இன்றைய நட்பும் நிகழ்வும் செய்திகள்*
🌹ஒரு நொடியில் வார்த்தைகளை கொட்டித் தீர்க்கலாம்...
ஆனால்,பாதிக்கப்பட்டவர்கள் ஒவ்வொரு நாளும்...!
அதை நினைத்துக்கொண்டே தான் இருப்பார்கள்.
எனவே பேசும் சொற்கள் இனிமையாக இருக்கட்டும்.!
🌹🌹கொஞ்சம் நடிப்பு,கொஞ்சம் சாமர்த்தியம்,நிறைய பொய்,கொஞ்சம் உண்மை...
அப்படி இருந்தால் தான் இந்த உலகில் வாழ முடியும்...
நேர்மை எல்லாம் ஒரு
பைசாவுக்கு கூட பிரயோஜனம் கிடையாது.!! 🌹🌹🌹வென்று விட்டோம் என்று ஆணவமாக நினைக்கின்ற இடத்தில் தான் தோல்விகள் உருவாகின்றன.!!!
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
⛑️⛑️திட்டமிட்டபடி ஜன.6 முதல் வேலைநிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு
⛑️⛑️ஜன.6 போராட்ட தேதியை உறுதி செய்தனர் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்... மாவட்ட வாரியாக கூட்டம் நடத்தி தீர்மானம் நிறைவேற்றி அறிவிப்பு
⛑️⛑️உ.பி.யில் பள்ளி மாணவர்கள் நாள்தோறும் செய்தித்தாள் வாசிப்பது கட்டாயம்!
பள்ளி மாணவர்கள் நாள்தோறும் செய்தித்தாள் வாசிப்பதை கட்டாயமாக்கி உத்தரப் பிரதேச அரசு உத்தரவு!
உலக நடப்புகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும், வாசிப்புப் பழக்கத்தை அதிகப்படுத்தவும் இந்தி, ஆங்கில மொழி செய்தித்தாள்களை வாசிக்க நாள்தோறும் 10 நிமிடங்கள் ஒதுக்க வேண்டும் என சுற்றறிக்கை.
⛑️⛑️பொங்கலன்று நடக்க இருந்த CA தேர்வு ஒத்திவைப்பு
ஜன.15 பொங்கல் விடுமுறை தினத்தில் நடைபெற இருந்த CA தேர்வு 19ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக இந்திய பட்டயக் கணக்காளர்கள் கழகம் அறிவிப்பு.
பொங்கல் தினத்தில் தேர்வு நடத்துவதற்கு சு.வெங்கடேசன் எம்.பி. உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
ஒத்திவைப்புக்கான காரணமாக மராட்டிய நகராட்சி தேர்தல் குறிப்பிடப்பட்டுள்ளது
⛑️⛑️நடப்பு கல்வி ஆண்டில் 60 லட்சம் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கட்டணமில்லா பேருந்து பயன அட்டைகள் வழங்கி சாதனை.
2023–24 - 20.06 லட்சம், 2024–25 - 25.01 லட்சம் பயண அட்டைகள் வழங்கப்பட்ட நிலையில்,
நடப்பு கல்வி ஆண்டில் 60 லட்சம் பேருந்து பயண அட்டைகள் வழங்கல்
⛑️⛑️ஜனவரி 15ம் தேதி நடைபெறவிருந்த சி.ஏ. தேர்வு ஜனவரி 19ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
⛑️⛑️தமிழகம் முழுவதும் 196 மையங்களில் நடந்த அரசுக் கல்லூரி உதவி பேராசிரியர் தேர்வை 42 ஆயிரம் பேர் எழுதினர்
⛑️⛑️பழங்குடியின பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சரிவு பள்ளி கல்வித்துறையுடன் இணைக்க வலியுறுத்தல்
⛑️⛑️தரம் உயர்த்தப்பட்ட அரசு பள்ளிகள் சம்பளமின்றி தவிக்கும் ஆசிரியர்கள்
⛑️⛑️முதல்வரின் கல்வி உதவித்தொகை - ஜன. 31ல் திறனாய்வு தேர்வு.
