🌹ஏதோ ஒன்றின் மீது வைக்கப்பட்ட முழுமையான நம்பிக்கை உடைபடும் போது தான்.!
இனி எதுவுமே தேவையில்லை
என்ற நிலைக்கு வந்து விடுகிறது மனம்.!
🌹🌹இறுதியில் நமக்கு உதவியாக இருப்பார்கள் என்று யாரையும் நம்பி விடாதீர்கள்.!
ஏனெனில்,இங்கு மனிதனின் மனம் ஒரு நிலையில் இருக்காது என்பதை ஒருபோதும் மறந்து விடாதீர்கள்.!
🌹🌹🌹தன்னுடைய தவறுகளை உணர்ந்தவர்கள் திருந்தி விடுவார்கள்.!
தன்னுடைய தவறுகளை நியாயப்படுத்தியவர்கள் திருந்தவே மாட்டார்கள்.!
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
*செய்தி துளிகள்*
📕📘உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் வழக்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு
இன்று (21.04.2025) மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.📕📘தமிழ்வழி இட ஒதுக்கீடு.
👉தமிழக அரசின் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.
📕📘ஏப்ரல் 24 ஆம் தேதி சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ள பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை உரையை திருவாரூர் மாவட்டம் திருக்குவளையில் உள்ள கலைஞர் படித்த பள்ளியிலிருந்து எழுதத் தொடங்கினார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்" 📕📘ஆராய்ச்சி ஊக்குவிப்பு நிதியுதவி திட்டம்; மாணவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம்: அறிவியல் தொழில்நுட்ப மன்றம் அறிவிப்பு.
📕📘என் வாழ்க்கையே உங்க கையிலதான் இருக்கு.
"தயவுசெய்து என்னை பாஸ் ஆக்கிவிடுங்கள், இல்லையென்றால் என் காதலி என்னை விட்டு சென்று விடுவாள்".
கர்நாடகாவில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களுடன் 500 ரூபாயை இணைத்து வைத்து, ஆசிரியர்களிடம் வேண்டுகோள் வைத்த மாணவன்.
📕📘SSLC - 2025 மதிப்பீட்டு மையப் பணிகளுக்கான கையேடு வெளியீடு.
📕📘முதுகலை ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி - SCERT இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு.
📕📘JEE - 2ஆம் கட்ட முதன்மை தேர்வு முடிவுகள் நேற்று வெளியீடு. 📕📘NMMS தேர்வில் நல்ல தேர்ச்சி - மகாபலிபுரம் கடற்கரை சுற்றுலா வளாகத்தில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டியவர்கள் விவரம் - இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு.
📕📘சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் மாற்றம்: கட்டாயமாகிறது
👉சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், வரும், 2025 -- 26ம் கல்வியாண்டு முதல், ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அமலுக்கு வருவதாக, மத்திய இடைநிலை கல்வி வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து, சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு அதிகாரப்பூர்வமாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
புதிய பாடத்திட்டமானது, பாடத்தேர்வுகள், பரிந்துரைக்கப்பட்ட கற்பித்தல் நடைமுறைகள் மற்றும் மதிப்பீட்டு முறைகள் போன்றவற்றின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த மாற்றங்கள், தேசிய கல்விக்கொள்கை பரிந்துரைகளை பின்பற்றி, மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
புதிய பாடத்திட்டத்தில், மாணவர்கள், 8ம் வகுப்பு வரை மூன்று மொழிகளை கற்றிருக்க வேண்டும். இதில், ஆங்கிலம், ஹிந்தி போன்ற, 38 மொழிகள் இடம் பெற வேண்டும்.
