*சிந்தனை துளிகள்*
காரணங்களுக்காகவோ
தேவைகளுக்காகவோ
வருவதில்லை ஒருவர் மீதான அன்பு..!
இன்பமோ துன்பமோ
நமக்காக நம்மோடு இறுதிவரை இருப்பார்கள் என்ற
நம்பிக்கையில் வருவதே உண்மையான அன்பாகும்.!வயதாகும் போது கூட,
ஆடம்பர வாழ்க்கை வாழலாம்...ஆனால்,ஆசைப்பட்ட வாழ்க்கையை அந்தந்த வயதில் மட்டுமே வாழ முடியும்.!!
அடுத்த நிமிடம் நிச்சயம் இல்லாத வாழ்க்கை முடிந்தவரை யாரையும் காயப்படுத்தாமல் வாழ கற்றுக் கொள்ளுங்கள்.!!!
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
செய்தி துளிகள்
⛑️⛑️அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு மற்றும் சித்திரை திருநாள் நல்வாழ்த்துக்கள். ⛑️⛑️இடைநிலை ஆசிரியர் SGT பணி நியமனம் செய்வதற்கான போட்டித் தேர்வு முடிவுகள் வெளியானது. ⛑️⛑️விபத்தில் ஒரே பள்ளியே சேர்ந்த இரு ஆசிரியர்கள் உயிரிழப்பு
👉ராசிபுரம் அருகே வெள்ளிக்கிழமை நடந்த விபத்தில் பைக் மீது எதிரே வந்த ஆட்டோ மோதி வெண்ணந்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் விலங்கியல் ஆசிரியர் தனசேகரன் என்பவர் உயிரிழந்தார் .
அவருடன் ஸ்கூட்டரில் வந்த சசிகுமார் என்ற அதே பள்ளியின் மற்றொரு ஆசிரியரும் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவரும் நேற்று உயிரிழந்தார்.
ஏற்கனவே கடந்த ஆண்டு இதே பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் ஜெயபாலன் என்பவர் மக்களவைத் தேர்தல் பணி பயிற்சிக்கு சென்று திரும்பிய போது காளப்பநாயக்கன்பட்டி அருகே உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது"
⛑️⛑️தலைமையாசிரியர் கையேடு - பள்ளி / அலுவலக நடைமுறைகள், விதிகள், அரசாணைகள் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் உள்ளடக்கியது - பள்ளிக் கல்வி இயக்ககம் வெளியீடு.
⛑️⛑️ஆசிரியர்கள் அனைவருக்கும் வணக்கம்
👉வரும் 15.04.2025 ஆம் தேதி முதல் தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் எவ்வாறு TNSED Attendance App-ல் வருகை பதிவு செய்வது என்பதை பார்க்கலாம்
👉12.04.2025 ஆம் தேதி முதல் 1 முதல் 3 ஆம் வகுப்புகளுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு விடுமுறை அளிக்கப்பட்ட மாவட்டங்களில் வருகை பதிவினை எவ்வாறு மேற்கொள்வது என்பதை பார்ப்போம்.
👉முதலில் TNSED Attendance App-ல் பள்ளியின் UDISE Login & Password மூலம் Login செய்யவும்.
👉முதலில் Today Status-ல் என்ற தளத்தில் Partially Working என்று குறிப்பிடவும்
👉அடுத்ததாக காண்பிக்கப்படும் அட்டவணையில் தொடக்கப்பள்ளிகள் 4, 5 வகுப்பிற்கு வேலை நாட்களாகவும் நடுநிலைப் பள்ளிகள் நான்கு முதல் எட்டாம் வகுப்பிற்கு வேலை நாட்களாகவும் குறிக்கவும்.
👉ஒன்று முதல் மூன்று வகுப்புகளுக்கு வருகைப் பதிவு மேற்கொள்ள முடியாது எனவே எதுவும் செய்யாமல் விட்டு விடவும்
👉அடுத்ததாக Reason என்ற தலைப்பில் Others என்று தேர்வு செய்யவும்
👉பிறகு அதனை Save கொடுக்கவும்
👉பிறகு மாணவர்களின் வகுப்பிற்கு சென்று காண்பிக்கப்படும் வகுப்புகளுக்கு மட்டும் வருகை பதிவு செய்யவும்
👉ஆசிரியர் வருகை பொருத்தவரை அனைத்து வகை ஆசிரியரும் பள்ளிக்கு வருகை புரிதல் வேண்டும்
👉பிறகு தூய்மை பணியாளர்கள் வருகை பதிவை வழக்கம் போல் பதிவிடவும்
இவ்வாறு அனைத்து வகை பள்ளிகளும் 15.04.2025 முதல் வருகை பதிவினை மேற்கொள்ளலாம்.
⛑️⛑️சிங்கப்பூர் பள்ளியில் நேரிட்ட தீ விபத்தில் மகன் காயமடைந்து சிகிச்சை பெற்ற நிலையில், தனது மகனுடன் ஐதராபாத் திரும்பினார் - ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண்.