⛑️⛑️கேட் தேர்வு முடிவு வெளியீடு: 12 பேர் ‘நூற்றுக்கு நூறு’
⛑️⛑️புதிய வருமான வரிச் சட்டம் அமல்: ரூ.12 லட்சம் வரை வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
⛑️⛑️NMMS உதவித் தொகைக்கான 2026 தேர்வு - பள்ளி மாணவர்களின் நலன் கருதி வழக்கமாக நடைபெரும் பிப்ரவரி மாதத்தில் தேர்வு நடந்த கோரிக்கை
⛑️⛑️பள்ளிகளில் இணைய சேவை Smart class, Hi tech lab பிரச்சனைகள் சார்ந்த தொடர்பு எண்கள் அறிவித்து சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது
⛑️⛑️SIR கணக்கீட்டு படிவத்தை முறையாக சமர்ப்பிக்காததால் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபட்டவரக்ளுக்கு நோட்டீஸ் அனுப்பும் தேர்தல் ஆணையம்
⛑️⛑️புதுச்சேரி கடற்கரையில் ரீல்ஸ் மோகத்தால் விபரீதம் . பாறை இடுக்கில் சிக்கிய சென்னை பேராசிரியையை போராடி மீட்ட தீயணைப்புத் துறையினர்.
⛑️⛑️ஒன்றிய அரசைக் கண்டித்து ஜனவரி 5 முதல் காங்கிரஸ் சார்பில் நாடு தழுவிய போராட்டம் அறிவிப்பு. 100 நாள் வேலை திட்டத்தைக் கைவிட்டது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என்று ராகுல் காந்தி காட்டம்.
⛑️⛑️தைவானில் மீண்டும் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் குலுங்கிய கட்டிடங்கள். பீதியில் உயரமான கட்டிடங்களில் இருந்து வீதிக்கு வந்து தஞ்சமடைந்த மக்கள்.
⛑️⛑️போர் நிறுத்த முயற்சிகளுக்கு இடையே உக்ரைனை குறிவைத்து ரஷ்யா உக்கிர தாக்குதல். டிரோன் தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டதாக ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு.
⛑️⛑️19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு. சிஎஸ்கே வீரர் ஆயுஷ் மாத்ரே தலைமையிலான அணியில் சூர்யவன்ஷி, விஹான் உள்ளிட்டோருக்கு இடம்
⛑️⛑️மாநகர் போக்குவரத்துக் கழக ஓய்வூதியதாரர்கள் தங்களது ஆயுட்கால சான்றிதழை தலைமை அலுவலகம் / பணிமனை / இ-சேவை மையம் வாயிலாக சமர்ப்பிக்கலாம்.
மேலாண் இயக்குநர் அவர்கள் தகவல்
⛑️⛑️'வலுவான எதிரி தேவை''
''வாழ்க்கையில் ஜெயிக்க உங்களுக்கு நண்பர்கள் தேவையில்லை. ஆனால், வலுவான எதிரி தேவை. சும்மா, வர்றவங்க போறவங்க எல்லாரையும் எதிர்க்க முடியாது. வலுவான எதிரி இருந்தால் தான் நீங்கள் வலிமையானவராக மாற முடியும்''
ஜனநாயகன் இசைவெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேச்சு
⛑️⛑️உக்ரைன் விரும்பவில்லை
"அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் போரை முடிவுக்கு கொண்டுவர உக்ரைன் ஆர்வம் காட்டவில்லை
உக்ரைன் அமைதியை விரும்பவில்லை என்றால், ராணுவ நடவடிக்கை மூலம் இலக்குகளையும் நிறைவேற்றுவோம்"
ரஷ்ய அதிபர் புதின்
⛑️⛑️24,600 இந்தியர்கள் வெளியேற்றம்
நடப்பு ஆண்டில் மட்டும் 81 நாடுகளில் இருந்து 24,600 இந்தியர்கள் வெளியேற்றம் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல்
விசா விதிமீறல், சட்டவிரோத குடியேற்றம் உள்ளிட்டவைகளால் அமெரிக்கா, யுஏஇ, தாய்லாந்து, மலேசியா, மியான்மர் நாடுகளில் இருந்து இந்தியர்கள் வெளியேற்றம்
⛑️⛑️கோவையில் சர்வதேச ஆக்கி மைதானம்: உதயநிதி ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்.
⛑️⛑️தமிழ்நாடு அரசின் திருக்குறள் பணிகளை ஒருங்கிணைந்து மேற்கொள்வதற்கும் கண்காணிப்பதற்கும் சிறப்பு பணி அலுவலராக ஐஏஎஸ் அதிகாரி ஜெயசீலன் நியமனம்
அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு
⛑️⛑️ஒரு சிகரெட்டின் விலையை ரூ.72 வரை உயர்த்தும் விதமாக மத்திய அரசு நடவடிக்கை
புகையிலைப் பொருட்கள் மீதான கலால் வரி திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதன் எதிரொலியாக சிகரெட் விலை அதிகரிக்க வாய்ப்பு
இதன் மூலம் புகைப்பழக்கம் மக்களிடையே குறையும் என எதிர்பார்ப்பு
⛑️⛑️மேம்பாலத்திற்கு பெயர் சூட்டல்
கோவை மாநகரின் ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு ஒப்பணக்கார வீதி வரை உள்ள உயர்மட்ட மேம்பாலத்திற்கு முன்னாள் மத்திய அமைச்சர் சி. சுப்பிரமணியம் பெயர் சூட்டல்
நாட்டு மக்களின் பசிப்பிணியைப் போக்கிய பசுமைப் புரட்சிக்கு அடித்தளமாக இருந்தவர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
⛑️⛑️அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் டிச.31ஆம் தேதி நடைபெற உள்ளது
⛑️⛑️தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே, கூட்டணி குறித்து அறிவிப்பேன்;
பல கட்சிகள் அமமுகவை கூட்டணிக்கு அழைத்து வருகிறது; பாஜக எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும் கூட்டணிக்குள் இணைய முடியாது"
-டிடிவி தினகரன்
⛑️⛑️உலகில் சுற்றிப் பார்க்க உகந்த 26 இடங்களின் பட்டியலில் கேரளா 16ஆவது இடம் பெற்றுள்ளது
⛑️⛑️தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் மலேசியாவில் இருந்து சென்னை விமான நிலைய வந்தார்.
அங்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடியிருந்த நிலையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பாதுகாவலர்கள் விஜயை பத்திரமாக காரில் ஏறி அனுப்பி வைத்தனர்.
விஜய் நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்திற்கு வந்தடைந்தார்.
விஜய்யை காண ஏராளமான ரசிகர்கள் விஜய் வீட்டின் முன்பு காத்திருந்த நிலையில் காரின் கண்ணாடியை இறக்காமல் சென்றது அனைவருக்கும் ஏமாற்றம் அளித்தது.
⛑️⛑️அதிமுக மக்களுக்காக தொடங்கப்பட்ட இயக்கம். அதிமுக ஆட்சியில்தான் பெண்களுக்கு பைக் வழங்கப்பட்டது. அடுத்தமுறை அதிமுக ஆட்சிக்கு வந்தால் திருமண உதவி தொகை ரூ.50,000ஆக உயர்த்தப்படும்"
திருப்போரூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஈபிஎஸ் பேச்சு
⛑️⛑️ஜனவரி 9 தேமுதிக மாநாடு உள்ளது. அதன் பிறகு தெளிவான முடிவை எடுப்போம்.
பொங்கல் முடிந்த பிறகு தமிழ்நாடு முழுவதும் விருப்பம் மனு வாங்க இருக்கிறோம்
நான்காம் கட்ட சுற்றுப் பயணம் கன்னியாகுமரி முதல் விருதுநகர் வரை நடைபெற உள்ளது
அதற்குள் நல்ல கூட்டணியை அமைத்து தமிழ்நாட்டிற்கும் தமிழ் மக்களுக்கும் நல்ல கூட்டணி அமைப்போம்
எங்கள் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் யாரை விரும்புகிறார்களோ அவர்களுடன் தேமுதிக கூட்டணி அமைக்கும். நாங்கள் அங்கம் வகிக்கும் கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும்"
-தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர் சந்திப்பு
No comments:
Post a Comment