மூன்றாவது மொழியில், 8ம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்கள், 9ம் வகுப்பில் அதே மொழியை தொடர்ந்து படித்து தேர்ச்சி பெறலாம். 9ம் வகுப்பிலும் தேர்ச்சி பெறவில்லை என்றால், 10ம் வகுப்பில் மேலும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும். எனினும், மூன்றாவது மொழியில் தேர்ச்சி பெறாதவர்கள், 10ம் வகுப்பு இறுதித் தேர்வுக்கு அனுமதி பெற முடியாது என்று, தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்பது மற்றும், 10ம் வகுப்புகளில், ஆங்கிலம் அல்லது ஹிந்தி ஆகிய மொழிகளில் குறைந்தது ஒன்று கட்டாயமாக தேர்வு செய்யப்பட வேண்டும். மாணவர்கள் விருப்பப்பட்டால், இரண்டு மொழிகளையும் தேர்வு செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது.
🌹👉கண்காணிப்பு தீவிரம்
👉கல்வியாளர் அஸ்வின் கூறுகையில், “2023 முதல் மூன்று மொழிகளை, 8ம் வகுப்பு வரை படிக்க வேண்டும் என்ற கட்டாயம் இருந்தாலும், கடந்த ஆண்டு வரை தமிழகத்தில் சில சி.பி.எஸ்.இ., பள்ளிகள், இதை முழுமையாக பின்பற்றவில்லை. தற்போது இந்த நடைமுறையை கண்காணிக்க, கல்வி வாரியம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் மூலம், அனைத்து மாணவர்களும் மூன்று மொழிகளையும், கட்டாயம் கற்றுக்கொள்ளும் சூழல் உருவாகியுள்ளது,” என்றார். 📕📘மாதம் ரூ.10,000 ஊக்கத் தொகையுடன் சி.ஏ., படிக்கலாம்
சி.ஏ., படிப்பை பார்த்து, மாணவர்கள் சிலர் பின்வாங்குகின்றனர். முதலில் மாணவர்கள் உங்களின் விருப்பத்தை தேர்வு செய்து, அதில் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக வணிகம் செய்வதில், ஆர்வம் இருக்க வேண்டும். மருத்துவம், பொறியியல் என, எந்த பிரிவுகளில் நீங்கள் படித்திருந்தாலும், சி.ஏ., படிக்கலாம்.
பத்தாம் வகுப்பு படித்த பின், இந்த படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். ஆங்கிலத்தில் தான் தேர்வு எழுத வேணடும். டில்லியை தலைமையாக கொண்டு, இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டர்டு அக்கவுன்ட்ஸ் ஆப் இந்தியா செயல்படுகிறது. பிளஸ் 2 படித்த பின், பவுண்டேஷன் எனப்படும் நுழைவு தேர்வு எழுத வேண்டும். மொத்தமுள்ள நான்கு தாளில், தலா 50 சதவீதம் மதிப்பெண் எடுக்க வேண்டும்.
இதையடுத்து, இன்டர்மீடியேட் தேர்வில் ஆறு தாள்களுக்கு தேர்வு நடக்கும். இதில் தேர்ச்சி பெற்ற பின், இரண்டு ஆண்டுகளுக்கு, பட்டய கணக்காளரிடம் தொழில் பயிற்சி எடுக்க வேண்டும். கணக்கை பார்ப்பது, வரி விதிப்பு, பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு, நாட்டின் பொருளாதார நிலை மற்றும் அது சார்ந்துள்ள புதிய தொழில்நுட்பம் குறித்து கற்றுக் கொள்ள வேண்டும்.
இந்த காலத்தில், ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம், 10,000 ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படும். சி.ஏ., இறுதி தேர்வில் தேர்வு பெற்ற உடனே, பணிக்கு செல்ல முடியும். சி.ஏ., படிப்பு முடிக்க, மொத்தம், 75,000 ரூபாய் வரை தான் செலவாகும்.
தணிக்கையாளர்களுக்கான தேவை அதிகமாக இருந்து வருகிறது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. பணிக்கு சேரும்போது, முதல் மாதத்திலேயே, 60,000 ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்க முடியும்.