⛑️⛑️விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு விடுமுறை வேண்டும் என கோரிக்கை
தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக பொதுச் செயலாளர் அன்பழகன் வெளியிட்ட அறிக்கை விவரம்:
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்துதல் பணிகள் கடந்த ஏப்ரல் 4ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே கிறிஸ்தவ பண்டிகையான புனித வெள்ளி ஏப்ரல் 18ம் தேதியும், ஈஸ்டர்டே ஏப்ரல் 20ம் தேதியும் கொண்டாடப்படவுள்ளன. இதற்கு இடைபட்ட ஏப்ரல் 19ம் தேதி விடைத்தாள் திருத்துதல் பணி நடைபெறவிருக்கிறது. இதனால் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றும் ஆசிரியர்கள் தங்களின் சொந்த ஊருக்கு சென்று பண்டிகையை கொண்டாட முடியாத சூழல் நிலவுகிறது.
இந்நிலையை உணர்ந்து ஏப்ரல் 19ம் தேதி விடைத்தாள் திருத்துதல் பணிக்கு விடுமுறை அளிக்க வேண்டும். இது ஆசிரியர்கள் தங்களின் குடும்பத்தினருடன் பண்டிகையை சிறந்த முறையில் கொண்டாட உதவும். மேலும், மற்ற ஆசிரியர்களுக்கும் தொடர்ந்து பணிகளுக்கு சிறு ஓய்வு கிடைக்கும். அவை அடுத்து வரும் நாட்களில் ஆசிரியர்கள் புத்துணர்ச்சியுடன் பணிபுரிவதற்கு வழிவகுக்கும். எனவே, ஏப்ரல் 19ம் தேதி சனிக்கிழமை விடைத்தாள் மதிப்பீட்டு முகாமுக்கு விடுமுறை அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
⛑️⛑️சென்னையில் பாமக நிர்வாகிகளுடன் அன்புமணி ராமதாஸ் ஆலோசனை
அக்கரையில் உள்ள அன்புமணி இல்லத்தில் ஆலோசனை நடைபெற்றது.
செஞ்சி சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்எல்ஏ கணேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
⛑️⛑️தைலாபுரம் தோட்டத்தில் பாமக பொதுக்குழுவை கூட்ட நிறுவனர் ராமதாஸ் முடிவு என தகவல்
பாமக தலைவராக தானே தொடர்வதாக அன்புமணி சனிக்கிழமை அறிக்கை வெளியிட்ட நிலையில்
தைலாபுரம் தோட்டத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது- கட்சியின் மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.
⛑️⛑️பாமக தலைவர் ராமதாஸ் உடன் பாமக கெளரவ தலைவர் ஜி.கே.மணி சந்திப்பு
விரைவில் நல்ல முடிவு, நல்ல செய்தி வரும்
ராமதாஸ் - அன்புமணி சேர்ந்து கட்சி மாநாடு, கூட்டங்களை நடத்துவார்கள்
இருவரும் மிக விரைவில் சந்திப்பார்கள் - ஜி.கே.மணி தகவல்
⛑️⛑️நான் கூட்டணி வைப்பதாக இருந்தால் அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் மட்டுமே கூட்டணி வைப்பேன்
சீமான்
⛑️⛑️சமூக நீதி காவலர் பி.பி. மண்டல் நினைவு நாளை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் பதிவு
மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூக இடஒதுக்கீட்டுக்கான பரிந்துரையை வழங்கி சமூக நீதியின் அடையாளமாக திகழ்ந்தவர் மண்டல். பி.பி. மண்டலின் தொலைநோக்கு பார்வையை செயல்படுத்துவதில் உறுதி பூண்டுள்ளோம்” என சமூக நீதி காவலர் பி.பி. மண்டல் நினைவு நாளை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் பதிவிட்டுள்ளார்.
⛑️⛑️பாமக, தேமுதிக கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டணிக்கு
முயற்சி செய்வோம்"
"தவெக தலைவர் விஜய் கட்சி ஆரம்பித்த உடன் மத்திய அரசை விரட்டியடிப்போம் என கூறுவது வேடிக்கையான விஷயம்"
நயினார் நாகேந்தரன் பாஜக தலைவர்
⛑️⛑️"வக்பு சொத்துக்களை விற்கவோ வாங்கவோ கூடாது, அது இறைவனுக்கே சொந்தம்
இந்து மதத்தினரை வக்பு வாரியத்தின் உறுப்பினராக சேர்ப்பது பேராபத்து
இந்து சமய அறநிலைத்துறை சொத்துக்கள் பாதுகாப்பாக இருக்கிறதா?
அவற்றை ஆய்வு செய்ய குழு அமைக்கப்படுமா?
