*தினம் ஒரு மூலிகை (அ) சிறுபிள்ளை பொங்கல்பூ.*
பூலாப்பூ என்று அழைப்பார்கள் பொங்கல் போன்ற விழா நாட்களில் காப்பு கட்டவும் தோரணம் கட்டவும் இதை பயன்படுத்துகிறார்கள் இதன் நோக்கம் ஆபத்தான நேரங்களில் நம்மை பாதுகாக்கும் நாம்
வெளியில் மருந்து தேடி அலையக்கூடாது என்பதற்காக இதன் வேர் இலை பூ அனைத்து பாகங்களும் மருத்துவ குணம் நிறைந்தது சங்க இலக்கியங்களில் பொண்ணுக்கு ஒன்பது வகை மலர்களில் சிறு கண் பீளை பூவும் ஒன்று நம் உடலின் கழிவு பொருட்கள் வெளியேற்றும் சிறுநீரகம் சார்ந்த பிரச்சனைகளுக்கு அருமருந்தாகிறது சிறுநீர் கற்களை கரைக்க கூடியது மேலும் மாதவிடாய் பிரச்சனைகளை போக்கக்கூடியது ஒரு லிட்டர் நீரில் 50 கிராம் சிறு விலை தாவரத்தை போட்டு கால் லிட்டர் ஆக்கி காலை மாலை 50 மில்லி குடித்து வந்தால் சிறுநீர் கல் கரைந்து விடும் சிறுநீரக வீக்கம் குறையும் கற்களால் ஏற்படும் வலியை போக்கும் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படக்கூடிய எரிச்சல் ரத்தம் போவதை சரி செய்யும் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் செடியின் வேர் பாம்பு கடி மற்றும் வெறிநாய்க்கடிகளுக்கு மருந்தாக பயன்படுகிறது நன்றி
No comments:
Post a Comment