-ஆடிட்டர் ராஜேந்திரகுமார், இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டர்டு அக்கவுன்ட்ஸ் ஆப் இந்தியாவின் மத்திய குழு உறுப்பினர்
📕📘மதிமுக முதன்மைச் செயலர் பதவியை ராஜினாமா செய்யும் அறிவிப்பை வாபஸ் பெற்றார் துரை வைகோ
📕📘மதிமுக நிர்வாக குழு கூட்டத்தில் துரை வைகோவிடம் மன்னிப்பு கேட்ட மல்லை சத்யா
கட்சிவிரோத நடவடிக்கையில் ஈடுபடவில்லை என மல்லை சத்யா விளக்கம்
மதிமுகவிற்கு எதிரான நபர்களுடன் தொடர்பில் இருப்பதாக மல்லை சத்யா மீது துரை வைகோ குற்றம்சாட்டியிருந்தார்
உங்கள் மனதை காயப்படுத்தும் வகையில், என் நடவடிக்கை இருந்திருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் - மல்லை சத்யா
இருவரையும் கட்டிப்பிடிக்க வைத்து சமாதானப்படுத்திய வைகோ
📕📘சத்யாவையும் கட்சியை விட்டு செல்ல அனுமதிக்க மாட்டேன் - வைகோ
துரை வைகோ, மல்லை சத்யா இருவரும் பழைய நிகழ்வுகளை மறந்துவிட்டு இணைந்து பணியாற்ற வைகோ அறிவுறுத்தல்
மதிமுக நிர்வாக குழு கூட்டத்தில் நிர்வாகிகள் வலியுறுத்தியதை தொடர்ந்து ராஜினாமா முடிவு வாபஸ்
கட்சிக்காக ஒன்றிணைந்து பணியாற்றுவோம் என துரை வைகோ, மல்லை சத்யா அறிவிப்பு 📕📘தொகுதி மறுவரையறை - முதலமைச்சர் விளக்கம்.
மக்களவைத் தொகுதி மறுவரையறையை தள்ளிப்போட சொல்கிறோமே தவிர, நடைமுறைப்படுத்த வேண்டாம் என்று கூறவில்லை.
மக்கள் தொகையை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியதற்காக, அதன் பெயரிலேயே தொகுதிகள் பறிபோவதை ஏற்க முடியாது என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்.
📕📘சிங்கம் , புலியை தத்தெடுத்த சிவகார்த்திகேயன்
வண்டலூர் உயிரியல் பூங்காவிலுள்ள ஒரு சிங்கம் மற்றும் புலியை மூன்று மாதங்களுக்கு தத்தெடுத்தார் நடிகர் சிவகார்த்திகேயன்
📕📘இந்திய பிரதமர் மோடியுடன் பேசினேன்.
அவருடன் பேசியது பெருமையாக இருக்கிறது
-எலான் மஸ்க்
📕📘இந்தியா செல்ல மாட்டோம்: பாக். கிரிக்கெட் வாரியம்
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட பாகிஸ்தான் அணி இந்தியாவுக்குச் செல்லாது என பிசிபி தலைவர் மொஹ்சின் நக்வி தெரிவித்துள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி, பாகிஸ்தானுக்கு வராமல் துபாய் மைதானத்தில் விளையாடியது போலவே, தாங்களும் செய்வோம் என அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
இந்தாண்டு இந்தியா நடத்தும் மகளிர் உலகக் கோப்பை செப். 29 தொடங்கி அக். 26 வரை நடைபெற உள்ளது.
📕📘திமுக கூட்டணி வலுவாக இருப்பதால்தான் தமிழ்நாட்டில் மதவாத சக்திகள் காலூன்ற முடியவில்லை.
தமிழ்நாட்டில் வலுவான கூட்டணியை வழிநடத்துவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தேன்”
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பிறகு
மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி
📕📘தற்காலிக போர் நிறுத்தத்தை மீறி ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்துவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றஞ்சாட்டியுள்ளார்.
எல்லை நகரங்களான குர்ச்க், பெல்கொரெட் போன்ற மாகாணங்களில் ரஷிய படைகள் தாக்குதல் நடத்தி வருவதாக ஜெலன்ஸ்கி குற்றஞ்சாட்டியுள்ளார்.
📕📘நடந்து சென்று ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்
சுமார் 8 கி.மீ. நடந்து சென்று ஆய்வு
செய்த திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்
400 ஆண்டுகள் பழமையான வெள்ளக்கவி கிராமத்திற்கு அடிப்படை வசதி ஏற்படுத்தி
கொடுப்பது குறித்து ஆய்வு
📕📘ஐரோப்பியன் கார் பந்தயத்தில் விபத்தில் சிக்கிய நடிகர் அஜித்குமார்.
நல்வாய்ப்பாய் காயம் எதுவும் ஏற்படாமல் தப்பினார்.
📕📘வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் திடீர் உயிரிழப்பு
கோவை வெள்ளியங்கிரி மலையில் மேலும் ஒரு பக்தர் உயிரிழப்பு
தூத்துக்குடியை சேர்ந்த புவனேஷ் என்ற இளைஞர் 7வது மலையில் ஏறும் போது கீழே விழுந்து உயிரிழப்பு
மலையில் உயிரிழந்த இளைஞர் உடலை டோலி கட்டி மீட்ட வனத்துறையினர்
📕📘தமிழகத்தில் ”ட்ரெக்கிங் திட்டம்” நேற்று முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது; தற்போது 40 வழித்தடங்களில் 23 வழித்தடங்கள் பொதுமக்களுக்கு திறக்கப்பட்டுள்ளன. காட்டுத்தீ பரவல் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த இத்திட்டம் தற்போது மீண்டும் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.
📕📘அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக எஸ்.டி.பி.ஐ கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பாஜகவுடன் கூட்டணி வைத்த எந்த கட்சியுடனும் தாங்கள் கூட்டணி வைக்க முடியாது என்பதால் இம்முடிவை தாங்கள் எடுத்துள்ளதாக எஸ்.டி.பி.ஐ பொதுச்செயலாளர் அபூபக்கர் சித்திக் தெரிவித்துள்ளார்.
📕📘இளைஞர் எழுச்சி மாநாடு - அன்புமணி அழைப்பு
மே 11ல் சித்திரை முழு நிலவு இளைஞர் எழுச்சி மாநாடு
வீடு வீடாக சென்று அழைப்பிதழ் வழங்குகிறார்
பா.ம.க தலைவர் அன்புமணி
குடும்பத்துடன் மாநாட்டில் பங்கேற்க வருமாறு அன்புமணி அழைப்பு, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநாட்டில் வலியுறுத்தப்பட உள்ளது.
📕📘சென்னை ஆலந்தூர் அருகே நடிகர் பாபி சிம்ஹாவின் கார் மோதி விபத்து ஏற்பட்டதில், பெண் ஒருவர் உள்பட 3 பேர் காயம் அடைந்துள்ளனர். அதேபோல இந்த கார் விபத்து காரணமாக, பின்னால் வந்த 6க்கும் மேற்பட்ட வாகனங்கள் அடுத்தடுத்து மோதி சேதம் அடைந்துள்ளன.
📕📘சென்னையில் ஜூன் மாதம் முதல் 100 மின்சார பேருந்துகளை இயக்கப்படவுள்ளன. வியாசர்பாடி, பெரும்பாக்கம், பல்லவன் இல்லம், தண்டையார்பேட்டை, பூந்தமல்லி ஆகிய பணிமனைகளிலிருந்து பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான கட்டமைப்புகளை அமைக்கும் பணி முழுவீச்சல் நடைபெற்று வருகிறது.
📕📘பெண் குழந்தைகளின் நலனுக்காக மத்திய அரசு செல்வமகள் சேமிப்புத் திட்டத்தை செயல்படுத்தி வரும் நிலையில், கடந்த மார்ச் 31 வரை சென்னை மண்டலத்தில் ரூ.9,234 கோடி வைப்புத் தொகையுடன் 10.44 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண் குழந்தைகளுக்கு கணக்கு தொடங்கப்பட்டுள்ளதாக தகவல்.
No comments:
Post a Comment