குறிப்பிட்ட மதத்தை தழுவியதால் அவரை குறிவைப்பது சரியானது அல்ல
இஸ்லாமிய நாடுகள் இந்து கோயில்கள், வழிபாடுகளை அனுமதிக்கிறது
இந்தியா போன்ற மதச்சார்பற்ற நாடு இதுபோன்ற நடவடிக்கைகளில்= ஈடுபடுவது நல்லதல்ல"
சீமான்
⛑️⛑️காவல்துறை அதிகாரிகள் தவறு செய்தால் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் இடம் புகார் செய்யலாம் அதற்கான சுற்றறிக்கையை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
⛑️⛑️சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்களின் பெயர்களை பயன்படுத்தி எக்ஸ் தளத்தில் நூதன மோசடி
பொதுமக்கள் உஷாராக இருக்க சைபர் கிரைம்a போலீசார் எச்சரிக்கை.
⛑️⛑️இத்தாலியின் துணைப் பிரதமரும், வெளியுறவு அமைச்சருமான அன்டோனியோ தஜானி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்தார்.
⛑️⛑️⛑️⛑️⛑️⛑️⛑️⛑️⛑️⛑️
🌹🌹முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற 16-ந்தேதி துணைவேந்தர்கள் கூட்டம்
👉தமிழகத்தில் உள்ள பல்கலைகழகங்களுக்கு துணை வேந்தர்களை அரசே நியமிக்க வழிவகை செய்யும் 10 மசோதாக்கள் உள்ளிட்ட சில மசோதாக்களை சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பிய நிலையில் அவற்றுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்கவில்லை. எனவே சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட்டி அதே சட்ட மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி மீண்டும் கவர்னரின் ஒப்புதலுக்காக அவற்றை அரசு அனுப்பி வைத்தது.
மீண்டும் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு சட்டப்படி கவர்னர் ஒப்புதல் அளிக்க வேண்டும். ஆனால் அவர் ஒப்புதல் அளிக்காத நிலையில் தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, சட்டசபையில் 2-வது முறை நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களை ஜனாதிபதிக்கு கவர்னர் அனுப்பியது சட்டவிரோதம் என்றும்,அந்த 10 பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதாக்களுக்கும், சுப்ரீம் கோர்ட்டு சிறப்பு அதிகாரங்கள் வழங்கும் சட்டப்பிரிவு 142-ஐ பயன்படுத்தி ஒப்புதல் அளித்து உத்தரவிட்டது.
சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பு 8-ந் தேதி பிறப்பிக்கப்பட்டு இருந்தாலும்,அதை முழுமையாக வெளியிடுவதில் காலதாமதம் ஏற்பட்டு இருந்தது. இந்த நிலையில் கடந்த (11-ந் தேதி) நள்ளிரவில் சுப்ரீம் கோர்ட்டின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தீர்ப்பு வெளியிடப்பட்டது.
இணைதளத்தில் தீர்ப்பு வெளியான சில மணி நேரத்தில் தமிழ்நாடு அரசிதழில் தமிழக அரசின் அனைத்து திருத்த சட்ட மசோதாக்களும் வெளியிடப்பட்டன. அவை 2 அரசிதழ்களாக 11-ந் தேதியிட்டு வெளியிடப்பட்டு இருந்தன. பொதுவாக அரசாணை என்றாலும்,அரசிதழ் என்றாலும் அவை கவர்னர் அல்லது ஜனாதிபதியின் ஒப்புதலுடன்தான் வெளியாகும். அதற்கான வாசகங்கள் அதில் இடம்பெற்றிருக்கும்.
ஆனால், சட்ட மசோதாக்களுக்கு சுப்ரீம் கோர்ட்டின் ஒப்புதல் ஏற்கனவே கிடைத்துவிட்டதால் வெளியான அதற்கான அரசிதழ்களை, ஜனாதிபதி அல்லது கவர்னரின் ஒப்புதல் இல்லாமல், சட்டத்துறை செயலாளர் ஜார்ஜ் அலெக்சாண்டர் வெளியிட்டுள்ளார்.
இதன் மூலம் பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை அரசே நியமிக்கும் திருத்த சட்டம் அமலுக்கு வந்துவிட்டது. இனி அந்த பல்கலைக்கழகங்களின் சட்டங்களில் அரசு கூறிய திருத்தங்கள் ஏற்றப்பட்டுவிடுகிறது. அதன்படி, வேந்தர் என்ற இடத்தில் தமிழக அரசு என்ற வாசகம் இடம் பெற்றுவிடுகிறது. எனவே வேந்தராக இருந்த கவர்னரின் அனைத்து அதிகாரங்களும் தமிழக அரசு வசம் சென்றுவிட்டன.
இதனால் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் அரசின் அதிகார வரம்புக்குள் வந்துவிடுவதோடு, துணை வேந்தர் நியமனத்தில் கவர்னரின் தலையீடு இல்லாமல் போய்விட்டது. இந்த நியமனம் தொடர்பான வரம்புகளை இனி அரசே வகுத்துக்கொள்ளவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற 16-ந்தேதி பல்கலைக்கழக துணைவேந்தர்கள், பதிவாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment