Monday, April 14, 2025

சித்திரையை புத்தாண்டு தினமாக கொண்டாட வேண்டும்.

 *உலகம் ஏன் சித்திரையை புத்தாண்டு தினமாக கொண்டாட வேண்டும்?*

உலகம் இரு துருவ கணித அடிப்படையில் இயங்கி வருகிறது ஒன்று சௌரமானம் இரண்டாவது சந்திர மானம்

 சூரியனை மையமாகக் கொண்டது சௌரமானம் 

சூரியனின் சஞ்சாரத்தை வைத்து கணக்கிடப்படுவதை

சௌரமானம் என்பார்கள்.

 

சௌரமானம் என்பது சூரியகதியைக்கொண்டு காலம் கணிக்கும் முறை.


சௌரம் என்றால் சூரியன் என்று பொருள்.

"சௌ"எனில் நகர். பேரொளி, நகருதல், எனப் பொருளுண்டு.


சௌக் சௌக்குன்னு நடக்கிறான்.

சௌக்பிள்ளை

சவலப்பிள்ளையாயிற்று. ஓரெழுத்து ஒரு மொழிச் சொல் 


சௌரம் 

பஞ்சாங்களில் சூரியனின் சஞ்சாரத்தை வைத்துக் கணக்கிடுவதை சௌரமானம் என்றும், சந்திரனின் நிலையை வைத்துக் கணக்கிடுவதை சாந்திரமானம் என்று கூறுவார்கள்.


 காலக் கணிப்பில் சந்திரனுடைய இயக்கத்தை அடிப்படையாக வைத்துக் காலத்தைக் கணிக்கும் முறை சந்திரமானம் எனப்படும்.

சூரியன் சந்திரன் மற்றும் கோள்கள் இவை அனைத்தும் கீழ் வானில் தோன்றுகின்றன பூமியிலிருந்து பார்க்கும் போது கீழ் வானில் வருவதால் அதற்குப் பெயர் வருகை வருடை வருடமாகும். அவை நிகழும் நேரம் ஒன்னேகால் நாழிகையாகும்.

வரு

 "வ"யெனின் கால்

ரு எனில் ஐந்து.

 

1/4×5=5/4=1 1/4 நாழிகையாகும்.

சௌரம் மானத்தில் பன்னிரு நிலையையடைகிறது.



கீழ் வானத்தில்

 பூமி தட்டும் வான தட்டும் 

 சந்திக்கும் இடத்தில் அதிகாலைப் பொழுதில் சூரியன் வானத்தின் மேல் எலும்பும் நிலை 

 மேழம் எனப்படும்.

ழ என்ற தமிழ் எழுத்துக்கு கோடி என பொருளுண்டு.

 கண் விட்டதிலிருந்து கோடி மைலுக்கு அப்பால் நடக்கும் விந்தையாகும்.

 இதன் உருவகம் இளம் ஆடுதலை துள்ளி எழுவதைப் போன்று இருக்கும். சூரியன் மேல் எழுவது ரெண்டரை நாழிகை நடக்கும்.


 பூமியிலிருந்து வானத்திற்குச் செல்லும் நிலை விடையாகும். பூமி பள்ளத்திலிருந்து விடு படுவது விடையாகும். இதன் உருவகம் மயிலை காளை போன்று இருக்கும். இதுவும் ரெண்டரை நாழிகை நடக்கும்.


 மானத்தில் சூரிய தட்டும் சூரிய ஒளி தட்டும் ஒன்றாக நடனமாடுவது போல் தோன்றும் நிலை ஆடவை என்பதாகும்

 இதன் உருவகம் இரட்டை பெண்ணாகும் இதுவும் ரெண்டரை நாழிகை நடக்கும்.


 சூரியத் தட்டு அடுத்து வானத்தில் ஒரே சீராக கடக்கும். கண் விட்டத்திலிருந்து பார்க்கும் போது ஒரு நண்டு நகர்வது போன்று சூரிய உருவகம் இருக்கும். இதுவும் ரெண்டரை நாழிகை நடக்கும்.


 மானத்தில் சூரிய தட்டு மடங்கிய நிலையில் பேரொளியை பூமியில் படர விடும். அந்த நிலைக்குப் பெயர் மடங்கல் என்பதாகும்.

 இதுவும் ரெண்டரை நாழிகை நடக்கும். சூரியத் தட்டு ஒரு சிங்க முகமாக உருவக காட்சியளிக்கும்.


 சூரிய தட்டு கீழ்வானில் பேரொளி கம்மியாகவும், மேல் தென் வடல் மூன்று பக்கமாகவும் பேரொளி அதிகமாகும். இந்த நிலை ஙன்னி நிலையாகும். சூரிய தட்டு பெண் உருவக காட்சியளிக்கும். இதுவும் ரெண்டரை நாழிகை நடக்கும்.


 சூரிய தட்டு மானத்தில் மேல் வானத்தை துலைப்பது போன்று தெரியும். உருவகத்தில் தராசு ஆடுவது போன்று தெரியும். இதுவும் ரெண்டரை நாழிகை நடக்கும்.


 சூரிய தட்டு தனது பேரொளியை மேல் வானத்தில் அதிகமாகவும் இருக்கும் வானத்தில் குறைவாகவும் பேரொளியை படர செய்வது

நளியாகும். சூரிய தட்டின் உருவகம் தேள் போன்று இருக்கும். இதுவும் இரண்டரை  நாழிகை நடக்கும்.


 சூரிய தட்டானது அதன் பேரொளியை தனக்குள்ளே அடக்கி சிலை போல் அசையாது வைப்பது போன்ற நிலையாகும். சூரியத்தட்டு அம்பு இல்லா வில் போன்று போன்று இருக்கும். இதுவும் ரெண்டரை நாழிகை நடக்கும்.


 கீழ் வானம் சுடாது இருண்டும், மேல் வானம் சூட்டு எரித்து தன் பேரொளியை வெளியிடும் சூரியன் உருவகத்தில் சுறவம் போன்று இருக்கும். இதுவும் ரெண்டரை நாழிகை நடக்கும்.


 மானத்தில் சூரிய தட்டு மேல் வானத்தில் தன் பேரொளியை அதிகமாகவும் கீழ் வானில் பேரொளியை குறைத்தும் உருவகத்தில் குடம் போன்று இருக்கும் நிலையாகும். இதுவும் ரெண்டரை நாழிகை நடக்கும்.


 பூமி தட்டும் சூரிய தட்டும் கண் விட்டத்தில் இருந்து மறையும் சூரிய தட்டானது உருவத்தில் மீன் கடலில் அடி ஆழத்தில் செல்வதுசெல்வது போன்ற நிலையாகும். இதுவும் ரெண்டரை நாழிகை நடக்கும்.


 ஆக சூரிய தட்டானது முப்பது நாழிகையில் பன்னிரு விதமான உருவகத்தில் காட்சியளிக்கும்.


 சூரிய கணக்கு முடிந்து 

 சந்திரமான கணக்கு

 முப்பது நாழிகை நடக்கும்.


 சந்திரனும் பன்னிரு உருவகத்தில் காட்சியளிக்கும்.

 தேய்பிறை வளர்பிறை என இரண்டு நிலைகளில் கணக்கீடு உண்டு.


 கீழ் வானில் தோன்றும் நிலவு பூமி விட்டத்திலிருந்து மேல் எழும்பி மேல் மானத்திற்கு வரும். இதன் உருவகம் செம்மறி ஆடு துள்ளி குதிப்பது போன்று இருக்கும்.

 வளர்பிறை மேடம்

 தேய்பிறை மேசம் 

 இதுவும் ரெண்டரை நாழிகை நடக்கும்.


 மானத்தில் சந்திர தட்டானது பேரொளியை பூமியில் படர செய்யும் உருவகமானது 

 வளர்பிறையில்

எருதுவாகவும்.

 தேய்பிறையில் ரிசபமாகவும் காட்சியளிக்கும்.

 இதுவும் ரெண்டரை நாழிகை நடக்கும்.


 சந்திரனின் ஒளியும் சந்திரனின் தட்டும் ஒருங்கிணைந்து ஆடுவது போல் தோன்றும் நிலை உருவத்தில் இரட்டை பெண் ஆடுவது போன்று இருக்கும்.

 வளர்பிறையில் மிது ஏனமாகவும் 

 தேய்பிறையில் மிதுனமாகவும் காட்சியளிக்கும்.

 இதுவும் இரண்டரை நாழிகை நடக்கும்.


 மானத்தில் சந்திரன் தட்டு தன் பேரொளியை வட தென் கீழ் மேல் பாகங்களில் சீராக பூமியில் படர விடுவது ஒரு நண்டு போன்று இருளில் காட்சியளிக்கும்.

 வளர்பிறை தேய்பிறை கடகமாகும்.

 இதுவும் ரெண்டரை நாழிகை நடக்கும்.


 மானத்தில் நிலவு தட்டு தன் பேரொளியை பூமியில் செம்மையாக படர விடுவது 

 உருவகத்தில் வளர்பிறையில் சிங்கமாகவும் தேய்பிறையில் சிம்மமாகவும் காட்சியளிக்கும். இதுவும் ரெண்டரை நாழிகை நடக்கும்.


 மானத்தில் சந்திரன் தட்டானது தன் பேரொளியை பூமியில் படர விடுவது சிவந்த மேனியை போல் உள்ள ஒரு பெண்ணின் உருவமாக காட்சியளிக்கும். தேய்பிறையும் வளர்பிறையும் கன்னியாகும். இதுவும் ரெண்டரை நாழிகை நடக்கும்.


 மானத்தில் சந்திரன் தட்டு தன் பேரொளியை பூமியில் படர விடுவது துலாக் கோல் சமநிலையில் இருப்பது போன்று காட்சியளிக்கும்.

 வளர்பிறை தேய்பிறை துலா அளவு ஆகும் இதுவும் ரெண்டரை நாழிகை நடக்கும்.

மானத்தில் சந்திரன் தட்டு கீழ்வானத்தில் குறைந்தும், மேல் தென் மடல் விரிந்தும் பூமியில் பேரொளி படர விடும் நிலைக்கு, உருவகத்தில்

 வளர்பிறை தேய்பிறையில் விருச்சிகமாகும்.

 இதுவும் ரெண்டரை நாழிகை நடக்கும்.


 மானத்தில் நிலவு தட்டு தன் பேரொளியை பூமியில் படர விடும்போது தனுர்கொடிடி போன்று காட்சியளிக்கும்.

 உருவகத்தில்  வளர்பிறை தேய்பிறையில்

 தனுசாக இருக்கும்.

 இதுவும் ரெண்டரை நாழிகை நடக்கும்.


 மானத்தில் நிலவு தட்டு தன் பேரொளியை மகரயாழ் போன்றும், சுறா மீன் போன்றும்

 உருவகத்தில் வளர்பிறை தேய்பிறையில் பூமியில்  படர விட்டு காட்சியளிக்கும்.

 இதுவும் ரெண்டரை நாழிகை நடக்கும்.


 மானத்தில் நிலவு தட்டு தன் பேரொளியை வளர்பிறை தேய்பிறையில் உருவத்தில் குடம் போல் வைத்து, பூமியில் நிழலை படர செய்வது கும்பமாக காட்சியளிக்கும்.

 இதுவும் ரெண்டரை  நாழிகை நடக்கும்.


 மானத்தில் நிலவு தட்டு தன் பேரொளியை  கீழ் வானத்தில் முழுமையாக குறைந்தும், மேல் வானத்தில் அதிகமாகவும், உருவகத்தில் வளர்பிறை தேய்பிறையில் மீனாக காட்சியளிக்கும், இதுவும் ரெண்டரை நாழிகை நடக்கும்.


  மானத்தில் சந்திரன் முப்பது நாழிகை தன் பேரொளியை பூமியில் படரச்செய்யும்.



 சௌரமானம் முப்பது நாழிகை

 சந்திர மானம் முப்பது நாழிகை

 ஆக தொகை அறுபது நாழிகையாகும். 


 புவிமானம்


 பூமித்தட்டு சூரியனின் பேரொளியினாலும், சந்திரனின் பேரொளினாலும் இயங்கிக் கொண்டுள்ளது,

 சூரியன் விடிவதுமில்லை, உதயமாவதுமில்லை, மறைவதுமில்லை, அதைப்போல 

 நிலவு தோன்றுவதுமில்லை, வளர்வதுமில்லை,தேய்வதுமில்லை, மறைவதுமில்லை,


 சூரியன் எங்கோ ஒரு இடத்தில் பூமியில் விடிந்து கொண்டும், மறைந்து கொண்டும், உதயமாகிக் கொண்டும் இருக்கிறது.


 சந்திரனும் பூமியில் தோன்றிக் கொண்டும், வளர்ந்து கொண்டும், தேய்ந்து கொண்டும், மறைந்து கொண்டும் இருக்கிறது.


 பூமியில் இருந்து கொண்டு நாம் சந்திரனையும் சூரியனையும் பார்த்துக்கொண்டே இருக்கின்றோம். 


சந்திரனின் பேரொளியினாலும், சூரியனின் பேரொளியினாலும் பூமி சுழன்று கொண்டு இருக்கின்றது.


