Tuesday, April 15, 2025

இன்றைய நாளில் பிறந்தவர்.* (15-ஏப்)

*லியானார்டோ டா வின்சி.*

🎭 உலகப் புகழ்பெற்ற மோனலிசா ஓவியத்தை வரைந்த லியானார்டோ டா வின்சி (Leonardo da Vinci) 1452ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் தேதி இத்தாலியின் ஃபிளாரன்ஸ் நகரில் பிறந்தார்.

🎭 இவர் வேதிப் புகை, கவச வாகனங்கள் உள்ளிட்ட ராணுவத் தளவாடங்களை வடிவமைத்து உருவாக்கினார். பல இயந்திரங்களையும் வடிவமைத்துள்ளார்.

🎭 உலகப் புகழ்பெற்ற தனது *'தி லாஸ்ட் சப்பர்'* ஓவியத்தை 1490ஆம்

ஆண்டு வரையத் தொடங்கி, 1498ஆம் ஆண்டு நிறைவு செய்தார். 1503ஆம் ஆண்டு புகழ்பெற்ற மோனலிசா வண்ண ஓவியத்தைத் தீட்டத் தொடங்கி, மூன்றாண்டுகளில் அதை நிறைவு செய்தார்.

🎭 விமானம், நீர்மூழ்கிக் கப்பல் தொடங்கி கருவில் குழந்தை எப்படி இருக்கும் என்பதுவரை இவரது கற்பனைகள் விரிந்திருந்தது.

🎭 உலகம் போற்றும் உயர்ந்த கலைஞரும் பன்முகத் திறன் வாய்ந்த மேதையுமான லியானார்டோ டா வின்சி 1519ஆம் ஆண்டு மறைந்தார்.



*குரு நானக் தேவ்.*


👉 சீக்கிய மதத்தைத் தோற்றுவித்த குரு நானக் தேவ் 1469ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் தேதி பிறந்தார்.


👉 இவர் பத்து சீக்கிய குருக்களுள் முதல் குரு ஆவார். மேலும் கபீரின் உற்ற சீடர் ஆவார்.


👉 இவர் 1539ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி மறைந்தார்.



*நெல் ஜெயராமன்.*


🌾 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த தமிழக இயற்கை வேளாண் விஞ்ஞானி நெல் ஜெயராமன் 1968ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் தேதி திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் பிறந்தார்.


🌾 இவரது பணிகளை அங்கீகரிக்கும் வகையில், தேசிய அடிப்படை நிலை கண்டுபிடிப்பு-பாரம்பரிய அறிவுக்கான விருதையும், இளம் காந்தியத் தொழில்நுட்பக் கண்டறிதலுக்கான சம்மான் விருதையும் (SRISTI) மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகம் வழங்கி கெளரவித்துள்ளது.


🌾 இவர் 2018ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி மறைந்தார்.



*க.இரா.ஜமதக்னி.*


💪 இந்திய விடுதலைப் போராட்ட வீரர் க.இரா.ஜமதக்னி 1903ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் தேதி வேலூர் மாவட்டத்தில் பிறந்தார்.


💪 தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம் போன்ற மொழிகளின் இலக்கியங்களைக் கற்றறிந்தவர்.

💪 இந்திய விடுதலைக்காக உப்புச் சத்தியாகிரகம், கள்ளுக்கடை மறியல் போன்ற போராட்டங்களில் கலந்து கொண்டார்.

💪 இவரது பூமியின் வரலாறு என்னும் நூலும், உயிர்களின் தோற்றம் என்னும் நூலும் கையெழுத்துப்படியாக இருக்கும்போதே தமிழக அரசின் பரிசைப் பெற்றது. மேலும் பல நூல்கள் எழுதியுள்ளார்.


💪 நூலாசிரியர், கவிஞர், பன்மொழிப் புலவர், மொழிபெயர்ப்பாளர் போன்ற பல பரிமாணங்கள் கொண்ட இவர் 1981ஆம் ஆண்டு மறைந்தார்.

No comments:

Post a Comment