கார். அவங்களை கூப்பிட்டுக்கிட்டு வருவார். வந்த விருந்தாளியைக் கையைக் காட்டி விடுவார்.
தலைப் பக்கம் நாலு பேர் - கால் பக்கம் நாலு பேர் அவரைப் பிடிச்சி... பலங் கொண்ட மட்டும் இழுக்கச் சொல்லுவார். கட்டில் அளவுக்கு கரெக்டா பொருந்தர அளவுக்கு நீட்டச் சொல்லுவார். உடம்பு என்ன கம்பியா... தட்டி நீட்டறதுக்கு?
வர்ற விருந்தினர் நல்ல முறையிலே படுத்து ஆனந்தப் படணும்ன்னு தான் அந்த ராஜா நினைக்கிறார்.
ஆனா கட்டிலுக்குத் தகுந்த மாதிரி அவரு நீளம் இருக்கணும்ன்னு நினைக்கறதுனாலே எவ்வளவு இடைஞ்சல்!
இது அரசனின் தவறில்லை.. ஒழுங்கு முறையின் தவறு அப்படிங்கறார் ஒரு பெரியவர் (ஓஷோ)
வாழ்க்கையை நெறிப் படுத்தறதுங்கறது வேறே!
கட்டுப் படுத்தறதுங்கறது வேறே! ஒழுங்கு முறையைத் திணிக்கிறேன்னு சொல்லிக்கிட்டு பலபேர் வாழ்வையே இழந்துடறாங்க.
வாழ்வின் இயல்பு ஆனந்தம்... மகிழ்ச்சி! அந்த மகிழ்வை அடையணும்ன்னா திறந்த மனசோட செயல்படணும். இது தெரியாததுனாலே நம்மள்லே பல பேர் வாழ்க்கையின் முக்கியமான சில பகுதிகளை இழந்துடறோம்!
நம்மள்லே சில பேர் வேறே மாதிரி...
ஒரு ஆஸ்பத்திரி... ஆப்ரேஷன் நடந்து முடிஞ்சுது... அதுக்கப்புறம் தான் நர்ஸ் அவசரமா ஓடி வந்து சொல்லிச்சு...
"டாக்டர்... இந்த பேஷன்டுக்கு கால்லே தான் கட்டி... ஆனா நீங்க மூளையிலே கட்டின்னு நினைச்சி தலையிலே ஆப்ரேஷன் பண்ணிட்டீங்க...
மூளை ஆபரேஷன் பண்ண வேண்டிய நோயாளி 15 ஆம் நம்பர் பெட்லே இருக்கார்...!" அப்படின்னுது.
டாக்டர் பார்த்தார்... "பரவாயில்லே... அதனாலே என்ன... கட்டிலை மாத்திட்டா போச்சு!
இவரைக் கொண்டு போய் 15 ஆம் நம்பர் பெட்லே போட்டுடு! சரியா போயிடும்!' - அப்படின்னார்.
🟩🟩🟩🟩🟢🟩🟩🟩🟩
No comments:
Post a Comment