 சூரிய சந்திர பேரொளி பன்னிரு நிலையில் இயங்குகிறது.


 சூரியனின் பேரொளியும் சந்திரனின் பேரொளியும் ஒரே சீராக பறந்து செல்லும் மாதம் சித்திரை எனப்படும்.

 சி என்றால் பகல் ( ஓரெழுத்து ஒரு மொழிச்சொல்)

 தி என்றால் இருளொளி 

 பகலொளி இரவொளி சரி சரமமாக பூமியை அடைத்து பறந்துகொண்டே செல்லும் மாதமாகும்.


 பகலில் சந்திரவொளியும், இரவில்

சூரியவொளியும்

 மிகுந்தும், குறைந்தும் பூமியில் பறந்து செல்லும் மாதம் வைகாசியாகும். 


 பூமித்தட்டில் நில வொளி குறைந்தும், சூரியவொளி குறைந்தும், இரண்டு ஒளிகளும் ஒன்று சேராது இரு நிழல்களும் பறந்து செல்லும்  மாதம் ஆனி மாதமாகும்.


 பூமித்தட்டில் நிலவொளி கூடியும், சூரிய ஒளி குறைந்தும் பறந்து செல்லும் மாதம் ஆடி மாதமாகும்.


 பூமித்தட்டில் சூரிய ஒளி மிகுந்தும் சந்திர ஒளி கால் பாகம் குறைந்தும் இரு ஒளிகளும் பறந்து செல்லும் மாதம் ஆவணி மாதமாகும்.


 பூமித்தட்டில் 

 சந்திரவொளி அங்குமிங்கும் அலைந்தும், சூரியவொளி சீராகவும், இவ்விரு ஒளிகளும் பறந்து செல்லும்  மாதம் புரட்டாசி மாதமாகும்.


 பூமித்தட்டில் சந்திரவொளி

 திறள் திரளாக குவிந்தும், சூரிய ஒளி இரண்டு காணி அல்லது வீசமளவு குழிந்தும்,இரு ஒளிகளும் பறந்து செல்லும் மாதம் ஐப்பசி மாதமாகும்.


 பூமித்தட்டில் 

 சந்திரவொளி இட வல மேலாகவும், சூரியவொளி இட வல கீழாகவும், ஆக இரு பேரொளிகளும் பறந்து செல்லும் மாதம் கார்த்திகை மாதம் ஆகும்.


 பூமித்தட்டில் 

 சந்திரவொளியும் மங்கி குறைந்தும், சூரிய ஒளி மங்கி குறைந்தும்

 ஆக இரு பேரொளிகளும்

 பறந்து செல்லும் மாதம் மார்கழி மாதமாகும்.


 பூமித்தட்டில் 

 சந்திரனின் பேரொளியும், சூரியனின் பேரொளியும் ஒன்றுக்கொன்று புனலாடி, இரு பேரொளிகளும் பறந்து செல்லும் மாதம் தை மாதமாகும்.


 பூமி தட்டில் 

 சந்திரவொளி பருத்தும் சூரிய ஒளி பெருத்தும்

 ஆக இரு பேரொளிகளும் பறந்து செல்லும் மாதம் மாசி மாதமாகும்.


 பூமித்தட்டில் 

 சந்திர ஒளியும் சூரிய ஒளியும் கவுந்து, கலந்து இரு பேரொளிகளும்  பறந்து செல்லும் மாதம் பங்குனி மாதம் ஆகும்.


 பூமித்தட்டில் பன்னிரு நிலையும், ஐந்து நாழிகை வீதம், அறுபது நாழிகை நடக்கும்.


 சாந்திர மானம் சௌர மானம்

பூமி மானம்

 இவை அறிந்தோருக்கு,

 புது வருடம் எது?

 புத்தாண்டு எது?

 என்பது புரிந்துவிடும்.


 பகலுக்கு இளவேனில் காலம் எனில் 

 இரவுக்கு வசந்திர காலமாகும்.


 பகலுக்கு முதுவேனில் காலம் எனில்

 இரவுக்கு கிருட்ணகாலமாகும். 

 பகலுக்கு கூதிர் காலம் எனில் இரவுக்கு

வர்ச காலமாகும்.


 பகலுக்கு கார்காலம் எனில் இரவுக்கு

 சரத்து காலமாகும்.


 பகலுக்கு முன் பனிக்காலம் எனில் இரவுக்கு

 காம காலமாகும்.

 பகலுக்கு பின்பனி காலம் எனில் இரவுக்கு  சிசிர காலமாகும். 


 தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment